Published:Updated:

ஹரியானா: காரில் ஏற மறுத்த இளம்பெண்... பட்டப்பகலில் சுட்டுக் கொன்ற இளைஞர்! - என்ன நடந்தது?

ஹரியானா கொலை
ஹரியானா கொலை

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் நேற்று (அக். 26) தனியார் கல்லூரி வளாகம் முன்பாக 21 வயது இளம்பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

றாபத்திரிகையாளர் ராஜ் சேகர் ஜா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஹரியானாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகளைப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், காரிலிருந்து வெளியில் இறங்கிய இளைஞர் ஒருவர் துப்பாக்கியை எடுத்துக் காட்டி இளம்பெண்ணின் கைகளைப் பிடித்து இழுக்கிறார். அந்த இளைஞரின் கையில் பிடிபடாமல் தப்பிக்க முயல்கிறார் அந்த இளம்பெண்.

அப்போது காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த இன்னொரு இளைஞர் காரைவிட்டு கீழே இறங்கி துப்பாக்கி வைத்திருந்த இளைஞரைக் காருக்குள் ஏற்ற முயல்கிறார். அதற்குள்ளாக இளம்பெண்ணைச் சுட்டுவிடுகிறார் அந்த இளைஞர். பின்னர் இரண்டு இளைஞர்களும் காரில் ஏறி அந்த இடத்திலிருந்து தப்பிக்கிறார்கள். பட்டப்பகலில், கல்லூரியின் முன்பாக தலையில் சுடப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

உ.பி: வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண் - நடந்தது என்ன?

இந்தச் சம்பவம் கடந்த அக்டோபர் 26-ம் தேதி மதியம் நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. இந்த வீடியோவிலுள்ள பெண் ஃபரிதாபாத்திலுள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம் படிக்கும் நிகிதா டோமர் (Nikita Tomar) என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அவரை சுட்டுக் கொன்றது தௌசிஃப் (Tausif) என்ற இளைஞர் என்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து துணை கமிஷனர் ஜெய்வீர் சிங் ரதி (Jaiveer Singh Rathi) கூறுகையில், `` சோஹ்னா (Sohna) பகுதியைச் சேர்ந்த தௌசிஃப் என்பவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் இவர்மீது அந்தப் பெண்ணின் உறவினர் `தங்கள் பெண்ணைத் துன்புறுத்துவதாக' புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் இரு தரப்புக்கும் சமரசம் செய்துவைக்கப்பட்டது'' என்றார். மேலும்,

காதலை மறுத்த காரணத்தால் இந்தக் கொலை நடந்திருக்கலாம். பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார் அந்தப் பெண். அவருக்காகக் கல்லூரிக்கு வெளியில் காத்துக்கொண்டிருந்த தௌசிஃப், இந்தக் கொலையை நிகழ்த்தியிருக்கிறார். அந்தப் பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழந்துவிட்டார்.
ஜெய்வீர் சிங் ரதி, துணை கமிஷ்னர்

குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். நிகிதா, தௌசிஃப்பின் போன் அழைப்புகளை ஏற்பதை நிறுத்திவிட்டதாகவும், அவரது எண்ணை பிளாக் செய்துவிட்டதாகவும் அதன் காரணமாக தௌசிஃப் கோபம் கொண்டிருந்ததாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மேலும், 2018-ம் ஆண்டே தௌசிஃப் மீது `தன் பெண்ணை துன்புறுத்துவதாக' காவல்துறையில் புகாரளித்திருக்கிறார் நிகிதாவின் தந்தை. ஆனால், அந்தச் சமயத்தில் நிகிதாவின் குடும்பத்துக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக அந்தப் புகார் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

கொலை
கொலை
`காஷ்மீர் எங்க இருக்கு?; சீனாவுல இருக்கு’ - நெட்டிசன்களைக் கொந்தளிக்கவைத்த ட்விட்டர், அலெக்ஸா!
என் மகளை வலுக்கட்டாயமாக அவரது காரில் ஏற்ற முயன்றிருக்கிறார். என் மகள் ஏற மறுத்துவிட்ட காரணத்தால் சுட்டுக் கொன்றுவிட்டார்.
நிகிதாவின் தந்தை
ட்விட்டரில், #JUSTICE4NIKITA என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து ஃபரிதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடப்பதாகத் தகவல்கள் வருகின்றன. நிகிதாவின் கல்லூரிக்கு வெளியே மாணவர்கள் அனைவரும் அவருக்காக நீதி கேட்டுப் போராடிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு