Published:Updated:

சேலம்: ஆன்லைன் விளையாட்டில் பழக்கம், காதல்; 17 வயது மாணவனுடன் குடும்பம் நடத்திய பட்டதாரிப் பெண் கைது

பெண் கைது ( representational image )

கருப்பூர் அருகே கல்லூரி மாணவருடன் குடும்பம் நடத்திய பட்டதாரிப் பெண் கைதுசெய்யப்பட்டார்.

சேலம்: ஆன்லைன் விளையாட்டில் பழக்கம், காதல்; 17 வயது மாணவனுடன் குடும்பம் நடத்திய பட்டதாரிப் பெண் கைது

கருப்பூர் அருகே கல்லூரி மாணவருடன் குடும்பம் நடத்திய பட்டதாரிப் பெண் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
பெண் கைது ( representational image )

சேலம், கருப்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரிக்குச் சென்ற மாணவரை திடீரெனக் காணவில்லை.

எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர், கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸாரும் ஒரு பக்கம் விசாரணை செய்துவர, மாணவனின் பெற்றோர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதனால் கோர்ட் உத்தரவின் பெயரில் மாணவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாகச் செயல்பட்டுவந்தனர். அப்போது கல்லூரி மாணவருடன் யார் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரம் சேகரிக்கப்பட்டது.

ஆன்லைன் விளையாட்டு
ஆன்லைன் விளையாட்டு

அப்போதுதான், அந்த மாணவர் 20 வயது பெண் ஒருவருடன் பழக்கத்தில் இருந்தது தெரியவந்தது. அந்தப் பட்டதாரிப் பெண்ணும் சிறுவன் மாயமான அதே நாளில் மாயமாகியிருந்ததும் தெரியவந்தது. மேலும், போலீஸார் விசாரணையில் மாணவனும் அந்தப் பெண்ணும் கிருஷ்ணகிரி அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கணவன், மனைவிபோல் வாழ்ந்துவருவதாகக் கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீஸார் அவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், இந்தப் பழக்கத்தால் இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும், கல்லூரி மாணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெற்றோருடன் அனுப்பிவைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையே அந்தப் பெண் தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்டு பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

17 வயது சிறுவனைக் கடத்திச் சென்று குடும்பம் நடத்தியதாக இளம்பெண் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இருவருக்கும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.