Published:Updated:

`என்னை லவ் பண்ண மாட்டியா?’ - இளம்பெண்ணை ஷூவால் அடிக்கப் பாய்ந்த இளைஞர்

இளம்பெண்

அந்தப் பேருந்தில் இருந்தவர்கள் நவீனை தடுத்துத் தள்ளியிருக்கின்றனர். அப்படியும் கோபம் அடங்காத நவீன், மாணவி அபிநயாவை கன்னத்தில் அடித்திருக்கிறார். தொடர்ந்து, ‘என்னை லவ் பண்ணலைன்னா உன்னை கொலை பண்ணிடுவேன். யாருக்கும் கிடைக்காம ஆக்கிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார்.

`என்னை லவ் பண்ண மாட்டியா?’ - இளம்பெண்ணை ஷூவால் அடிக்கப் பாய்ந்த இளைஞர்

அந்தப் பேருந்தில் இருந்தவர்கள் நவீனை தடுத்துத் தள்ளியிருக்கின்றனர். அப்படியும் கோபம் அடங்காத நவீன், மாணவி அபிநயாவை கன்னத்தில் அடித்திருக்கிறார். தொடர்ந்து, ‘என்னை லவ் பண்ணலைன்னா உன்னை கொலை பண்ணிடுவேன். யாருக்கும் கிடைக்காம ஆக்கிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார்.

Published:Updated:
இளம்பெண்

புதுச்சேரி மாநிலம், கிராமப் பகுதியான திருபுவனையைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரின் மகள் அபிநயா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) புதுச்சேரியிலுள்ள ஒரு அரசுக் கல்லூரியில் படித்து வருகிறார். 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கல்லூரிக்கு தினமும் பேருந்தில் சென்று வரும் அபிநயா, நேற்று முன் தினம் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பேருந்தில் திருபுவனையைச் சேர்ந்த மூர்த்தியின் மகன் நவீன் மற்றும் அவரின் நண்பர்கள் ஹரி, சாந்தகுமார் உள்ளிட்டவர்கள் ஏறியிருக்கின்றனர்.

புதுச்சேரி
புதுச்சேரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது அவர்கள் அனைவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மாணவி அபிநயாவிடம் பேச்சு கொடுத்த நவீன், ’உனக்கு சாந்தகுமாரை தெரியுமா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு, ’அப்படி யாரையும் எனக்குத் தெரியாது’ என்று கூறிய அபிநயாவிடம், ‘நான் உன்னை லவ் பண்றேன்’ என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி அபிநயா, நவீனைவிட்டு விலகி நின்றிருக்கிறார். அதில் கோபமடைந்த நவீன், ‘என்னை லவ் பண்ண மாட்டியா ? அவ்ளோ திமிரா உனக்கு?’ என்று ஆபாசமாக திட்டிக்கொண்டே தனது காலில் இருந்த ஷூவை கழற்றி அடிக்கப் பாய்ந்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது அந்தப் பேருந்தில் இருந்தவர்கள் நவீனை தடுத்துத் தள்ளியிருக்கின்றனர். அப்படியும் கோபம் அடங்காத நவீன், மாணவி அபிநயாவை கன்னத்தில் அடித்திருக்கிறார். தொடர்ந்து, ‘என்னை லவ் பண்ணலைன்னா உன்னை கொலை பண்ணிடுவேன். யாருக்கும் கிடைக்காம ஆக்கிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார். அதையடுத்து அந்தப் பேருந்தை நிறுத்திய பயணிகள், நவீன் மற்றும் அவரின் நண்பர்களை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டிருக்கின்றனர். அபிநயா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருபுவனை காவல் நிலையத்தின் வட்ட ஆய்வாளர் ராஜ்குமார், இந்திய தண்டனைச் சட்டங்கள் 294(b), 323, 354(b), 506(i) உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்திரிப்புப் படம்

ஒரு பெண் காதலை நிராகரிப்பது அந்த பெண்ணின் உரிமையே தவிர, அது ஆணுக்கான அவமானம் அல்ல. உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்று பெண்ணிடம் சொல்லும்போது ஆண்களுக்கு இருக்கும் தைரியம், அந்த காதலை அந்த பெண் நிராகரிக்கும்போதும் இருக்க வேண்டும். வெகுஜன ஊடகங்களான காட்சி ஊடகங்கள், பாடல் வரிகள், திரைக்கதை வசனங்கள் போன்றவையும் காதலிக்க மறுக்கும், அல்லது நிராகரிக்கும் பெண்களின் உளவியலை எடுத்துச் சொல்வதில்லை. பலநூறு ஆண்டுகளாக வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த பெண்கள் தன்னம்பிக்கையுடன் கல்வி, வேலைக்காக வெளியே வரும் போது பல கட்டப் போராட்டங்களைக் கடந்து, சவாலான சூழலை ஏற்கிறார்கள். நாம் அவர்களுக்குரிய மரியாதையை கொடுக்க முடியவில்லை என்றாலும், அவர்களை தொல்லை செய்யக் கூடாது என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் வன்முறை எதற்கும் தீர்வாகாது என்பதுடன், ’No means No’ என்ற வார்த்தைகளுக்குள் புதைந்து கிடங்கும் உட்பொருளையும் உணர வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism