Published:Updated:

ராஜபாளையம்: சொத்து பிரிப்பதில் தகராறு... சகோதரியை வெட்டிக் கொன்ற தம்பி!

அரசு மருத்துவமனை

ராஜபாளையம் அருகே பூர்வீகச் சொத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சகோதரியை, உடன்பிறந்த தம்பியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜபாளையம்: சொத்து பிரிப்பதில் தகராறு... சகோதரியை வெட்டிக் கொன்ற தம்பி!

ராஜபாளையம் அருகே பூர்வீகச் சொத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சகோதரியை, உடன்பிறந்த தம்பியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
அரசு மருத்துவமனை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் டி.பி.மில்ஸ் சாலையில் உள்ள செவல்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (50). இவருடைய, உடன் பிறந்த மூத்த சகோதரி பாஞ்சாலி (58). இவர், அழகாபுரியில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

அக்கா, தம்பி இருவருக்கும் சொந்தமான பூர்வீக வீடு ஒன்று செவல்பட்டியில் உள்ளது. இந்தச் சொத்தைச் சரிசமமாகப் பிரிப்பதில் பாஞ்சாலிக்கும் ரமேஷுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்த நிலையில் பூர்வீக வீட்டின் முன் வைத்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொலை
கொலை

வாக்குவாதம் முற்றிய நிலையில் ரமேஷ், தனது சகோதரி பாஞ்சாலியை அரிவாளால் வெட்டியதாகத் தெரிகிறது. கழுத்துப் பகுதியில் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பாஞ்சாலி ரத்த வெள்ளத்தில், அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த வடக்கு காவல் நிலைய போலீஸார், பாஞ்சாலியின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் சரணடைந்த ரமேஷைக் கைதுசெய்த போலீஸார், சம்பவம் குறித்து அவரிடம் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism