Published:Updated:

நீலகிரி: சட்டம் ஒழுங்கை விட தற்கொலைகளே பெரும் பிரச்னை; 2 ஆண்டுகளில் 500 தற்கொலைகள்-பகீர் ரிப்போர்ட்!

தற்கொலைகளை தடுக்க உதவி மையம்
News
தற்கொலைகளை தடுக்க உதவி மையம்

மாவட்டத்தின் மிக முக்கியப் பிரச்னையாக தற்கொலை விவகாரம் மாறியிருப்பதால், தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

தமிழ்நாட்டிலேயே கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் மிகக் குறைவாக நிகழும் மாவட்டமாக நீலகிரி இருந்து வருகிறது. அதே சமயம், மக்கள் அடர்த்தி குறைவாக இருக்கும் இந்த மாவட்டத்தில் பதியப்படும் தற்கொலை வழக்குகளின் எண்ணிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 500 தற்கொலை சம்பவங்கள் மாவட்டத்தில் பதிவாகியிருக்கின்றன. மாவட்டத்தின் மிக முக்கியப் பிரச்னையாக தற்கொலை விவகாரம் மாறியிருப்பதால், தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

தற்கொலைகளை தடுக்க உதவி மையம்
தற்கொலைகளை தடுக்க உதவி மையம்

'துளிர்' என்ற பெயரில் தற்கொலை தடுப்பு உதவி மையம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் முன்னிலையில் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் இந்த உதவி மையத்தை தொடங்கி வைத்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குடும்பத் தகராறு மற்றும் பல்வேறு காரணங்களால் தற்கொலை முடிவு கடைசி சில நிமிடங்களில் எடுக்கப்படுகிறது. எனவே, இவற்றை தடுப்பதற்காக 'துளிர்' என்ற பெயரில் ஆலோசனை மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. 9150510100, 04232444111, 2223828 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்கொலைகளை தடுக்க உதவி மையம்
தற்கொலைகளை தடுக்க உதவி மையம்

``இந்த விழிப்புணர்வு மையத்தில் தற்கொலையை தடுப்பதற்காக, பொதுமக்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்படும். இந்த மையம் 24 மணி நேரமும் இயங்கும். இந்த மையத்தை தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு கவுன்சிலிங் அளிப்பார்கள். இதன் மூலம் தற்கொலை எண்ணங்கள் தடுக்கப்படும் என நம்புகிறோம்" என்கின்றனர் காவல்துறையினர்.