Published:Updated:

‘சேடிஸ்ட்’ போலீஸ்...

‘சேடிஸ்ட்’ போலீஸ்...
பிரீமியம் ஸ்டோரி
‘சேடிஸ்ட்’ போலீஸ்...

தேவை கட்டாய கவுன்சலிங்!

‘சேடிஸ்ட்’ போலீஸ்...

தேவை கட்டாய கவுன்சலிங்!

Published:Updated:
‘சேடிஸ்ட்’ போலீஸ்...
பிரீமியம் ஸ்டோரி
‘சேடிஸ்ட்’ போலீஸ்...
பொதுமக்களை ஒட்டு மொத்தமாகக் கொந்தளிக்க வைத்துக்கொண்டி ருக்கும் சாத்தான்குளம் சம்பவம், தமிழக காவல்துறையின் மீதிருந்த கொஞ்சநஞ்ச மரியாதையையும் காணாமல் அடித்துக்கொண்டிருக் கிறது.

இதையடுத்து, ‘குற்றவாளி களுடன் தொடர்ந்து தொடர்பிலிருக்க வேண்டியிருப்பதாலும், குற்றச் சம்பவங்களைப் பார்த்துப் பார்த்தே மனது கல்லாகிப் போயிருப்பதாலும், உயரதிகாரிகளுக்குச் சேவகம் புரிந்தே நொந்துபோவதாலும் பெரும்பாலான காவலர்கள் மனரீதியாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் வெளிப்பாடுதான் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள். எனவே, காவலர்களுக்கு கவுன்சலிங் தேவை’ என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.

போலீஸாரின் இதுபோன்ற கண்மூடித்தனமான கொலைவெறித் தாக்குதல்கள் அரங்கேறும் போதெல்லாம் இத்தகைய குரல்கள் எழுவதும், அதைத் தொடர்ந்து, ‘கவுன்சலிங் கொடுக்கப்பட்டது’ என்று மீடியாக்களில் செய்திகள் வருவதும் வாடிக்கையே. அதேசமயம், இது போன்ற சம்பவங்கள் தொடர்வதும் வாடிக்கையாக இருப்பதுதான் வேதனை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது போன்ற கொடூரச் சம்பவங்களில் ஈடுபடும் காவலர்களின் மன நிலையை மாற்றுவதற்கு என்னதான் வழி என்று மனநல மருத்துவர்களிடம் பேசினோம்.

ஷாலினி - அசோகன் - கருணாநிதி
ஷாலினி - அசோகன் - கருணாநிதி

இது குறித்துப் பேசிய மனநல மருத்துவர் ஷாலினி, “பிறர் துன்பப்படுவதை ரசிக்கும் தீவிர மன வக்கிரமே ‘சேடிஸம்’ நோய். இந்த வகையான மனநோய் கொண்டவர்கள், தீவிர வன்முறையில் ஈடுபடுவார்கள். ‘ரிஸ்க்’ எடுப்பது இவர்களுக்குப் பிடிக்கும். காரணம், ‘ரிஸ்க்கான விஷயங்களைச் செய்தால் மாட்டிக்கொள்வோம்’ என்ற அடிப்படை யைக்கூட இவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

இது போன்றவர்களை உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளச் செய்வது, உடன் இருப்பவர்களின் பொறுப்பாகும். இந்த அதிதீவிர மன வக்கிர நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் மற்றும் `சைக்கோ தெரபி’ எனப்படும் மன ஆய்வு வழியிலான சிகிச்சை முறைகள் மருத்துவத்துறையில் இருக்கின்றன. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால், இது ‘தீவிர மன வக்கிர நோய்’ என்பதே பலருக்கும் தெரிவதில்லை. மாறாக, இந்த நோயின் ஆபத்து என்னவென்று சிலருக்கு தெரிந்திருந்தாலும்கூட, சம்பந்தப்பட்ட நபரின் அதிகாரத்தைக் கண்டு பயந்து ஒதுங்கிக்கொள்கின்றனர்’’ என்றார்.

‘கொரோனா ஊரடங்குகால பணிச் சுமை அழுத்தம், காவலர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது’ என்ற வாதம் தற்போது பரவலாக எழுந்து வருகிறது. இது குறித்துப் பேசும் மனநல மருத்துவர் அசோகன், “மருத்துவர், தூய்மைப் பணியாளர்கள் என அனைவருமே கொரோனாகால பணி செய்கிறார்கள் என்றாலும்கூட, அவர்களுக்கெல்லாம் குறிப்பிட்ட அளவு ஓய்வு கிடைக்கிறது. ஆனால், காவலர்களுக்கு பெரும்பாலும் ஓய்வு கிடைப்பதில்லை. தொடர்ச்சி யாகப் பணிபுரியக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அகால மரணம் அடைந்தவர்களின் உடல்களைச் சம்பவ இடத்தில் அமர்ந்து பாதுகாப்பதும், போஸ்ட் மார்ட்டம் பணிகளுக்காக மருத்துவமனைக்கு எடுத்து வருவதுமாகக் கடினமான பணிகளைச் செய்கிறார்கள்.

இந்தநிலையில், ராணுவத்தினர் மற்றும் நீதித்துறையினருக்கு நம் சமூகம் கொடுக்கும் மரியாதையைக் காவல் துறையின ருக்குக் கொடுப்பதில்லை. போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த நடிகருக்கு பாலாபிஷேகம் செய்யும் சமூகம், உண்மையிலேயே சிறப்பாகப் பணிபுரிந்துகொண்டிருக்கும் காவலர்களை அங்கீகரிக்கத் தயங்குகிறது.

‘சேடிஸ்ட்’ போலீஸ்...

சாதாரணமாக, குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூட நேரமின்றி பணிச்சுமையால் அழுத்தப் படும் காவலர்களுக்கு இயல்பாகவே கோப உணர்வு அதிகரிக்கும். இது தவிர்க்க முடியாதது. ஆனால், இதற்கெல்லாம் ‘கவுன்சலிங்’ என்ற ஒற்றைத் தீர்வை மட்டுமே முன்வைக்க முடியாது. அதைவிட முக்கியமானது, காவலர்களுக்கான தேவை என்னவென்று அறிந்து அதை நிறைவேற்றித் தருவதுதான். அந்தவகையில், அவர்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதற்காக வருடத்துக்குக் குறைந்தது 12 நாள் விடுமுறையாவது கொடுக்க வேண்டும்’’ என்றார்.

ஆனால், காவலர்களுக்கான மனநல பயிற்சி வகுப்பு எடுக்கவிருக்கும் ஓய்வுபெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி கருணாநிதியோ, “காவலர் பணி என்பது கம்பி மேல் நடப்பது போன்று கடினமான பணிதான். ஆனாலும், சமூகத்துடன் இணைந்து நல்லமுறையில் பணி செய்யும் போது, அவர்களுக்கான மரியாதை பொது மக்களிடமிருந்து கிடைக்கத்தான் செய்கிறது.

காவலர்களுக்கு உரிய ஓய்வு கிடைப்ப தில்லை என்பதெல்லாம் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் குறைபாடுதான். சிஸ்டத்தின் குறைபாடு கிடையாது. உயர் அதிகாரிகளின் வீடுகளுக்கு ஆர்டர்லி முறையில் பணியாற்றும் காவலர்களும்கூட அவர்களே விரும்பித்தான் அந்தப் பணிகளுக்குச் செல்கிறார்கள். ஒரு சிலர் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்தத் துறையையுமே களங்கப்படுத்தி விடுகிறது. இது போன்று பொதுமக்களோடு சுமுக உறவைக் கையாள முடியாத காவலர்களுக்குத்தான் இப்போது மனநலப் பயிற்சி அளிக்கவிருக் கிறார்கள். நிச்சயம் இது நல்லதொரு பலனைக் கொடுக்கும்’’ என்கிறார் நம்பிக்கையோடு.