Published:Updated:

புதுச்சேரி: ப்ளஸ் டூ மாணவிக்குப் பாலியல் தொல்லை; ஆபாச சாட்டிங்- விலங்கியல் ஆசிரியர் கைது?

கைது

பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

புதுச்சேரி: ப்ளஸ் டூ மாணவிக்குப் பாலியல் தொல்லை; ஆபாச சாட்டிங்- விலங்கியல் ஆசிரியர் கைது?

பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Published:Updated:
கைது

புதுச்சேரி 100 அடி சாலையில் இயங்கிவரும் அந்தத் தனியார் பள்ளியில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். அங்கு ப்ளஸ் டூ படித்துவரும் மாணவி ஒருவருக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் விலங்கியல் ஆசிரியர் ஒருவர் பல மாதங்களாகப் பாலியல் தொல்லை கொடுத்துவந்ததுடன், தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படியும் வற்புறுத்தி வந்திருக்கிறார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த மாணவி, வீட்டில் சொன்னால் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்களோ என்ற பயத்தில் யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார். அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த ஆசிரியர், மாணவியின் செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பிவந்திருக்கிறார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்திரிப்புப் படம்

அத்துடன் ஆபாச வீடியோ காட்சிகளையும் அனுப்பிவைத்து அதைப் பார்க்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். மேலும் அதைப் பார்க்கும்போது ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பும்படியும் தொல்லை கொடுத்திருக்கிறார். ஆசிரியரின் தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவி, சக மாணவர்களிடம் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று அந்த ஆசிரியரின் செல்போனைப் பிடுங்கிய மாணவர்கள், அதைப் பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். ஆனால் அது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்புக்குழு அல்லது காவல் நிலையத்தில் புகாரளிக்காமல், தொடர்புடைய அந்த ஆசிரியரை தலைமையாசிரியர் கண்டித்து அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில் கோபமடைந்த மாணவர்கள் காவல்துறையின் அவசர எண் 100-ஐ தொடர்புகொண்டு நடந்தவற்றைத் தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்புக்குழுவுக்குத் தகவல் அளித்திருக்கின்றனர் முதலியார் பேட்டை போலீஸார். தற்போது அந்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த ஆசிரியர், மாணவிக்கு அனுப்பியதாக அதிர்ச்சிகரமான வாட்ஸ்அப் தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிவருகின்றன.

கைது
கைது

கண்டமங்கலத்தைச் சேர்ந்த அந்த ஆசிரியர் கடந்த 10 ஆண்டுகளாக அங்கு பணியாற்றிவருவதாகக் கூறப்படுகிறது. அந்த ஆசிரியர் குறித்து பள்ளி மாணவர்கள் தெரிவித்தும், குழந்தைகள் நல பாதுகாப்புக்குழுவுக்குத் தகவல் அளிக்காத அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரையும் போக்சோ வழக்கின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துவருகின்றன சமூக அமைப்புகள்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.