Published:Updated:

'ரான்பாக்ஸி' ஷிவிந்தர் சிங் அதிரடி கைது!- ரூ.740 கோடி நிதி மோசடியில் சிக்கினார்

கடன் பெற்றுள்ள நிறுவனங்கள், முறையான நிதி ஆதாரங்கள் இல்லாதவை என்பது தெரியவந்துள்ளது.

ரேன்பேக்ஸி சிங் சகோதரர்கள்
ரேன்பேக்ஸி சிங் சகோதரர்கள்

ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷிவிந்தர்சிங்கை ரூ.740 கோடி நிதி மோசடியில் மத்தியப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்துள்ளனர். ரான்பாக்ஸி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர், ஷிவிந்தர் சிங். இவரின் சகோதரர் மாவிந்தர் சிங்குக்கு சொந்தமானது, ரெலிகேர் என்டர்பிரைசஸ் நிறுவனம். ரான்பாக்ஸியில் இருந்து ஷிவிந்தர் சிங்கும் ரெலிகேர் நிறுவனத்தில் இருந்து, மாவிந்தர் சிங்கும் விலகினர். ரெலிகேர் என்டர்பிரைசஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ரெலிகேர் ஃபைன்வெஸ்ட் நிறுவனத்தின் நிர்வாகம் மாறியது.

ரேன்பேக்ஸி நிறுவனம்
ரேன்பேக்ஸி நிறுவனம்

புதிய நிர்வாகம் கணக்கு வழக்குகளை ஆராய்ந்தபோது, ரூ.740 கோடி லோன் கொடுக்கப்பட்டு, அந்தத் தொகை ஷிவிந்தர்சிங் மற்றும் அவரின் சகோதரர் மாவிந்தர்சிங் நடத்தும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, ரெலிகேர் நிறுவனம் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து, ஷிவிந்தர் சிங், மால்விந்தர்சிங் ஆகியோரை லூதியானாவில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்தனர். ரெலிகேர் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சுனில் கோத்வானியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கார்ப்பரேட் வரிக்குறைப்பு... பொருளாதார மந்தநிலையை சரி செய்யுமா?

ரெலிகேர் என்டர்பிரைசஸின் துணை நிறுவனமான ரெலிகேர் ஃபைன்வெஸ்ட் சார்பில் பல நிறுவனங்களுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் பெற்றுள்ள நிறுவனங்கள், திரும்பச் செலுத்துவதற்கான நிதி ஆதாரங்கள் இல்லாதவை என்பது தெரியவந்துள்ளது. அந்த வகையில், ரெலிகேர் ஃபைன்வெஸ்ட் நிறுவனம் ரூ. 2,397 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

செபி
செபி

ஆர்.பி.ஐ மற்றும் செபி நியமித்த ஆடிட்டர் குழு நடத்திய ஆடிட்டிங்கில் இந்த மோசடி தெரியவந்துள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையிலும், சிங் சகோதரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் டெல்லி கொண்டுசெல்லப்பட்டு, மேற்கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது.