Published:Updated:

20 சதவிகிதம் கமிஷன் ஆசை; நீண்ட நாள் அலைக்கழிப்பு!- ரியல் எஸ்டேட் அதிபரைக் கொன்ற வங்கி மேலாளர்

ரியல் எஸ்டேட் அதிபர் கொல்லப்பட்ட வழக்கில், கோவையில் ஆக்சிஸ் வங்கி மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலை
கொலை

கோவை ஈச்சனாரி அருகே, 60 வயது மதிக்கத்தக்க ஓர் ஆணின் சடலம் கடந்த 3-ம் தேதி மீட்கப்பட்டது. விசாரணையில், அவர் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போத்தனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சண்முகம்
சண்முகம்

அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அவர் சுந்தாரபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது.

சதீஷிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சண்முகம் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். சதீஷ் சுந்தராபுரம் ஆக்சிஸ் வங்கி கிளையில் மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சதீஷ்
சதீஷ்

அப்போது, சதீஷ் டிசம்பர் மாதத்துடன் 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. எனவே, உங்களது நண்பர்களிடம் இருந்து பெற்றத் தந்தால், 15 முதல் 20 சதவிகித கமிஷனுக்கு அவற்றை மாற்றித் தருகிறேன் என்று சண்முகத்திடம் கூறியுள்ளார்.

மேலும், அதே வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ள மதுசூதனன் என்பவரிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை சண்முகத்துக்கு வழங்கியிருக்கிறார் சதீஷ்.

ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி

ஆனால், நீண்ட நாள்களாக பணத்தையும் கொடுக்காமல் உரிய பதிலையும் கொடுக்காமல் சண்முகம் அலைக்கழித்தாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சதீஷ், மதுசூதனன் மற்றும் மகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து சண்முகத்தைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சதீஷ், மதுசூதனன் மற்றும் மகேஸ்வரன் ஆகியோக்ரை கைது செய்த போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.