Published:Updated:

கணவனைக் கொல்ல கூலிப்படை; உதவிய காவலர்! - போலீஸுக்கு அழுத்தம் கொடுத்த மன்னார்குடி புள்ளி

அசிலா
அசிலா

யூசுப்பைக் கொலை செய்ய சிறைக் காவலர் செந்திகுமார் மற்றும் திருச்சியைச் சேர்ந்த வக்கீல் ஒருவரின் குமாஸ்தா ஆகியோர் உதவி செய்துள்ளனர்.

தஞ்சாவூரில் வல்லம் என்ற இடத்தில் காரில் சென்று கொண்டிருந்த ஃபைனான்ஸ் அதிபர் ஒருவரை வழிமறித்து மர்ம கும்பல் ஒன்று நடுரோட்டிலேயே வெட்டிக் கொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக அவரின் மனைவி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸ்காரர் ஒருவரும் இந்தக் கொலைக்கு உதவி செய்ததாக வெளியான தகவல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட யூசுப்
கொலை செய்யப்பட்ட யூசுப்

தஞ்சாவூரில் கடந்த மாதம் 25-ம் தேதி மதியம் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் யூசுப் என்ற ஃபைனான்ஸ் அதிபர் சென்றுகொண்டிருந்தார். அப்போது இரண்டு இரு சக்கரவாகனங்களில் திருச்சியிலிருந்து வந்த கூலிப்படையினர் காரை மறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு கல்லணை வழியாக மீண்டும் திருச்சிக்குத் தப்பிச் சென்றனர். இந்தக் கொலை தஞ்சைப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில், தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க தஞ்சை எஸ்.பி மகேஸ்வரன், எஸ்.ஐ கண்ணன் தலைமையிலான போலீஸாரை கொண்டு தனிப்படை அமைத்தார். இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் யூசுப்பின் இரண்டாவது மனைவி அசிலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், திருச்சியைச் சேர்ந்த கூலிப்படையினரிடம் ரூ.15 லட்சம் பேசி அவர்கள் மூலமாக இந்தக் கொலை செய்யப்பட்டதையும் அசிலா ஒப்புக் கொண்டார்.

கொலை செய்யப்பட்ட யூசுப்
கொலை செய்யப்பட்ட யூசுப்

பின்னர் திருச்சி மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த கூலிப்படையினரான சகாதேவன், பிரகாஷ், கேசவன், சந்துரு உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். அவர்களுடன் அசிலாவையும் சேர்த்து இதுவரை 11 பேரை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர். இதன் விசாரணையில் அசிலா பல்வேறு திடுக்கிடும் தகவல்களைப் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான ஜோசப், குவைத் நாட்டில் வேலை பார்த்தார். அப்போது இலங்கையைச் சேர்ந்த அசிலா என்பவரும் வேலை பார்த்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்கெனவே கல்யாணம் ஆகியிருந்த நிலையிலும், யூசுப் எனப் பெயர் மாற்றிக்கொண்டு அசிலாவைத் திருமணம் செய்துகொண்டார் ஜோசப்.

யூசுப் மனைவி அசிலா
யூசுப் மனைவி அசிலா

குவைத்தில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள காயிதே மில்லத் நகர் மற்றும் பல பகுதிகளில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கின்றனர். அபார்ட்மென்ட் வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டனர். அத்துடன் விவசாயப் பன்ணை மற்றும் ஃபைனான்ஸ் தொழிலும் செய்கின்றனர். தற்போது அசிலாவின் பெயரில் இலங்கையில் இரண்டரை கோடிக்கான சொத்தும், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் யூசுப் பெயரில் 15 கோடிக்கான சொத்தும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூரில் இருந்தபடி அசிலா சொத்துகளைக் கவனித்துக் கொள்ள யூசுப் குவைத்தில் வேலை பார்த்ததுடன் அவ்வப்போது ஊருக்கும் வந்துள்ளார். இதையடுத்து அசிலாவின் நடத்தையில் யூசுப்புக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அசிலா தனது அபார்ட்மென்டில் வாடகைக்கு குடியிருந்த திருச்சி சிறையில் காவலராக இருந்த செந்தில்குமார் என்பவரின் உதவியுடன் விளார் சாலையில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் யூசுப் வைத்திருந்த நகை, பணம், சொத்துப் பத்திரம் உள்ளிட்டவற்றை வங்கி மேனேஜரின் உதவியுடன் உடைத்து எடுத்துவிட்டார்.

கைது செய்யப்பட்ட கூலிப்படையை சேர்ந்தவர்
கைது செய்யப்பட்ட கூலிப்படையை சேர்ந்தவர்

இதுதொடர்பாக, யூசுப் 2018-ம் ஆண்டு அசிலா, போலீஸ்காரர் செந்தில்குமார், வங்கி மேனேஜர் ஆகியோர் மீது தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால், அசிலா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அசிலா திருச்சிக்குச் சென்றுவிட்டார். ஆனாலும் இருவருக்கும் பிரச்னை இருந்து வந்தது. யூசுப், அசிலாவுக்கு சொத்துக்களைத் தர முடியாது என்றும் கூறிவிட்டார். மேலும் பல பெண்களுடன் யூசுப்புக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையும் அசிலா கண்டித்துள்ளார். இந்நிலையில்தான் கூலிப்படையை ஏவி, யூசுப்பை கொலை செய்ததாகக் கூறியதாகத் தெரிவித்தனர்.

மற்றும் சிலரோ, அசிலாவுக்கும் மயிலாடுதுறை சிறையில் சிறைக் காவலராக இருக்கும் செந்தில்குமாருக்கும் தொடர்பு இருந்தது. ஒருமுறை அசிலாவை யூசுப் அடித்துள்ளார். அப்போது செந்தில்குமார் அவர்களுடைய அபார்ட்மென்டில் குடியிருந்துள்ளார். சண்டையில் அடி தாங்க முடியாமல் செந்தில்குமாரின் வீட்டில் அசிலா ஓர் இரவு தங்கியதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட கூலிப்படையை சேர்ந்தவர்
கைது செய்யப்பட்ட கூலிப்படையை சேர்ந்தவர்

அப்போது யூசுப், தனது மனைவியுடன் பழகுவது குறித்து செந்தில்குமாரைக் கண்டித்ததுடன், போலீஸில் புகாரும் அளித்துள்ளார். அசிலா திருச்சிக்குச் சென்ற பிறகும் இருவருக்கும் தொடர்பு இருந்தது. அசிலாவுக்கு மேலும் சில ஆண் நண்பர்கள் இருந்துள்ளனர். அவர்கள் மூலமாகவே யூசுப்பை கொலை செய்யத் திட்டம் வகுத்துள்ளார்.

இந்தக் கொலைக்கு சிறைக் காவலர் செந்திகுமார் மற்றும் திருச்சியைச் சேர்ந்த வக்கீல் ஒருவரின் குமாஸ்தா என இருவரும் உதவி செய்துள்ளனர். தொடக்கத்தில் செந்தில்குமார் மற்றும் குமாஸ்தாவிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். குமாஸ்தா மன்னார்குடி அ.தி.மு.க புள்ளி ஒருவருக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது. அவர் அழுத்தம் கொடுத்ததால், இருவரையுமே இந்தக் கொலை வழக்கில் போலீஸார் சேர்க்கவில்லை" என்றனர்.

உடைக்கப்பட்ட லாக்கர்; தினமும் ஒரு பெண்! - கணவனைக் கொல்ல 15 லட்சம் பேரம் பேசிய மனைவி

ஆனால், போலீஸ் தரப்பில் இதை மறுப்பதுடன், ``அசிலாவிடம் செந்தில்குமார் பணம் கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தை திரும்ப வாங்கிக் கொடுக்கும்படி கடந்த மாதம் அவர் மீது தஞ்சை மாவட்ட காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாகத்தான் செந்தில்குமார் முன்ஜாமீன் பெற்றுள்ளார். அவரைத் தேவையில்லாமல் இந்தக் கொலையில் தொடர்புபடுத்தி சிலர் கூறி வருகின்றனர்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு