Published:Updated:

`சிறார் வதை படம்!’ - ஃபேஸ்புக் மூலம் சிக்கிய குடியாத்தம் இளைஞர்

நியாஸ்
நியாஸ்

சிறார் வதை படங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துவந்த குடியாத்தம் இளைஞரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

சமூக வலைத்தளம் மற்றும் இணையத் தளங்களில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருகிறது. இதனைத் தடுக்க ‘சிறார்’ வதை ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பகிரும் நபர்கள் ‘சைபர்’ க்ரைம் மூலம் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள்.

Representational Image
Representational Image

அதன்படி, சிறார் வதை வீடியோக்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துவந்த வேலூர் மாவட்டம், குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த நசீர் மகன் நியாஸ் (31) என்ற இளைஞரைக் காவல் துறையினர் நேற்றிரவு கைதுசெய்தனர். நியாஸ், கண் கண்ணாடி கடை வைத்துள்ளார்.

இவர் தன் செல்போன் மூலம் தடை செய்யப்பட்ட இணைய தளங்களிலிருந்து குழந்தைகளுக்கெதிரான ஆபாசப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எக்கச்சக்கமாகப் பதிவிறக்கம் செய்துள்ளார்.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கில் போலிக் கணக்கு தொடங்கி அந்த வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டுவந்துள்ளார். அதில் வரும் கமென்ட்டுகளுக்கு மிகவும் ஆபாசமாகப் பதில் கமென்ட் போட்டுள்ளார். நியாஸின் ஃபேஸ்புக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட அவரது செல்போனில் ஆபாசப் படங்கள் நிறைய இருந்தன. குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா ஆகியோர் நியாஸைத் தீவிரமாகக் கண்காணித்துப் பிடித்துள்ளனர்.

நியாஸ்
நியாஸ்

அவர் மீது தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் போக்ஸோ ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு