Published:Updated:

பாலியல் தொழிலில் தனி சாம்ராஜ்யம்!

பாலியல் தொழிலில் தனி சாம்ராஜ்யம்!
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் தொழிலில் தனி சாம்ராஜ்யம்!

10 சொகுசு வீடுகள்... 30 இளம் பெண்கள்... சொகுசு காரில் மொபைல் ‘சேவை’ - ரகசிய டைரியில் வி.ஐ.பி-கள் பட்டியல்!

பாலியல் தொழிலில் தனி சாம்ராஜ்யம்!

10 சொகுசு வீடுகள்... 30 இளம் பெண்கள்... சொகுசு காரில் மொபைல் ‘சேவை’ - ரகசிய டைரியில் வி.ஐ.பி-கள் பட்டியல்!

Published:Updated:
பாலியல் தொழிலில் தனி சாம்ராஜ்யம்!
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் தொழிலில் தனி சாம்ராஜ்யம்!
தஞ்சாவூரில் வட மாநில இளம் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதுடன், செங்கிப்பட்டிப் பகுதியில் காரிலிருந்து தள்ளிவிட்டு சென்ற தம்பதியர் குறித்து, கடந்த இதழில் எழுதியிருந்தோம். கைதுசெய்யப்பட்ட தம்பதியரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தஞ்சாவூரில் இந்தத் தம்பதியர் தலைமையில் ஒரு கும்பலே 10-க்கும் மேற்பட்ட சொகுசு வீடுகளை வாடகைக்கு எடுத்து, 30-க்கும் மேற்பட்ட இளம் பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம் தெரியவந்திருக்கிறது.
கைப்பற்றப்பட்ட வாகனங்கள்...
கைப்பற்றப்பட்ட வாகனங்கள்...

மேற்கண்ட விவகாரத்தில் தம்பதியர் செந்தில்குமார்-ராஜம், லஞ்ச வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், ராமச்சந்திரன், பழனிவேல் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீஸ் தரப்பில் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“செந்தில்குமார் தஞ்சாவூர் கீழவீதியில் காதி கிராஃப்ட் கடை நடத்திவந்திருக்கிறார். இவரின் முதல் மனைவி தஞ்சையில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்ததால், போலீஸாருடன் செந்தில்குமாருக்கு நட்பு இருந்திருக்கிறது. இதற்கிடையே செந்தில்குமாருக்கு, கணவரைப் பிரிந்து வாழும் ராஜம் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது. இதனால், செந்தில்குமாரின் முதல் மனைவி விவாகரத்து பெற்றுவிடுகிறார். செந்தில்குமார், ராஜத்தைத் திருமணம் செய்துகொள்கிறார்.

செந்தில்குமார் வீடு...
செந்தில்குமார் வீடு...

இந்தநிலையில்தான் இந்தத் தம்பதியருக்கு பாலியல் தொழில் செய்துவந்த கலைவாணி என்ற பெண்ணின் நட்பு கிடைக்கிறது. இதன் மூலம் இவர்களும் பாலியல் தொழிலை நடத்த ஆரம்பிக்கிறார்கள். செந்தில்குமார் தனக்கு தஞ்சாவூரில் போலீஸாருடன் இருக்கும் நட்பைப் பயன்படுத்தி, பாலியல் தொழிலை விரிவுபடுத்துகிறார். குறிப்பாக, எஸ்.ஐ நண்பரான பிரபாகரனை இதற்குப் பெரிதும் பயன்படுத்திக் கொள்கிறார்.

ஒருகட்டத்தில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் பிரபாகரன். பிறகு அவரும் முழுநேரப் பாலியல் தொழில் புரோக்கராகிவிடுகிறார். இந்த கும்பல் மேலும் சிலரைச் சேர்த்துக்கொண்டு, போலீஸ் வட்டத்தில் தங்களுக்கிருக்கும் பழக்கத்தைப் பயன்படுத்தி, தொழிலை பலப்படுத்திக் கொண்டது.

பிரபாகரன் - செந்தில்குமார் - ராஜம் - ராமச்சந்திரன் - பழனிவேல்
பிரபாகரன் - செந்தில்குமார் - ராஜம் - ராமச்சந்திரன் - பழனிவேல்

பாலியல் தொழிலுக்காக கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் சுமார் 30 இளம் பெண்களை வரவழைத்துள்ளனர். இவர்கள் தஞ்சையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட சுமார் பத்து சொகுசு வீடுகளில் தங்கவைக்கப்பட்டார்கள். இதற்காகவே உரிமையாளர்கள் அருகில் இல்லாத வீடுகளாகத் தேர்வு செய்திருக்கிறார்கள். பெரும்பாலும் நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் சம்பளம் தருவதாக ஆசைகாட்டியே இளம்பெண்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள்” என்ற போலீஸார் மேலும் சில விவரங்களையும் விவரித்தார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஒரு பெண்ணைத் தொடர்ந்து பத்து நாள்கள் மட்டுமே வைத்திருப்பார்கள். பிறகு அவரை அனுப்பிவிட்டு மற்றொரு பெண்ணை வரவழைப்பார்கள். செந்தில்குமார் - ராஜம் தம்பதியர் இதற்காகவே ஒரு டைரியை மெயின்டெயின் செய்தார்கள். அதில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் மொபைல் எண்கள் மற்றும் சுமார் ஆயிரம் கஸ்டமர்களின் மொபைல் எண்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் சோதனை செய்தபோது தஞ்சாவூரிலுள்ள பல முக்கிய வி.ஐ.பி-க்கள் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள் இவர்களுக்கு கஸ்டமர்களாக இருப்பது தெரியவந்திருக்கிறது. உயர் ரக கார் ஒன்றையும் படுக்கை வசதியுடன் மாற்றி, அதையும் பாலியல் தொழில் மொபைல் வாகனமாக மாற்றியிருக்கிறார்கள்.

பாலியல் தொழிலில் தனி சாம்ராஜ்யம்!

இவர்களுக்கு திருப்பூரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் அங்கு வேலைக்கு வரும் அழகான வட மாநிலப் பெண்களை சப்ளை செய்திருக்கிறார். இதேபோல பெங்களூருவைச் சேர்ந்த சுகுமாறன் என்பவரும் கர்நாடகாவிலிருந்து இளம் பெண்களை அனுப்பியிருக்கிறார். இந்த கும்பல் தங்கள்மீது சந்தேகம் வராமலிருப்பதற்காக தஞ்சாவூரில் ஃபைனான்ஸ் மற்றும் டிராவல்ஸ் தொழிலும் நடத்தியிருக்கிறது.

செந்தில்குமார்-ராஜம் தம்பதியருக்கு பாலியல் தொழில் மூலமாகவே அரசியல் உள்ளிட்ட அதிகார மட்டங்களில் பெரும் புள்ளிகளின் ஆசி இருந்திருக்கிறது. அவர்களைப் பயன்படுத்தியே, பெரிய அளவில் தங்கள்மீது நடவடிக்கையும் பாயாமல் பார்த்துக்கொண்டார்கள். அப்படியும் செந்தில்குமார் ஒருமுறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பிறகு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, வெளியே வந்துவிட்டார். இப்படி 15 ஆண்டுகளாக பாலியல் தொழில் நடத்தியே சுமார் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்திருக்கிறார்கள்” என்றார்கள்.

மகேஷ்வரன்
மகேஷ்வரன்

தஞ்சாவூர் எஸ்.பி-யான மகேஷ்வரனிடம் பேசினோம். “பல ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த கும்பலைப் பிடித்திருக்கிறோம். கைது செய்யப்பட்டவர்கள்மீது விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல பெண்கள் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யப்பட்டிருக் கிறார்கள். அதனால், இவர்கள்மீது கற்பழிப்பு, கொலை முயற்சி வழக்குகளும் பதியப்படும். இவர்களுக்கு மிகமிகக் கடுமையான தண்டனையை வாங்கிக் கொடுப்போம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism