Published:Updated:

`என்னை யாரும் கடத்தவில்லை; நானாகவே சென்றேன்!' - நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சேலம் இளம்பெண்

திருமணம் செய்துகொண்ட ஜோடி
திருமணம் செய்துகொண்ட ஜோடி ( க. தனசேகரன் )

``என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை. நானாகவேதான் சென்றேன். தற்போது என் அம்மாவோடு வீட்டுக்குச் செல்லுகிறேன்'' என்று கூறியிருக்கிறார்.

சேலம் கொளத்தூரில் காதல் ஜோடி செல்வன் - இளமதி சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண் இளமதி நான்கு நாள்களுக்குப் பிறகு 14-ம் தேதி மதியம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கறிஞரோடு ஆஜரானார். பிறகு, அவரை பவானி நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் 15-ம் தேதி ஆஜர்படுத்தினர். அதன்பிறகு, தன் அம்மாவோடு வீட்டுக்குச் சென்றார்.

இளமதி
இளமதி
க. தனசேகரன்

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த கவுந்தப்பாடியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் செல்வன், பவானி குருப்பநாயக்கம்பாளையத்தைச் சேர்ந்த மாற்று சமூகப் பெண் இளமதி. இருவரும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தபோது பழக்கம் ஏற்பட்டு கொளத்தூரில் கடந்த 9-ம் தேதி சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டனர். அதையடுத்து, சாதியக் கும்பல் இளமதியை கடத்திச் சென்றனர்.

இந்த நிலையில் இளமதியின் தாய் பவானி காவல் நிலையத்தில், தன் மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாகத் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, ஈஸ்வரன், செல்வன், சரவண பரத் ஆகியோர் மீது புகார் கொடுத்தார். கொளத்தூர் காவல் நிலையத்தில் செல்வன், வீரப்பன் தலைமையிலான 50-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து தன் மனைவியைக் கடத்திச் சென்றதாகப் புகார் கொடுத்தார். 4 நாள்களுக்குப் பிறகு வழக்கறிஞரோடு மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதியை ஒப்படைத்தனர்.

அதையடுத்து, கடந்த 14-ம் இரவு இளமதி, பவானி அருகே உள்ள ஆர்.என். புதூரில் உள்ள மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து, பவானி காவல்துறையினர் இளமதியை அழைத்துச் சென்று பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிபதி ஜீவன்பாண்டியன் முன்பாக நேற்று ஆஜர்படுத்தினர். நீதிபதி, ``உன்னை யாராவது கடத்திச் சென்றார்களா? தற்போது எங்கே செல்லுகிறாய்?'' என்று அவரிடம் கேட்டார்.

வேன்
வேன்
க.தனசேகரன்

அதற்கு இளமதி,``என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை. நானாகவேதான் சென்றேன். தற்போது என் அம்மாவோடு வீட்டுக்குச் செல்லுகிறேன்'' என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, தன் அம்மாவோடு வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார். இந்த நிலையில், கொளத்தூரில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இளமதி, சேலம் நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பு உள்ளதாகக் கூறுகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு