Published:Updated:

பரமக்குடி: 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representative Image )

`யாரும் இல்லாதபோது தனது வீட்டுக்கு வந்த அந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் ஸ்டீபன்ராஜ்.’

பரமக்குடியில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அந்த மாணவி கருவுறுவதற்குக் காரணமாக இருந்த திருமணமான இளைஞரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
Representative Image

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கீழக்கரை, சத்திரக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனிமையில் வசிக்கும் பெண்கள், டூ வீலர்களில் தனியாக பயணிக்கும் இளம்பெண்கள், மொபைல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்ய வரும் பெண்கள் ஆகியோரை ஆசைவார்த்தையில் பேசியும், மறைமுகமாகப் பெண்களைப் படம் பிடித்து அதைக் காட்டி மிரட்டி, அந்தப் பெண்களை வன்கொடுமை செய்யும் கும்பல்கள் குறித்த புகார்கள் மாவட்ட காவல்துறையினருக்கு சென்றன. இதையடுத்து மாவட்ட எஸ்.பி வருண்குமார் நடவடிக்கையின் விளைவாக, பலர் போலீஸாரிடம் சிக்கியிருக்கிறார்கள்.

ராமநாதபுரம்:  `ரூ.6 கோடி; 40 நாள்களில் இரு மடங்கு!’ - இரிடியம் மோசடியில் ஏமாந்த கரூர் நபர்

இந்த நிலையில், பரமக்குடியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருமணமான இளைஞரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். பரமக்குடி கிறிஸ்தவ தெருவைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் ஸ்டீபன் ராஜ். அதே பகுதியைச் சேர்ந்த கூலி வேலை பார்த்துவரும் தம்பதியரின் 15 வயது மகள் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். ஸ்டீபன் ராஜ் சொந்தமாக கார்வைத்து வாடகைக்கு இயக்கிவருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு வயதில் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில், தனது வீட்டை அடுத்துள்ள வீட்டில் வசித்துவரும் ஸ்டீபன் ராஜின் அம்மாவைப் பார்ப்பதற்காக அந்த மாணவி அடிக்கடி ஸ்டீபன் ராஜின் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

மயிலாடுதுறை: வீட்டில் இருந்த சிறுமி; சிறார் வதை கொடுமை! - போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு யாரும் இல்லாதபோது வீட்டுக்கு வந்த அந்த மாணவியை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ஸ்டீபன் ராஜ். மேலும், அதைத் தன் செல்போனில் படம்பிடித்திருக்கிறார். `இதில் பதிவான காட்சிகளை வெளியிட்டுவிடுவேன்’ என மிரட்டியபடி கடந்த ஓராண்டாக அந்த மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். பள்ளி நாள்களில்கூட அந்த மாணவியைப் பள்ளிக்குச் செல்லவிடாமல் விடுமுறை எடுக்க வற்புறுத்தி, தனது காரில் ஏற்றிக்கொண்டு ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதி மற்றும் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்.

போக்சோவில் கைதான ஸ்டீபன் ராஜ்.
போக்சோவில் கைதான ஸ்டீபன் ராஜ்.
உ.பாண்டி

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பாதிப்புக்குள்ளான அந்த மாணவியின் வயிறு பெரிதாகக் காணப்பட்டதால், அவரின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மருத்துவப் பரிசோதனைக்காக ஸ்கேன் எடுத்தபோது, அந்த மாணவி 9 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அதன் பின்னரே தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் அந்த மாணவி கூறியிருக்கிறார். இது பற்றி பெற்றோர்கள் ஸ்டீபன் ராஜிடம் கேட்டபோது, `உங்களை குடும்பத்தோட காரை ஏற்றிக் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஸ்டீபன் ராஜ்மீது பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் ஸ்டீபன் ராரைக் கைது செய்தனர். அவர்மீது கொலை மிரட்டல் மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு