Published:Updated:

வைரல் வீடியோ: ஆசிரியரைத் தாக்க முயன்ற மாணவன்! - மாதனூர் அரசுப் பள்ளியில் நடந்தது என்ன?

ஆசிரியரைத் தாக்க முயன்ற மாணவன்

மாதனூர் அரசுப் பள்ளியில், ஆசிரியரை மாணவன் தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

வைரல் வீடியோ: ஆசிரியரைத் தாக்க முயன்ற மாணவன்! - மாதனூர் அரசுப் பள்ளியில் நடந்தது என்ன?

மாதனூர் அரசுப் பள்ளியில், ஆசிரியரை மாணவன் தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

Published:Updated:
ஆசிரியரைத் தாக்க முயன்ற மாணவன்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவன் ஒருவன் ஆசிரியரை ஆபாசமாகத் திட்டி அடிக்கப் பாய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன. மாணவனின் ஒழுங்கீனச் செயல் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கடும் மன வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்தோம்.

மாதனூர் அரசுப் பள்ளியில், அந்த மாணவன் 12-ம் வகுப்பு படித்துவருகிறான். இரு தினங்களுக்கு முன்பு தாவரவியல் ஆசிரியரான சஞ்சய்காந்தி ரெக்கார்ட் நோட்டை சமர்ப்பிக்கும்படி மாணவர்களிடம் கூறியிருக்கிறார். அனைத்து மாணவர்களும் ரெக்கார்ட் நோட்டைச் சமர்ப்பித்தபோது, குறிப்பிட்ட அந்த மாணவன் மட்டும் வகுப்பறையிலேயே தூங்கிக்கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. எழுப்ப முயன்ற ஆசிரியரைப் பார்த்து முறைத்த மாணவன், ‘என்னை ஏன்டா எழுப்புற... உன் வேலையைப் பாருடா’ என்று மரியாதைக் குறைவாகப் பேசி மிரட்டியிருக்கிறான்.

விசாரணை
விசாரணை

மேலும், சட்டை பட்டன்களை அவிழ்த்து, ஆசிரியரை நோக்கி அடிக்கப் பாய்ந்திருக்கிறான். அச்சமடைந்த ஆசிரியர் தனது நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டார். அப்போதும் விடாமல் ஆசிரியரின் தாய் குறித்து, அச்சில் ஏற்ற முடியாத ஆபாச வார்த்தைகளால் மாணவன் திட்டுகிறான். மற்றொரு மாணவன் எழுந்து சென்று, ஆசிரியரின் முகத்துக்கு முன் நின்று ‘நாய்... நாய்’ என்று அசிங்கப்படுத்துகிறான். வகுப்பறையிலிருந்த சக மாணவன் ஒருவன் தனது செல்போனில் அந்தக் காட்சிகளைப் பதிவுசெய்து, வாட்ஸ்அப்பில் பகிர்ந்ததால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணிக்கு, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் ஆம்பூர் தாசில்தார் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் இன்று பள்ளிக்குச் சென்று, தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட தாவரவியல் ஆசிரியர் மற்றும் புகாருக்குள்ளான மாணவனிடம் விசாரணை நடத்தினர். மாணவன் செய்த தவற்றை ஒப்புக்கொண்டான். இதையடுத்து, பெற்றோர்-ஆசிரியர் சங்கம் சார்பில் அந்த மாணவனின் பாதுகாவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட மாணவன் மன்னிப்புக் கடிதம் வழங்கவும், அந்தக் கடிதத்தைச் சம்பந்தப்பட்ட தாவரவியல் ஆசிரியர் ஏற்றுக்கொண்டால் மாணவனை மன்னிக்கலாம்.

மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் வருவாய் கோட்டாட்சியர்
மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் வருவாய் கோட்டாட்சியர்

மன்னிப்புக் கடிதத்தை ஆசிரியர் ஏற்க மனமில்லையெனில், மாணவனைப் பள்ளியிலிருந்து நீக்கவும் செய்யலாம் என வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி உத்தரவிட்டார். தொடர்ந்து, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களிடம் ஒழுக்கம் குறித்தும் அறிவுரைகளை அவர் வழங்கினார்.

இது தொடர்பாக, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியிடம் பேசினோம். ‘‘ஒழுங்கீனமாகச் செயல்பட்ட மாணவனிடம் மன்னிப்புக் கடிதம் கேட்கப்பட்டுள்ளது. அவன் செய்த தவற்றை உணர்ந்திருக்கிறான். நான் விசாரணை நடத்தியபோது, மன்னிப்பும் கேட்டான். சுற்றுப்புறச் சூழ்நிலை மாணவனை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கிறது. மாணவன் தாய், தந்தையோடு வசிக்கவில்லை. சித்தப்பா வீட்டில் தங்கியிருக்கிறான். அவன் வசிக்கும் பகுதியாலும் அவனது செயல்பாடுகள் மாறியிருக்கின்றன. அடுத்த வாரம் பொதுத்தேர்வு தொடங்கவிருக்கும் சூழலில், மாணவனின் எதிர்காலம் கருதி நடவடிக்கைகளைத் தளர்த்தியுள்ளோம். மாணவன் மன்னிப்புக் கடிதம் கொடுக்கிறானா, அதை ஆசிரியர் ஏற்கிறாரா என்பதைப் பொறுந்திருந்து பார்க்கலாம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism