Published:Updated:

`விஷமாக மாறிய நீர் நிலைகள்; செத்துமடிந்த கால்நடைகள்!’ - ரசாயன கழிவுகளால் திணறும் ராணிப்பேட்டை

உயிரிழந்த மாடு

ரசாயனம் கலந்த தண்ணீரைக் குடித்து மூன்று மாடுகள் உயிரிழந்த சம்பவம், ராணிப்பேட்டை மக்களை அச்சத்தில் உறையச் செய்துள்ளது.

`விஷமாக மாறிய நீர் நிலைகள்; செத்துமடிந்த கால்நடைகள்!’ - ரசாயன கழிவுகளால் திணறும் ராணிப்பேட்டை

ரசாயனம் கலந்த தண்ணீரைக் குடித்து மூன்று மாடுகள் உயிரிழந்த சம்பவம், ராணிப்பேட்டை மக்களை அச்சத்தில் உறையச் செய்துள்ளது.

Published:Updated:
உயிரிழந்த மாடு

பாலாறும் பொன்னையாறும் சங்கமிக்கும் பகுதியில் அமைந்துள்ள ராணிப்பேட்டை வளமான விவசாய பூமி. 1967-ம் ஆண்டில் `சிப்காட்’ அமைப்பதற்காக ராணிப்பேட்டை பகுதியில் காரை, மணியம்பட்டு, நரசிங்கபுரம், வாணாபாடி, முகுந்தராயபுரம் ஆகிய கிராமங்களில் 710 ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியது தமிழக அரசு. தொடர்ந்து, பல்வேறு ரசாயன தொழிற்சாலைகளும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் எந்தவிதமான கட்டுப்பாடுமின்றி கழிவுகளை நிலத்திலும் நீர் நிலைகளிலும் விடுவதால், ராணிப்பேட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. சுமார் 50 ஆண்டுகளாக இந்த அவலம் தொடர்கிறது.

ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை

சிப்காட் பகுதியில் முதலில் தொடங்கப்பட்ட நிறுவனம், `திருமலை கெமிக்கல்ஸ்’. இந்த நிறுவனம் காரை ஏரி, புளியங்கண்ணு ஏரி மற்றும் பாலாறு போன்ற நீர் நிலைகளில் கழிவுநீரைத் திறந்துவிடுவது, செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதிசெய்யப்பட்டது. அதனால், 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த நிறுவனம்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு 18,06,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, `ராணிப்பேட்டையை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும்’ என மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், `சிப்காட் வளாகத்தில் திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம், மல்லாடி ட்ரக்ஸ் நிறுவனத்தின் இரண்டு தொழிற்சாலைகள், அல்ட்ரா மரைன் பிக்மென்ட்ஸ் நிறுவனம், தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கான இரண்டு மத்திய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவை சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன’ என்று பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆறு நிறுவனங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 23 சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கும் சேர்த்து மொத்தம் 75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

நீர் நிலைகளில் விடப்பட்ட ரசாயனக் கழிவு
நீர் நிலைகளில் விடப்பட்ட ரசாயனக் கழிவு

இதுபற்றி பிப்ரவரி 12-ம் வெளிவந்த `ஜூனியர் விகடன்’ இதழில் `மனிதர் வாழத் தகுதியற்ற பூமியா ராணிப்பேட்டை?’ என்ற தலைப்பில் விரிவான கட்டுரையை எழுதியிருந்தோம். கட்டுரையில், புகாருக்குள்ளான நிறுவனங்களின் விளக்கத்துடன் பாலாற்றில் அபாயகரமான ரசாயனக் கழிவுநீரை திறந்து விடுவதையும் புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்தோம். ராணிப்பேட்டை மாவட்டக் கலெக்டர் திவ்ய தர்ஷினி மற்றும் காந்தி எம்.எல்.ஏ ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தனர். ஆனால், புகாருக்குள்ளான நிறுவனங்களிலிருந்து அபாயகரமான கழிவுநீர் இப்போதும் வெளியேற்றப்பட்டு வருகிறது என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் ராணிப்பேட்டை மக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், சிப்காட் பாரதி நகரில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த கந்தசாமி என்பவருக்குச் சொந்தமான சினைப் பசு உட்பட மூன்று மாடுகள் திடீரென உயிரிழந்து கிடந்தன. ஒரு மாடு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. கால்நடை மருத்துவர்களின் பரிசோதனையில், அங்குள்ள நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ரசாயனம் கலந்த தண்ணீரைக் குடித்ததால் மாடுகள் இறந்ததாகத் தெரிய வந்துள்ளது. அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குச் சென்று முறையிட்டபோது, மிரட்டி துரத்தியடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் `மூன்றெழுத்து’ அருள் ராமன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

`மூன்றெழுத்து’ அருள் ராமன்
`மூன்றெழுத்து’ அருள் ராமன்

நம்மிடம் பேசிய `மூன்றெழுத்து’ அருள் ராமன், ``ரசாயன கழிவுநீரை திறந்துவிட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகளைப் பறிகொடுத்த ஏழை விவசாயிக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும். பல ஏரிகளில் நீரின் நிறம் சிவப்பாக மாறிவிட்டது. நிலத்தடி நீரைக் குடிப்பவர்களுக்குத் தோல் அரிப்பு, சுவாசப் பிரச்னை, புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. கழிவுநீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை எந்த நிறுவனமும் கடைப்பிடிப்பதில்லை. சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களை நிரந்தரமாக மூட வேண்டும்’’ என்றார் கொதிப்புடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism