Published:Updated:

`சீருடையில் கோயில் முன் அசுத்தம்; போதையில் கார் டிரைவிங்?' - சர்ச்சையில் சிக்கிய விருதுநகர் போலீஸ்

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

போதையில் காவல்துறை அதிகாரி ஒருவர் செய்த செயல் பொதுமக்களை முகம்சுழிக்க வைத்திருக்கிறது.

பாண்டியராஜன்
பாண்டியராஜன்

விருதுநகரில் போதையிலேயே கார் ஓட்டி வந்து கோயிலுக்கு முன் அசுத்தம் செய்த சார்பு ஆய்வாளரை காவல்துறையினர் எச்சரித்து அங்கே இருந்து விரட்டி அனுப்பினர்.

வாக்குவாதம்
வாக்குவாதம்
மினி லாரியில் கடத்தப்பட்ட மின்விசிறி, விளக்கு, நாற்காலி! - போலீஸ் நிலையத்திலேயே விளையாடிய திருடன்

விருதுநகர் அருகே உள்ள வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாண்டியராஜன். நேற்று இரவு காரில் வந்த அவர் விருதுநகர் மாரியம்மன் கோயில் தெப்பம் அருகே உள்ள பிள்ளையார் கோயில் முன் சிறுநீர் கழித்தார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சிலர் பாண்டியராஜனைக் கண்டித்தனர். இவர் அடிக்கடி போதையில்தான் இருப்பார் எனக் காவல்துறையினரே தெரிவிக்கின்றனர். இந்தத் தகவல் காவல்துறையினருக்குக் கிடைத்ததையடுத்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது,``சாதாரண பொதுமக்கள் பைக் ஓட்டினாலே பயந்து பயந்துதான் செல்ல வேண்டியுள்ளது. ஆங்காங்கே நிற்கும் காவல்துறையினர் மறித்து ஏதாவது காரணம் சொல்லி ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கின்றனர். ஆனால் சீருடையில் உள்ள ஒரு காவலரே மது அருந்திவிட்டு தானே வாகனம் கார் ஓட்டி வந்திருக்கிறார். மேலும், கோயிலுக்கு முன் அசுத்தம் செய்கிறார். காவலர் என்றால் எந்தத் தவறும் செய்யலாமா?'' எனக் கேள்வி எழுப்பினர்.

பாண்டியராஜன்
பாண்டியராஜன்
`நீங்க ஏன் ஹெல்மெட் போடல?'- அபராதம் விதித்த போலீஸை குறிவைத்துப் பிடித்த இளைஞர்

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சிவபிரசாத்திடம் கேட்டபோது, ``இந்தச் சம்பவம் குறித்து பாண்டியராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டது. `தனக்கு உடல் ரீதியாக சில பாதிப்புகள் உள்ளன. தன்னால் சிறிது நேரம்கூட சிறுநீர் கழிக்காமல் இருக்க முடியாது. அதனால்தான் இப்படி நடந்துள்ளது. இருந்தாலும், தான் செய்தது தவறுதான். இனி இதுபோன்ற எந்தத் தவறும் செய்யமாட்டேன்' எனத் தெரிவித்தார். அவரை எச்சரித்து அனுப்பியுள்ளோம். ஆனால், அவர் போதையில் இருந்தது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதுகுறித்தும் விசாரிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.