Published:Updated:

மதுபோதை; கத்தியைக் காட்டி மிரட்டல்! - சாலையில் அமர்ந்து உணவருந்திய தேனி அ.தி.மு.க பிரமுகர்

நடு ரோட்டில் அமர்ந்து மதுபோதையில் அ.தி.மு.க பிரமுகர் செய்த செயல் அப்பகுதி மக்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Perumal
Perumal

தேவதானப்பட்டி அருகே மது போதையில் நடுரோட்டில் அமர்ந்து சாப்பாடு சாப்பிட்ட அ.தி.மு.க பிரமுகரால், சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Perumal
Perumal

இதை செல்போனில் வீடியோ எடுத்த அக்கம்பக்கத்தினர், சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் பெருமாள். இவர், மதுபோதையில், தேவதானப்பட்டி- ஜெயமங்கலம் ரோட்டில் அமர்ந்து சாப்பாடு சாப்பிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Perumal
Perumal

சுமார் அரை மணி நேரம் கழித்து சம்பவ இடத்துக்கு வந்த தேவதானப்பட்டி காவல்துறையினர், பெருமாளைக் கைது செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், மிரட்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பெருமாளை சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கேட்ட போது,``பெருமாளும், சுரேஷ் என்பவரும் நடுரோட்டில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதாகவும், அதைத் தட்டிக் கேட்பவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டுவதாகவும் தகவல் கிடைத்தது. அதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று பெருமாளை ரோட்டிலிருந்து அகற்றினோம். விசாரித்ததில், அருகில் இருக்கும் கடைகளில் கத்தியைக் காட்டி பணம் கேட்டதாகக் கூறினர்.

மகாராஷ்டிராவில் தேர்வு; தேனி  மருத்துவக் கல்லூரியில் சீட்!-நீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள்மாறாட்டம்?

சுமார் ஒருமணி நேரம் அப்பகுதியில் அனைவரையும் மிரட்டிவிட்டு இறுதியாக ரோட்டில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். மது போதையில் அவர் செய்த செயல்களை பலரும் வீடியோ எடுத்துள்ளனர்” என்றனர்.