Published:Updated:

பெரம்பலூர்: இ.எம்.ஐ வசூலித்து தன்னுடைய லோனை அடைத்த ஏஜென்ட்; பதறிய வாடிக்கையாளர்கள்!

பெரம்பலூர்
பெரம்பலூர்

இ.எம்.ஐ கட்டவில்லையே என்று வாடிக்கையாளர்களிடம் போனில் தொடர்புகொண்டு கேட்டிருக்கிறார்கள்.

டூ வீலர் லோன்கட்ட வேண்டிய பணத்தை வசூல் செய்தவர், அந்தப் பணத்தை நிதி நிறுவனத்தில் கட்டாமல் அவருடைய சொந்தக் கடனை கட்டிய சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்
பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில், தனியார் நிதி நிறுவனமான மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில், பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் வன்னிமலை தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கலெக்‌ஷன் ஏஜென்ட்டாக வேலை பார்த்துவந்தார். டூ வீலர் லோன் மற்றும் பர்சனல் லோன் தேவைகளுக்காகவும் இந்த நிறுவனத்தில் கடனுதவி வழங்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில், இந்த நிதி நிறுவனத்தில் பைக் லோன் வாங்கிய 42 பேரிடம் இவர் வசூலித்த ரூ.3.7 லட்சம் பணத்தைக் கட்டாமல் இருந்திருக்கிறார்.

இது குறித்து நிதி நிறுவன அதிகாரிகள் மாதந்தோறும் செலுத்தவேண்டிய இ.எம்.ஐ கட்டவில்லையே என்று வாடிக்கையாளர்களிடம் போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் ஏற்கெனவே கட்டிவிட்டோம். எத்தனை முறைதான் கட்டுவது என்று நிதி நிறுவன அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார்கள். ஒருசிலர் வாக்குவாதமும் செய்திருக்கிறார்கள். அதன் பிறகு ரமேஷ்தான் பணத்தைக் கட்டாமல் லட்சக்கணக்கில் ஏமாற்றிவிட்டது தெரியவந்தது.

தகவல் திருட்டு
தகவல் திருட்டு

இதையடுத்து பணம் செலுத்திய பலர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் அகிலா என்ற பெண் புகார் கொடுத்ததின்பேரில் போலீஸார் சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனத்திடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் உண்மை தெரியவர ரமேஷைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன நடந்தது என்று போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். ``கலெக்ஷன் ஏஜென்ட்டாக இருப்பவர் ரமேஷ். இவர் நிறுவனத்தில் லோன் வாங்கியவர்கள் மற்றும் டூ வீலர் லோன் வாங்கியவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தானே கட்டிவிடுவதாகச் சொல்லி ஏமாற்றியிருக்கிறார்.

பெரம்பலூர் எஸ்.பி ஆபிஸ்
பெரம்பலூர் எஸ்.பி ஆபிஸ்

அந்தப் பணத்தை என்ன செய்தார் என்று விசாரிக்கையில், அவர் வீட்டில் ஏதோ கடன் இருந்திருக்கும்போல. அந்தக் கடன்களை இந்தப் பணத்தால் அடைத்திருக்கிறார். மீதிப் பணம் எங்கே என்று கேட்டால் செலவு செய்துவிட்டதாகச் சொல்கிறார். புகாரின் அடிப்படையில் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்று முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு