Published:Updated:

ராஜபாளையம்: நிர்வாண நிலையில், கழிவுநீர் ஓடையில் இளைஞர் சடலம்... போலீஸ் விசாரணை!

கொலை

"இளைஞரின் தலை, முகம் உள்பட உடலின் பல்வேறு இடங்களில் ரத்தக்காயங்களுடன் நிர்வாண நிலையில் கழிவுநீர் ஓடையில் இறந்து கிடந்தார். அருகில் கிடைத்த அவரின் சட்டையில் தனியார் பள்ளியின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது".

ராஜபாளையம்: நிர்வாண நிலையில், கழிவுநீர் ஓடையில் இளைஞர் சடலம்... போலீஸ் விசாரணை!

"இளைஞரின் தலை, முகம் உள்பட உடலின் பல்வேறு இடங்களில் ரத்தக்காயங்களுடன் நிர்வாண நிலையில் கழிவுநீர் ஓடையில் இறந்து கிடந்தார். அருகில் கிடைத்த அவரின் சட்டையில் தனியார் பள்ளியின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது".

Published:Updated:
கொலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடியிலிருந்து N.புதூர் செல்லும் சாலையோரம் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக, காவல் துறையினருக்கு அப்பகுதியின் வழியே சென்றவர்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில், காவல்துறையினர் வந்து பார்த்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் தலை, முகம் உள்பட உடலின் பல்வேறு இடங்களில் ரத்தக்காயங்களுடன் நிர்வாண நிலையில் கழிவுநீர் ஓடையில் இறந்து கிடந்தார். அருகில் கிடைத்த சட்டையில் வத்திராயிருப்பில் செயல்படும் தனியார் பள்ளியின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. இதை ஆதாரமாக கொண்டு போலீஸார் விசாரணையை தொடங்கினர்.

இம்மானுவேல்
இம்மானுவேல்

இதற்கிடையில் இளைஞர் இறந்து கிடந்த தகவல் அப்பகுதி மக்களிடயே பரவியதால், சம்பவ இடத்தை சுற்றிலும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சடலமாக கிடந்தவர் அப்பகுதியை சேர்ந்தவர் இல்லை என்பதால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில் சடலத்தை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தசம்பவம் குறித்து காவல்துறையினரிடம் கேட்கையில், "போலீஸின் தொடர் விசாரணையின் காரணமாக சடலமாக கிடந்தவர் தென்காசி மாவட்டம் வேலாயுதபுரத்தை சேர்ந்த இம்மானுவேல் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 10-ந்தேதி இரவு 10.30 மணிக்கு வேலாயுதபுரத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் சொல்கின்றனர். இந்தநிலையில், பின்தலையில் இடதுபுறத்தில் வெட்டுக்காயமும், உடல் முழுவதிலும் ஊமைக் காயங்களுடனும் இம்மானுவேல் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். எனவே இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில், கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்படுவார்கள்" என்றனர்.