Published:Updated:

மதுரை மத்திய சிறையில் மோதிக்கொண்ட கைதிகள்... கல், பாட்டில் வீசியதால் பதற்றம்! - என்ன நடந்தது?

மோதிக்கொண்ட கைதிகள்
News
மோதிக்கொண்ட கைதிகள்

இன்று முதல்தளத்தில் இருக்கும் பழைய கைதிகளுக்கும், சில தினங்களுக்கு முன்பு சிறைக்கு வந்த திருச்சியைச் சேர்ந்த கைதிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மத்திய சிறைச்சாலையில் இன்று கைதிகள் மோதிக்கொண்டு, சிறை அதிகாரிகளுக்கு எதிராகக் கல் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறைக்கு வெளியே...
சிறைக்கு வெளியே...

மதுரை மத்திய சிறைச்சாலையில் 1,300-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில் இன்று முதல்தளத்தில் இருக்கும் பழைய கைதிகளுக்கும், சில தினங்களுக்கு முன்பு சிறைக்கு வந்த திருச்சியைச் சேர்ந்த கைதிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதைத் தொடர்ந்து மதிய உணவு இடைவேளையின்போது இரு தரப்புக்குமிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட, ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர்.

சாலையில் வந்து விழுந்த கற்கள்
சாலையில் வந்து விழுந்த கற்கள்

அப்போது கைதிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கைதிகள் சிலர் தங்களது உடலில் பிளேடுகளால் காயம் ஏற்படுத்திக்கொண்டு சிறைச்சாலைச் சுவர்களில் ஏறி நின்றுகொண்டு கூச்சலிட்டனர். வெளியே சாலைகளை நோக்கி கற்கள், பாட்டில்களைத் தூக்கி வீசி சிறை நிர்வாகத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைத் தொடர்ந்து சிறைக் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வம் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.

கல்வீச்சில் ஈடுபட்ட கைதிகளை, சிறைக் காவலர்கள் அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். மோதலில் காயம்பட்டவர்களுக்கு சிறை வளாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவருகின்றனர்.

ஆவேசமாகக் கைதிகள்
ஆவேசமாகக் கைதிகள்

மதுரை மத்திய சிறையில் கடந்த 2019-ல் இதுபோல் கைதிகள் சிறைச்சாலைச் சுவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது மீண்டும் சிறை வளாகத்திலேயே கைதிகள் பாட்டில்கள், கற்களை எறிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.