Published:Updated:

`அக்கா உங்க வீட்டுக்கதவு உடைந்து கிடக்குது!'-பதறிவந்த பெரம்பலூர் டீச்சருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

கொள்ளை
கொள்ளை

கடந்த இரண்டு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. இன்றுவரையிலும் குற்றவாளிகள் குறித்த தகவல்கள் கிடைக்காமல் காவல்துறையினர் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

பெரம்பலூர்
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எழிலரசி. அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இருவரும் ஒரே பள்ளியில் வேலை செய்கிறார்கள். இந்தநிலையில் கணவன்-மனைவி இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு பள்ளிக்குச் சென்றுவிட்டனர். மாலை மூன்று மணியளவில் பக்கத்துவீட்டுக்கார பெண் ஒருவர் எழிலரசிக்கு போன் செய்து,`அக்கா உங்க வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருக்கிறது' என்று தகவல் சொல்லியிருக்கிறார். இந்தத் தகவலைக் கேட்டுப் பதறிப்போய் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

`ஜன்னலை உடைக்க வெல்டிங்; மிளகாய்ப்பொடி!' - தஞ்சை வங்கி ஊழியர்களை அதிரவைத்த கொள்ளை முயற்சி

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 70 பவுன் நகைகள் மற்றும் ரூ.90,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. பரிதவித்த அவர்கள் பின்பு போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மங்களமோடு போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜன், இன்ஸ்பெக்டர் நாஞ்சில் குமார், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து மங்களமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து அந்தப் பகுதியில் வசித்து வருபவர்களிடம் பேசினோம். ``பெரம்பலூர் மாவட்டத்தில் பல இடங்களில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும், குறிப்பாகத் திருட்டுச் சம்பங்கள்தான் அதிக அளவில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

கொள்ளை
கொள்ளை

போலீஸாரிடம் புகார் கொடுத்தால் அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து பார்ப்பதோடுசரி அதன் பிறகு என்ன நடக்கிறது குற்றவாளிகளை போலீஸார் பிடித்தார்களா, பிடிக்கவில்லையா என்று இதுவரையிலும் ஒன்றும் தெரியவில்லை. இந்த வழக்குகளில் சம்பந்தமான ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். இதுகுறித்து எந்தவித தகவலும் கிடைக்காமல் பெரம்பலூர் போலீஸார் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இதனால், எங்களுக்கு போலீஸார் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது'' என்றார்கள் ஆதங்கத்தோடு.

அடுத்த கட்டுரைக்கு