Published:Updated:

உடலெல்லாம் பல்லால் கடித்த காயங்கள்... எப்படி இறந்தார் 8 வயது சிறுமி?

சாத்தான்குளம்
பிரீமியம் ஸ்டோரி
சாத்தான்குளம்

சாத்தான்குளத்தில் அடுத்த சோகம்!

உடலெல்லாம் பல்லால் கடித்த காயங்கள்... எப்படி இறந்தார் 8 வயது சிறுமி?

சாத்தான்குளத்தில் அடுத்த சோகம்!

Published:Updated:
சாத்தான்குளம்
பிரீமியம் ஸ்டோரி
சாத்தான்குளம்
சாத்தான்குளம் அருகே அடுத்த அதிர்ச்சி. சாத்தான்குளம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் டி.வி பார்ப்பதற்காகப் பக்கத்து வீட்டுக்குச் சென்ற 8 வயது சிறுமி, சில மணி நேரத்துக்குள்ளாகவே சடலமாகவே மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறுமியின் தாயாரிடம் பேசினோம். ‘‘எனக்கு ஒரு மகன், ஒரு மகள்னு ரெண்டு புள்ளைங்க. என் வீட்டுக்காரர் தினமும் குடிச்சிட்டு தகராறு செஞ்சுக்கிட்டிருந்தாரு. அதனால அவரைப் பிரிஞ்சு நாலு வருசமா குழந்தைகளோட தனியா இருக்கேன். கட்டட வேலைக்குப் போய்க் கிட்டிருக்கேன். என் வீடு ஓலை வீடு, கரன்ட் வசதி இல்லை. அதனால, நான் வேலைக்குப் போனதும், என் பொண்ணு பக்கத்து வீடுகளுக்கு டி.வி பார்க்கப் போயிருவா.

அன்னைக்கு வேலைக்குப் போயிட்டு மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தா பிள்ளையைக் காணோம். அக்கம்பக்கத்துல விசாரிச்சதுல ‘முத்தீஸ்வரன் வீட்டுக்குத்தான் டி.வி பார்க்கப் போனா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவனும் அவன் ஃப்ரெண்டு நந்தீஸும் ஒரு டிரம்மை பைக்குல வெச்சுக்கிட்டு காட்டுப்பாதை வழியா வேகமா ஓட்டிட்டுப் போனாங்க’னு சொன்னாங்க. ஊர் முழுக்கத் தேடினேன். கடைசியில கால்வாய் பாலத்துக்கு அடியில தேங்கிக்கிடந்த தண்ணியில எம் பொண்ணு சடலமா கிடந்தா... அவ உதட்டுலயும் உடம்புலயும் பல்லால் கடிச்ச காயமும், தலையில் ரத்தக் காயமும் இருந்துச்சுங்க...’’ என்று வெடித்து அழுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பூமயிலி, ‘‘சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் முன்னரே, ‘இது பாலியல் வன்புணர்வு இல்லை. பக்கத்து வீட்டில் அப்பா, மகனுக்கு இடையில் சண்டை நடந்து கொண்டிருந்தபோது, சிறுமி டி.வி போடச் சொன்னதால், கோபத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கின்றனர்’ என எஸ்.பி கூறுகிறார். டி.வி போடச் சொன்னதற்காக யாராவது கொலை செய்வார்களா... முறையாக விசாரித்தால்தான் உண்மை தெரிய வரும்’’ என்றார்.

உடலெல்லாம் பல்லால் கடித்த காயங்கள்... எப்படி இறந்தார் 
8 வயது சிறுமி?

தூத்துக்குடி எம்.பி-யான கனிமொழி, ‘‘8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் வேதனையைத் தருகிறது. இந்தப் படுபாதகச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் தெரியவருகிறது. சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொல்லப்படுவது தொடர்ந்து அதிகரித்துவருகிறது’’ என்றார் வேதனையுடன்.

கனிமொழி - ஜெயக்குமார்
கனிமொழி - ஜெயக்குமார்

இது குறித்து மாவட்ட எஸ்.பி-யான ஜெயக்குமாரிடம் பேசினோம். ‘‘முத்தீஸ்வரன், நந்தீஸ் ஆகியோர் கொலை, வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட ஆறு சட்டப் பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் உடலை பெண் தடயவியல் அதிகாரி ஒருவர் பரிசோதனை செய்ததில் பாலியல் வன்புணர்வுக்கான அறிகுறி இல்லை என்று தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே முழுமையான தகவல் கிடைக்கும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism