Published:Updated:

தி.மலை: கொத்தடிமைகளாகத் துன்புறுத்தப்பட்ட பழங்குடிச் சிறுவர்கள்; ஒருவர் கைது! நடந்தது என்ன?

திருவண்ணாமலை

வாத்துகளை மேய்ப்பதற்காக இரண்டு சிறுவர்களையும் கொத்தடிமைகளாக அழைத்துவந்த முருகேஷும் சிவாவும், சிறுவர்களுக்கு முறையாக உணவு கொடுக்காமல், அடித்துத் துன்புறுத்திவந்ததாகக் கூறப்படுகிறது.

தி.மலை: கொத்தடிமைகளாகத் துன்புறுத்தப்பட்ட பழங்குடிச் சிறுவர்கள்; ஒருவர் கைது! நடந்தது என்ன?

வாத்துகளை மேய்ப்பதற்காக இரண்டு சிறுவர்களையும் கொத்தடிமைகளாக அழைத்துவந்த முருகேஷும் சிவாவும், சிறுவர்களுக்கு முறையாக உணவு கொடுக்காமல், அடித்துத் துன்புறுத்திவந்ததாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
திருவண்ணாமலை

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினத்தைச் சேர்ந்த முருகேஷ், சிவா இருவரும் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வாத்து வியாபாரம் செய்துவந்திருக்கின்றனர். கடந்த 16-ம் தேதி திருவண்ணாமலைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரும், திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த 10, 17 வயதுடைய இரண்டு பழங்குடி சிறுவர்களை அச்சுறுத்தி, சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

தப்பி ஓடிவந்த இரு சிறுவர்கள்
தப்பி ஓடிவந்த இரு சிறுவர்கள்

அதைக் கண்ட அங்கிருந்த சிலர், தாக்கியவர்களையும், தாக்கப்பட்ட சிறுவர்களையும் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, முருகேஷ், சிவா இருவரும் அந்த இரண்டு சிறுவர்களை, திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பகுதியில் வாத்துகளை மேய்ப்பதற்காக கொத்தடிமைகளாக அழைத்துவந்ததும், அவர்களுக்குத் தெரியாமல் சிறுவர்கள் அங்கிருந்து தப்பித்து திருவண்ணாமலைக்கு ஓடிவந்ததும் தெரியவந்தது. அதனால், ஆத்திரமடைந்த இருவரும் அந்தச் சிறுவர்களைத் தாக்கியதும் தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையடுத்து, சிறுவர்கள் உட்பட நான்கு பேரையும் பொதுமக்கள் திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸார் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பன செய்தியைக் கடந்த 17-ம் தேதி நமது விகடன் தளத்திலும் வெளியிட்டிருந்தோம்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

போலீஸார் அந்தச் சிறுவர்களை குழந்தைகள் நல கமிட்டியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களிடம், திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சித்ரபிரியா விசாரணை மேற்கொண்டார். அதில் அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகின. சிறுவர்களின் பெற்றோர்களிடம் காசு கொடுத்துவிட்டு, வாத்துகளை மேய்ப்பதற்காக இரண்டு சிறுவர்களையும் கொத்தடிமைகளாக அழைத்துவந்த முருகேஷும் சிவாவும், சிறுவர்களுக்கு முறையாக உணவு கொடுக்காமல், அடித்துத் துன்புறுத்திவந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், மிகுந்த இன்னல்பட்டுவந்த இரண்டு சிறுவர்களும், வேறு வழியின்றி தப்பித்து வந்தபோது தாக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சித்ரபிரியா இந்த விவகாரம் தொடர்பாகப் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற காவல்துறையினர், ஐ.பி.சி 374 மற்றும் கொத்தடிமை தடுப்புச் சட்டம் (1976) 16, 17 ஆகிய பிரிவுகளில், இளஞ்சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 சட்டப்பிரிவு 79-ன் கீழும் முருகேஷ், சிவா ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர்.

சிறார் கொத்தடிமைகள்
சிறார் கொத்தடிமைகள்
சித்தரிப்புப் படம்

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முருகேஷை மட்டும் கைதுசெய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அடுத்த மாதம் 4-ம் தேதி வரை சிறையில் அடைத்ததாகக் கூறப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் சிவாவைத் தேடிவருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism