Published:Updated:

ராணிப்பேட்டை: ஆண் பக்தர்களுக்குப் பாலியல் தொல்லை; பணமோசடி! சாமியார் குண்டர் சட்டத்தில் அடைப்பு

சாந்தா சாமியார்
சாந்தா சாமியார்

மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வேலூரைச் சேர்ந்த பிரபல பாலியல் சாமியார்மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

வேலூர் திருவலம் பகுதியில், ஸ்ரீ ஸர்வமங்கள பீடத்தை நிறுவி, அதன் மடாதிபதியாக வலம்வந்தவர் `சாந்தா சுவாமிகள்’ என்கிற சாமியார். இவரது இயற்பெயர் சாந்தகுமார். நான்கு பக்தர்களிடம் 65 லட்சம் ரூபாயை மோசடி செய்த புகாரில், ராணிப்பேட்டை மாவட்ட போலீஸார் நவம்பர் 7-ம்தேதி சாந்தா சாமியாரை கைதுசெய்து, வாலாஜாபேட்டை கிளைச்சிறையில் அடைத்தனர்.

சாந்தா சாமியார்
சாந்தா சாமியார்

பணமோசடி புகார் மட்டுமல்லாமல், சாந்தா சாமியார்மீது பாலியல் சர்ச்சையும் எழுந்தது. தன்னிடம் ஆசிப்பெறுவதற்காக வந்த ஆண் பக்தர்கள் சிலரிடம் சாமியார் கட்டியணைத்து பாலியல் சீண்டல்களைச் செய்ததாகச் சொல்கிறார்கள். ‘ஜில் ஜில் சாமியார்’ என்றும் ஆண் பக்தர்கள் சிலர் சாமியாரைக் கேலி செய்வதுமுண்டும் என்கிறார்கள்.

`ஆண் பக்தர்களுடன் பாலியல் உறவு?’ - வேலூர் சாமியார்மீது வெடிக்கும் சர்ச்சை

ஃபேஸ்புக் பக்கத்தில், தன்னைப் பின்தொடரும் ஆண் பக்தர்களிடம், `மெசஞ்சர்’ செயலி மூலமாகவும் சாட்டிங் செய்து, அவர்களுக்குப் பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. சாட்டிங்கில், உள்ளாடையுடன் இருப்பதைப் போன்ற தனது ஆபாசப் படத்தையும் அவர் பகிர்வாராம். இதனால் பக்தர்கள் பலரும், தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் சாமியாரைப் பின்தொடராமல் `பிளாக்’ செய்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

சாந்தா சாமியார்
சாந்தா சாமியார்

இந்த நிலையில், குண்டர் தடுப்புக் காவலில் சாந்தா சாமியாரின் சிறைக்காவல் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை எஸ்.பி மயில்வாகனன் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் குண்டர் தடுப்புக் காவலில் சாமியாரை அடைக்க ஆணையிட்டுள்ளார். இதையடுத்து, வாலாஜாபேட்டை கிளைச்சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார் சாந்தா சாமியார்.

அடுத்த கட்டுரைக்கு