Published:Updated:

விழுப்புரம்: குடிநீர்த் தொட்டியில் விஷம் கலந்த மர்ம நபர்கள்... சாதிய பாகுபாடு காரணமா?

மினி டேங்க் - கம்பந்தூர்

பொது குடிநீர்த் தொட்டியில், பூச்சி மருந்து கலக்கப்பட்ட சம்பவம் செஞ்சி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: குடிநீர்த் தொட்டியில் விஷம் கலந்த மர்ம நபர்கள்... சாதிய பாகுபாடு காரணமா?

பொது குடிநீர்த் தொட்டியில், பூச்சி மருந்து கலக்கப்பட்ட சம்பவம் செஞ்சி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
மினி டேங்க் - கம்பந்தூர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ளது கம்பந்தூர் ஊராட்சி. இந்த ஊரின் எல்லைக்கு உட்பட்ட கூட்டுச்சாலை அருகே மினி டேங்க் ஒன்று அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயங்கி வந்துள்ளது. கம்பந்தூர் கிராம மக்கள் மட்டுமின்றி, அதன் பக்கத்து ஊராட்சியான மொடையூர் கிராம மக்களும், அவ்வழியே செல்லும் பொது மக்களும் அந்த நீரை குடிப்பதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், அண்மையில் ஒருநாள் மர்ம நபர்கள் மூலம் இந்த குடிநீர் தொட்டியில் விஷம் (பூச்சி மருந்து) கலக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த செயல் சாதிய பாகுபாட்டின் காரணமாகவே நடந்துள்ளது என்றும், இதற்கு முன்பும் கூட ஒருமுறை நாயை அடித்து இந்த தொட்டியில் போட்ட கொடுமையும் நிகழ்ந்துள்ளதாகவும் சில குற்றச்சாட்டுகள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடிநீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டது தொடர்பாக, செஞ்சி காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார் கம்பந்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் காமாட்சி சத்தியமூர்த்தி.

தண்ணீர் தொட்டியில் கலக்கப்பட்டதாக கூறப்படும் விஷம்
தண்ணீர் தொட்டியில் கலக்கப்பட்டதாக கூறப்படும் விஷம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கம்பந்தூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரிடத்தில் பேசினோம். ``10 நாள்களுக்கு முன்பாக நாய்குட்டியை கொன்று உள்ளே போட்டதாக கூறப்படுவது தவறு. அந்த சம்பவம் 2 வருடங்களுக்கு முன்பு, சின்ன சின்ன பசங்க மூலமாக நடந்தது. அதன் பின் எல்லாம் சரி செய்யப்பட்டு நன்றாகத்தான் இருந்தது. சுமார் 10 நாள்களுக்கு முன்பு, கம்பந்தூர் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட புறம்போக்கு நிலத்தில் இருந்த மரங்களை மொடையூர் கிராமத்தை சேர்ந்த சிலர் வெட்டியுள்ளனர். அதனை கண்ட கம்பந்தூர் நாட்டாமைக்காரரர் ஒருவர், `ஏன் இதையெல்லாம் வெட்டுறீங்க. இது புறம்போக்கு நிலமாச்சே' என்று கேட்க, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மரம் வெட்டியவர்கள் இணைந்து... இந்த நாட்டாமைக்காரரை அடித்துள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரு தரப்பும் வெவ்வேறு சமூகம் என்பதால், `சாதி பெயரை சொல்லி நாட்டாமைக்காரர் எங்களை திட்டினார்' என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் மரம் வெட்டிய மொடையூர் தரப்பினர். இதை அறிந்த நாட்டாமை தரப்பினரும், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது பெரிய பிரச்னையாக மாறிவிட கூடாது என்பதற்காக, வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதாக காவல்துறை தரப்பில் சொல்லியிருந்தார்கள். இந்த சமயத்தில் தான், ஜமாபந்தி கூட்டங்கள் நடைபெற்று வந்தன. இதனால், சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் இல்லாமல் இருந்தது. எனவே, ஒரு வாரத்திற்கு யாரும் எதையும் பெரிதுபடுத்த கூடாது என்று தடை உத்தரவு போட்டு காவல்துறை அனுப்பி வைத்திருந்தார்கள். இதற்கிடையில் ஒருநாள், எங்கள் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பொழிந்தது. அந்த சமயத்தில் யாரோ மர்ம நபர்கள், இந்த மினி டேங்க் மோட்டாரை இயக்குவதற்கான சாதனங்களை திருடி சென்றுவிட்டனர். உடனே, இது தொடர்பாக காவல்நிலையம் மற்றும் கலெக்டரிடத்தில் புகார் மனு கொடுத்துவிட்டு, வேறு சாதனங்களை புதிதாக வைத்து தண்ணீர் விநியோகத்தை துவங்கிவிட்டோம். அடுத்த இரண்டு நாள் கழித்து, மோட்டாருக்கு செல்லும் ஒயர் இரண்டாக துண்டிக்கப்பட்டிருந்தது. அதையும் உடனே சரி செய்தோம்.

காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனு.
காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனு.

இந்நிலையில், அண்மையில் எங்க ஊரில் திருவிழா நடைபெற்றது. அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், நெல் விளைச்சலுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை (விஷம்) அந்த மினி டேங்கில் கலந்துள்ளனர். மறுநாள் காலையில் தண்ணீர் பிடிக்க ஒருவர் சென்ற போது, அந்த தண்ணீர் விஷம் கலந்த வாடை அடித்துள்ளது. இது பற்றி எங்களுக்கு தகவல் கிடைத்ததும், `கம்பந்தூர், மொடையூர் கிராம மக்கள் உட்பட யாரும் அந்த டேங்கில் உள்ள தண்ணீரை குடிக்க வேண்டாம்' என தலைவர் மூலம் தகவல் கொடுத்துவிட்டோம். அதனை தொடர்ந்து, செஞ்சி காவல் நிலையம், மேல்சித்தாமூர் மருத்துவமனை, மனேகார், ஆர்.ஐ உள்ளிட்ட எல்லோருக்கும் தகவல் தெரிவித்துவிட்டோம். அதிகாரிகள் நேரில் வந்த பார்த்து தண்ணீரை சோதித்துவிட்டு, `யாரும் இந்த தண்ணீரை குடிக்க வேண்டாம். புதிய டேங்க் வையுங்கள்' என சொன்னார்கள். பின், தண்ணீர் மாதிரிகளை எடுத்துச் சென்றார்கள். அதன்படி, புது டேங்க் வைத்து தண்ணீரை விட்டுவிட்டோம்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், மொடையூர் கிராமத்தைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒருவரிடத்தில் பேசினோம். "எங்க பஞ்சாயத்தும், கம்பந்தூர் பஞ்சாயத்தும் வேறு வேறுதான். கம்பந்தூர் பஞ்சாயத்து சார்பில் கூட்ரோடு பகுதியில் வைக்கப்பட்ட அந்த மினி டேங்க், பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. அந்த கூட்ரோடு அருகே, கம்பந்தூரைச் சேர்ந்த சில வீடுகள் மட்டுமே இருக்கிறது. மீதி பெரும்பாலான வீடுகள்... கூட்ரோட்டில் இருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளன. கம்பந்தூர் ஊராட்சி சார்பில் வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி என்றாலும், இதனால் அதிக பயன் என்னவோ எங்கள் கிராம (மொடையூர்) மக்களுக்கு தான். எங்கள் கிராமத்தில் போதிய நீர் ஆதாரம் இருந்தாலும், குடிப்பதற்கு தண்ணீர் நன்றாக இருக்காது. முழுக்க முழுக்க உப்பு தண்ணீர். ஆனால், இந்த மினி டேங்கில் வரும் தண்ணீர் நன்றாக இருக்கும். அதனால், எங்க ஊர்க்காரங்க எல்லாருமே குடிப்பதற்கு தண்ணீரை அந்த டேங்க்குக்கு போய்தான் எடுத்துக் கொண்டு வருவோம்.

போலீஸ்: சித்திரிப்புப் படம்
போலீஸ்: சித்திரிப்புப் படம்

அண்மையில் ஒருநாள், எங்க ஊர்க்காரங்க சிலருக்கும்... கம்பந்தூரைச் சேர்ந்தவருக்கும் இடையே மரம் வெட்டுவதில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரச்னையின் தொடர்ச்சியாகதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இருந்தாலும் இரண்டு ஊர் காரங்களும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்கின்றனர். இந்த குடிதண்ணீரை நம்பிதான் எங்க கிராமமே இருக்கு, அப்படியிருக்க எங்க ஊர்காரங்க எப்படி அதுபோல செய்வாங்க" என்றார்.

இன்னும் சிலரோ, ``குடிக்கும் தண்ணீரில் விஷம் கலந்து தவறு செய்தது யார் என்று தெரிய வந்தாலும் சரி, வாக்கு வங்கியை மனதில் வைத்து வெளியில் சொல்ல மாட்டார்கள்" என்கிறார்கள் திடுக்கிடும் வகையில்.

இந்த கொடும் சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் தங்கத்திடம் பேசினோம். ``328-வது ஐ.பி.சி பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் விவரங்கள் தெரியவரும் பட்சத்தில் கூறுகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism