Published:Updated:

`நீ அவளிடம் பேசக் கூடாது; அப்படித்தான் பேசுவேன்!" - டீச்சருக்காக அடித்துக்கொண்ட ஆசிரியர் - இளைஞர்

நாங்கள் ரெண்டு பேரும் டீச்சர்தான். நாங்கள் பாடம் சம்பந்தமாகப் பேசிக்கொள்வோம். அதைக் கேட்க நீ யாருடா' என்று கேட்க இருவருக்கும் பள்ளியிலேயே மோதல் ஏற்பட்டிருக்கிறது. அங்குள்ள மற்ற ஆசிரியர்கள் திருமானூர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

ஆசிரியர் ஹென்றி
ஆசிரியர் ஹென்றி

``அந்த ஆசிரியர் என்னோட ஆளு. நீ அவளிடம் பேசக் கூடாது. அப்படிப் பேசினால் உன்ன தொலைத்துவிடுவேன்'' என்று இளைஞர் மிரட்ட, ``அடபோடா, அந்த டீச்சர் எனக்கு ரெண்டு வருஷமா பழக்கம்டா" என்று ஆசிரியர் கூற, இதனால் ஏற்பட்ட மோதலில் தந்தை, மகனை சரமாரியாக‌ அரிவாளால் வெட்டியிருக்கிறார்கள். இச்சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜிவ்ராஜன்
ராஜிவ்ராஜன்

அரியலூர் மாவட்டம், திருமழபாடியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரின் மகன் ராஜிவ்ராஜன். திருமணம் ஆகாதவர். இவர் அப்பகுதியில் பெயின்ட் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் தன் தாயார் பார்வதியைத் தினம்தோறும் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவார். அப்போது அதே பள்ளியில் பணியாற்றும் திருமணமான சத்யபிரியாவுக்கும் ராஜிவ்ராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இந்த நிலையில் அந்த ஆசிரியைக்கும் பாளையப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் ஹென்றி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அந்த ஆசிரியை இரண்டு பேருடனும் நெருங்கிப் பழகி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இது நீண்ட நாள்களுக்குப் பிறகு ராஜிவ்ராஜனுக்குத் தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த ராஜிவ்ராஜன், ஹென்றியிடம் சென்று, 'அந்த ஆசிரியர் என்னோட ஆளு. நீ அவளிடம் பேசக் கூடாது. அப்படிப் பேச்சுவார்த்தை வைச்சிகிட்டா உன்னத் தொலைத்துவிடுவேன்' என்றிருக்கிறார்.

அரியலூர்
அரியலூர்

அதற்கு அவர், 'நாங்கள் ரெண்டு பேரும் டீச்சர்தான். நாங்கள் பாடம் சம்பந்தமாகப் பேசிக்கொள்வோம். அதைக் கேட்க நீ யாருடா' என்று கேட்க இருவருக்கும் பள்ளியிலேயே மோதல் ஏற்பட்டிருக்கிறது. அங்குள்ள மற்ற ஆசிரியர்கள் திருமானூர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். போலீஸார் அவர்கள் இருவரையும் அழைத்து, அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஏன்டா நீங்க சண்டை போடுறீங்க. இனி இப்படி நடந்தால் கைது செய்வோம். அப்படிச் செஞ்சா உங்களுக்குத்தான் அசிங்கமாகியிடும்" என்று எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள்.

மீண்டும் ஆசிரியர் ஹென்றி, சத்யபிரியாவிடம் பேசியிருக்கிறார். இந்த விஷயம் ராஜிவ்ராஜனுக்குத் தெரிந்தது. மீண்டும் ஆட்களை அழைத்துக்கொண்டுபோய் மிரட்டியிருக்கிறார். இதனால் கடுப்பான ஆசிரியர் ஹென்றி அடியாட்களை அழைத்துக்கொண்டு ராஜிவ்ராஜனை உருட்டுக் கட்டையால் சரமாரியாக அடித்ததோடு அரிவாளால் ஐந்து இடங்களில் கடுமையாக வெட்டியிருக்கிறார். அதைத் தடுக்க வந்த அவரின் தந்தை நடராஜனையும் வெட்டியிருக்கிறார்கள். இதுகுறித்து திருமானூர் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆசிரியர் ஹென்றி
ஆசிரியர் ஹென்றி

ஹென்றி மற்றும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ்குமார், செல்வகுமார், சங்கர், ஜான்பிரபாகரன் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டக் கல்வி அலுவலரால் ஆசிரியர் ஹென்றி தற்போது பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.