Published:Updated:

12-ம் வகுப்பு படித்துவிட்டு அக்குபஞ்சர் சிகிச்சை, பாலியல் அத்துமீறல் - விசாரணையில் `திடுக்’ தகவல்!

அக்குபஞ்சர் ( pixabay )

வெங்கடநாராயணா 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அதன்பின் 10 வருடங்களாக ஒரு தனியார் நிறுவனத்தில் கமர்சியல் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார்.

பெங்களூருவில் அக்குபஞ்சர் பயிற்சியாளர் ஒருவர் சிகிச்சைக்காக வந்த பெண்களை பாலியல் அத்துமீறல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

12-ம் வகுப்பு படித்துவிட்டு அக்குபஞ்சர் சிகிச்சை, பாலியல் அத்துமீறல் - விசாரணையில் `திடுக்’ தகவல்!
pixabay

பெங்களூரு மதிகெரே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வரும்  அக்குபஞ்சர் பயிற்சியாளர் வெங்கடநாராயணா. இவர் சிகிச்சை அளிப்பதாகக்கூறி பெண்களை பாலியல் அத்துமீறல் செய்த குற்றத்துக்காக, புதன்கிழமை (நவம்பர் 16) அன்று கைது செய்யப்பட்டார்.

கிளினிக்குக்கு வரும் பெண்களின் உடைகளை நீக்கச் சொல்லி, தகாத முறையில் அவர் செயல்பட்டுள்ளார். இவ்வாறு செய்கையில் தன்னுடைய மொபைல்போனில் அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார்.

அதனால், இவரின் மீது புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து யஷ்வந்த்பூர், பசவனகுடி மற்றும் சைபர் க்ரைம் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, வெங்கடநாராயணா தலைமறைவானார்.

காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது ஆந்திர மாநிலம் குட்டி அருகே உள்ள தடிபத்ரியில் இவரை தனிப்படையினர் கைது செய்தனர்.

கைது
கைது

அதன்பின்னர் செய்த விசாரணையில், `வெங்கடநாராயணா 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அதன்பின் 10 வருடங்களாக ஒரு தனியார் நிறுவனத்தில் கமர்சியல் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். பயிற்சிப் பட்டறை ஒன்றில் ஒரு மருத்துவருடன் அறிமுகமாகியுள்ளார். அந்த மருத்துவரே இவருக்கு அக்குபஞ்சர் சிகிச்சைக்கான பயிற்சிகளைக் கற்றுத்தந்துள்ளார்.

இரண்டு வருடப் பயிற்சிக்குப் பின், அக்குபஞ்சர் கிளினிக் ஒன்றைத் தொடங்கி சிகிச்சை அளித்து வந்துள்ளார்’’ என்பது தெரியவந்துள்ளது.