Published:Updated:

`கடன் கேட்டேன், கொடுக்கலை; அதான் கொன்னுட்டேன்!’ - ஈரோட்டில் பேராசிரியரின் மனைவி கொடூரக் கொலை

கொடூரக் கொலை

ஆறு பவுன் தங்க நகைக்காக பேராசிரியரின் மனைவி கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

`கடன் கேட்டேன், கொடுக்கலை; அதான் கொன்னுட்டேன்!’ - ஈரோட்டில் பேராசிரியரின் மனைவி கொடூரக் கொலை

ஆறு பவுன் தங்க நகைக்காக பேராசிரியரின் மனைவி கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
கொடூரக் கொலை

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த கவிஞர் கண்ணதாசன் நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் கணேசன் (61). ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர். இவரின் மனைவி வளர்மதி (55). இவர்களின் மகள்கள் இருவரும் திருமணமாகி வெளியூர்களில் வசித்துவருகின்றனர். இந்நிலையில், கணேசன் நேற்று ஒரு வேலை விஷயமாக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அந்த நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் வளர்மதி கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையைப் பறிக்க முயன்றிருக்கிறார். அதைத் தடுக்க வளர்மதி கத்திக் கூச்சலிட, கையில் வைத்திருந்த கத்தியால் அந்த மர்ம நபர் வளர்மதியில் கழுத்து, முதுகு, மார்புப் பகுதி என ஐந்து இடங்களில் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டு ஆறி பவுன் தாலிக்கொடி மற்றும் தங்க செயின் ஒன்றையும் பறித்துச் சென்றுள்ளார்.

கொலையான வளர்மதி
கொலையான வளர்மதி

இந்நிலையில், வேலைக்குச் சென்ற இடத்திலிருந்து மனைவி வளர்மதிக்கு கணேசன் போன் அடிக்க, எதிர்முனையில் எந்த பதிலும் இல்லாமல் இருந்திருக்கிறது. இதில் பதறிப்போன கணேசன் வீட்டுக்குப் போய் பார்த்தபோது வளர்மதி கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதைப் பார்த்துக் கதறியழுதவர் உடனடியாக சித்தோடு போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த சித்தோடு போலீஸார், வளர்மதியின் சடலத்தைக் கைப்பற்றி பெருந்துறையிலுள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொலையான வளர்மதி
கொலையான வளர்மதி

மேலும், சம்பவ இடத்திலிருந்த கைரேகைத் தடயங்கள், மோப்ப நாய் மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளியைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், பவானி காளிங்கராயன் பஸ் ஸ்டாப்பில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த ராஜா (எ) நிக்கோலஸ் (40) என்பவரை போலீஸார் விசாரித்துள்ளனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக அவர் உளறியிருக்கிறார். ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து முறைப்படி விசாரிக்க, `நகைக்காக வளர்மதியைக் கொன்றது நான்தான்’ என ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், விசாரணையில், ``எனக்கும் வளர்மதி குடும்பத்துக்கும் நல்ல பழக்கம். 3 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டுத்தான் வளர்மதி அக்கா வீட்டுக்குப் போனேன். காசு இல்லைன்னு சொல்லி ஒரு மாதிரி அவங்க சொல்லவும், எனக்கு கோபம் வந்துடுச்சு. அதனாலதான் ஆத்திரத்துல என்ன செய்றதுன்னு தெரியாம கொலை பண்ணிட்டேன்” என்றிருக்கிறார்.

கொலையாளி ராஜா (எ) நிக்கோலஸ்
கொலையாளி ராஜா (எ) நிக்கோலஸ்

இது சம்பந்தமாக விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். ``உயிரிழந்த வளர்மதி குடும்பத்தினரும், கொலை செய்த ராஜா (எ) நிக்கோலஸ் குடும்பத்தினரும் ஏற்கெனவே நல்ல பழக்கத்துடன்தான் இருந்துள்ளனர். வளர்மதியின் கணவர் பேராசிரியர் கணேசனின் மாணவியாக கொலையாளி ராஜாவின் மனைவி படித்துள்ளார். மேலும், பேராசிரியர் கணேசனின் நண்பரான எட்வின் சுந்தரம் என்பவரின் அக்கா மகன தான் இந்த கொலையாளி ராஜா. சம்பவத்தன்று கொலையாளி ராஜா 3 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு வளர்மதியை அணுகியிருக்கிறார். ‘எப்ப பார்த்தாலும் கடன் கேட்டுக்கிட்டே இருக்கே. உனக்காகத்தான் நான் சம்பாதிச்சுவெச்சிருக்கேனா’ என்றிருக்கிறார் வளர்மதி. `இவ்ளோ பெரிய கோடீஸ்வரியா இருக்கே... நிறைய நகை போட்ருக்கே. ஒரு 3 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டா கொடுக்க மாட்டியா!’ எனக் கோபத்தில் அருகிலிருந்த கத்தியை எடுத்து வளர்மதியைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு வளர்மதி கழுத்திலிருந்த ஆறு பவுன் தங்க தாலிக்கொடி மற்றும் தங்க செயின் ஒன்றையும் பறித்துக்கொண்டு சென்றுள்ளார். கொலை செய்த பிறகு ‘எனக்கு 3 ஆயிரம் ரூபாய் காசு இல்லைன்னு சொன்னேல்ல... உன் தாலிக்கொடியைவெச்சு என் 3 லட்சம் ரூபா கடனை அடைக்கப் போறேன்’னு ராஜா சொல்லியிருக்கார். முழுக்க முழுக்க இது பணத்துக்காக எதிர்பாராதவிதமாக நடந்த கொலை என்றுதான் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மற்ற வேறு காரணங்கள் ஏதாவது இருக்கின்றனவா என விசாரித்துவருகிறோம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism