Published:Updated:

ஆன்லைனில் கசிந்த குளியல் வீடியோக்கள்; போராட்டத்தில் இறங்கிய சண்டிகர் பல்கலை ஹாஸ்டல் மாணவிகள்!

போராட்டத்தில் இறங்கிய மாணவிகள்

பஞ்சாப் மாநிலத்தில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை பகிர்ந்ததாக மாணவி ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்

ஆன்லைனில் கசிந்த குளியல் வீடியோக்கள்; போராட்டத்தில் இறங்கிய சண்டிகர் பல்கலை ஹாஸ்டல் மாணவிகள்!

பஞ்சாப் மாநிலத்தில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை பகிர்ந்ததாக மாணவி ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்

Published:Updated:
போராட்டத்தில் இறங்கிய மாணவிகள்

பஞ்சாப் மாநிலம், மோஹாலியில், சண்டிகர் பல்கலைக்கழகம் இருக்கிறது. இங்கிருக்கும் விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவிகள் குளிக்கும்போது யாரோ ஒருவர் மர்மமாக வீடியோ பதிவுசெய்து அதை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.
வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதைத் தொடர்ந்து, மாணவிகள் கல்லூரி விடுதியிலேயே போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவி ஒருவர், ``எங்களுக்குத் தெரியாமல் நாங்கள் குளிப்பதை வீடியோ எடுத்து அதை இணையத்தில் கசியவிட்டிருக்கிறார்கள். பல்கலைக்கழக நிர்வாகம் எங்கள் போராட்டத்தை முடக்க முயற்சிக்கிறது. குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

போலீஸார் இது தொடர்பான விசாரணையில் இறங்கியபோது, சக மாணவி ஒருவர் சுமார் 60 மாணவிகளின் குளியல் வீடியோக்களை தன்னுடைய ஆண் நண்பருக்கு பகிர்ந்தது தெரியவந்தது. அதையடுத்து அந்த மாணவியைக் கைதுசெய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கல்லூரி விடுதியிலேயே போராட்டம்
கல்லூரி விடுதியிலேயே போராட்டம்
ட்வீட்டர்

இந்த விவகாரம் மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பஞ்சாப் பள்ளிக் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங், ``பல்கலைக்கழக மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. இது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் கண்ணியம் தொடர்பானது. இது நமது சமூகத்திற்கான இப்போதைய சோதனை. இதை முறியடிக்க வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு பெண் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மேலும் விசாரணை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவிகளில் 8 பேர் திடீரென தற்கொலைக்கு முயன்றதால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.