Published:Updated:

`குறைந்த வருமானம்னாலும்...!' - திருட்டால் கலங்கும் மாற்றுத்திறனாளி `கறிக்கடை' ஜாகீர்

சிவகங்கையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஜாகீர் உசேனின் கடையில் திருட்டு நடந்துள்ள சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஜாகிர் உசேன்
ஜாகிர் உசேன் ( சாய்தர்மராஜ் )

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த புழுதிப்பட்டி கிராமத்தில் கறிக்கடை வைத்து நடத்திவருகிறார் ஜாகிர் உசேன். மூளையில் இருந்து கண்களுக்கு வரும் நரம்பு பாதிப்பு காரணமாகச் சிறுவயதில் இருந்து கண் பார்வையில்லாமல் வாழ்ந்துவருகிறார்.

கலெக்டருடன் ஜாகீர் உசேன்
கலெக்டருடன் ஜாகீர் உசேன்

இந்தக் கறிக்கடையை வைத்துதான் தனது குடும்பத்தை காப்பாற்றிவருகிறார். வறுமையான சூழ்நிலையிலும் தன் இரு மகன்களையும் விருப்பப்பட்ட பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கிறார். ஜாகிர் உசேன் கறிவெட்டும் விதத்தையும், விற்பனை செய்யும் முறையும் கவனித்த மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், இவருக்கு வங்கியின் மூலம் கடன் வழங்கி ஊக்குவித்துள்ளார்.

70 கி.மீ தூரம் பயணித்து உதவி செய்த சிவகங்கை கலெக்டர்! -ஆனந்த கண்ணீர்விட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளி

இந்த நிலையில் ஜாகிர் உசேனின் கறிக்கடையில், 8,000 ரூபாய் மதிப்புள்ள கல்லாப்பெட்டியும், 9 கோழிகளையும் மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இதுகுறித்து புழுதிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பேசினோம். ``பார்வையில்லாத சூழலில் கறிக்கடை நடத்திவருகிறேன்.

கறிக்கடையில் திருட்டு
கறிக்கடையில் திருட்டு

குறைந்த அளவு கோழிக்கறி விற்பனையானாலும் சொந்தமாக தொழில் செய்கிறேன் என்ற நம்பிக்கையோடு பணி செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறேன்.

இந்தச் சூழலில் இரவு ஆள் நடமாட்டம் இல்லாதபோது மர்ம நபர்கள் சிலர் என்னுடைய கடையில் 9 கோழிகளையும், 8,000 மதிப்புள்ள கல்லாப்பெட்டியையும் திருடிவிட்டனர். இது என்னை மிகவும் வேதனைப்பட வைத்துள்ளது. இது எனக்கு மிகப்பெரும் தொகை. இதை மீண்டும் எவ்வாறு ஈடுசெய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆண்டவன் ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் செயல்படுகிறேன்" என்றார்.

ஜாகிரின் கறிக்கடை
ஜாகிரின் கறிக்கடை

இது குறித்து டி.எஸ்.பி., அண்ணாதுரையின் கவனத்துக்கு கொண்டுசென்றோம். `இந்தப் புகார் குறித்து விரைவாக வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன்' என்றார்.