Published:Updated:

மதுரை : மகனைக் கொலைசெய்து சைக்கிளில் எடுத்துச் சென்று எரித்த பெற்றோர் - காரணம் என்ன?

சைக்கிளில் கொண்டு செல்லும் பெற்றோர்

மகனைப் பெற்றோரே கொலைசெய்து எரித்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை : மகனைக் கொலைசெய்து சைக்கிளில் எடுத்துச் சென்று எரித்த பெற்றோர் - காரணம் என்ன?

மகனைப் பெற்றோரே கொலைசெய்து எரித்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
சைக்கிளில் கொண்டு செல்லும் பெற்றோர்

மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றங்கரையில் எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். கரிமேடு காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மோப்ப நாய் மூலம் விசாரணையைத் தொடங்கினார்கள். மோப்ப நாய் அந்தப் பகுதிக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தது.

கொலை
கொலை
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இறந்தது யார் என்று தெரியாத நிலையில், முன்பகையாலோ அல்லது ரௌடிக் கும்பலினாலோ இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்தனர்.

உடலை மூட்டை கட்டி தூக்கிச் செல்லும் பெற்றோர்
உடலை மூட்டை கட்டி தூக்கிச் செல்லும் பெற்றோர்

உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு தீவிர விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினருக்கு இந்தக் கொலையில் சில தடயங்கள் கிடைத்தன. அதைத் தொடர்ந்துதான் கொல்லப்பட்டது மணிமாறன் என்பவர் என்பதையும், கொலை செய்தது அவரது பெற்றோர் என்பதையும் உடனே கண்டுபிடித்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து கரிமேடு இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் விசாரித்த டீமிடம் பேசினோம். "ஆரப்பாளையத்தில் வசிக்கும் மணிமாறனுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் குடிப்பழக்கத்தால் மனைவியும் குழந்தைகளும் அவரைவிட்டுப் பிரிந்து வாழ்ந்துவருகிறார்கள்.

உடலை மூட்டைகட்டித் தூக்கிச் செல்லும் பெற்றோர் - சிசிடிவி காட்சிகள்
உடலை மூட்டைகட்டித் தூக்கிச் செல்லும் பெற்றோர் - சிசிடிவி காட்சிகள்

ஆரப்பாளயத்தில் கூலி வேலை செய்யும் பெற்றோர் முருகேசன்-கிருஷ்ணவேணி வசிக்கும் வீட்டில் தங்கியிருந்த மணிமாறன், எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு பெற்றோர்களிடம் பணம் கேட்டுத் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

கடந்த 27-ம் தேதி இரவும் குடித்துவிட்டு கடும் வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமான முருகேசன் விறகுக்கட்டையால் மணிமாறனைத் தாக்கியிருக்கிறார். அடி தாங்காமல் மயங்கி விழுந்த மணிமாறன் இறந்திருக்கிறார். இதை வெளியே தெரியாமல் மனைவியுடன் சேர்ந்து சாக்கு மூட்டையில் மணிமாறனின் உடலைக் கட்டி நள்ளிரவில் சைக்கிளில் ஏற்றி காமராஜர் மேம்பாலம் அருகேயுள்ள வைகை ஆற்றில் போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திருக்கிறார்கள். அதோடு அங்கிருந்து கிளம்பி வழக்கம்போல் தங்கள் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

கொலை
கொலை

காவல்துறை விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோதும் எதுவும் தெரியாதவர்கள் மாதிரியே ஏரியாவில் நடமாடிக்கொண்டிருந்தனர். ஆனால், சிசிடிவி காட்சிகள் அவர்கள்தான் கொலைகாரர்கள் என்பதை உறுதி செய்ய உதவின. அப்பகுதியிலுள்ள அனைத்து சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்தபோது முருகேசனும் அவர் மனைவியும் சைக்கிளில் ஒரு மூட்டையைக் கொண்டு செல்வது தெளிவாகத் தெரிந்தது. அதனால், அவர்களைப் பிடித்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டனர். சிசிடிவி இல்லையென்றால் இந்தக் கொலையில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும்" என்றனர்.

இந்தச் சம்பவத்தில் துரிதமாக விசாரணை செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

மதுப்பழக்கம் என்னும் சமூகத்தீமை, பெற்ற மகனையே கொடூரமாகக் கொலை செய்யும் அளவுக்கு பெற்றோரை நிம்மதியிழக்க செய்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism