Published:Updated:

டீக்கு பணம் கேட்டாலும் கொலை... பைக்கை மெதுவாக ஓட்டச் சொன்னாலும் கொலை!

திகிலில் தவிக்கும் தென் மாவட்டங்கள்
பிரீமியம் ஸ்டோரி
திகிலில் தவிக்கும் தென் மாவட்டங்கள்

திகிலில் தவிக்கும் தென் மாவட்டங்கள்

டீக்கு பணம் கேட்டாலும் கொலை... பைக்கை மெதுவாக ஓட்டச் சொன்னாலும் கொலை!

திகிலில் தவிக்கும் தென் மாவட்டங்கள்

Published:Updated:
திகிலில் தவிக்கும் தென் மாவட்டங்கள்
பிரீமியம் ஸ்டோரி
திகிலில் தவிக்கும் தென் மாவட்டங்கள்

தென் மாவட்டங்களில் சமீபகாலமாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்துகொண்டே வருகின்றன. குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய முக்கிய மாவட்டங்களில் அதிகளவில் கொலைகள் தொடர்கின்றன. பெரும்பாலான கொலைகள் ‘ஈகோ’வினாலும், பழிதீர்ப்பதற்காகவும் நடந்த கொலைகள்தான். இந்தக் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர், 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பதுதான் வேதனை. சமீபத்தில் நடந்த கொலைகள், அதற்கான காரணங்கள், போலீஸ் எடுத்துவரும் நடவடிக்கை போன்றவை குறித்து விசாரிக்க, களம் இறங்கியது ஜூ.வி டீம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரை...

ஜூன் 12: தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு நிபந்தனை ஜாமீனில் கையெழுத்துப் போட வந்த சகோதரர்கள் ரஞ்சித், அஜித் ஆகியோரைத் துரத்திச் சென்று வெட்டிச் சாய்த்தது ஏழு பேர் கொண்ட கும்பல். காவல் நிலையத்தின் அருகில், பழிதீர்க்கும் வகையில் நடந்த இந்தக் கொலைச் சம்பவத்தைப் பார்த்த போலீஸார் மற்றும் பொதுமக்கள் அதிர்ந்துபோனார்கள்.

ஜூலை 9: நாகமலைப் புதுக்கோட்டையில் பெயின்ட் கடை வைத்திருந்தவர் நிருபன் சக்கரவர்த்தி. அவரை வீடு புகுந்து கொடூரமாகக் கொலை செய்தது, ஆறு பேர்கொண்ட கும்பல். கோயிலில் சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட தகராறுதான் கொலைக்குக் காரணம்.

டீக்கு பணம் கேட்டாலும் கொலை... பைக்கை மெதுவாக ஓட்டச் சொன்னாலும் கொலை!

ஆகஸ்ட் 17: கிருஷ்ணாபுரம் காலனியில் வசித்துவந்த மாரிமுத்து என்பவர் தேநீர்க்கடை வைத்திருந்தார். அதிகாலையில் அவரது கடைக்கு தேநீர் குடிக்க வந்த சிலர், பணம் கொடுக்கவில்லை. மாரிமுத்து அவர்களிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்ய… அந்தக் கும்பல், மாரிமுத்துவை வெட்டிக் கொலை செய்துவிட்டது. இதில் ஈடுபட்ட ஆறு பேரும் 20 வயதுகுட்பட்டவர்கள். இன்று, மாரிமுத்துவின் மனைவி தன் இரண்டு குழந்தைகளுடன் ஆதரவின்றித் தவித்துவருகிறார்.

ஆகஸ்ட் 22: புதூரில் ஃபைனான்ஸ் தொழில் செய்துவந்த ராஜா, இரவு 11 மணிக்கு டூ வீலரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த ஆறு பேரும் 20 வயதுக்குட்பட் டவர்கள். கொலையாளிகளில் ஒருவன், ராஜாவின் நெஞ்சில் திரும்பத் திரும்ப கத்தியால் குத்தியதும், காலை வெட்டிக் கீழே சாய்ப்பதும் அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் அனைவரையும் அதிரவைத்தன. இது, பழிதீர்க்கும் வகையில் நடந்த கொலை.

செப்டம்பர் 13: சிவில் வழக்கில் ஆஜராகிவிட்டு ஊர் செல்வதற்காக மேலூர் பேருந்துநிலையத்துக்கு வந்துகொண்டிருந்த முதியவர் தங்கையாவை, அவரின் மருமகன் நல்லமணி கத்தியால் குத்திக் கொலை செய்தார். பொதுமக்கள் நல்லமணியைப் பிடித்து போலீஸ்வசம் ஒப்படைத்தனர். மனைவி பிரிந்து சென்றதற்கு மாமனார்தான் காரணம் என நினைத்த நல்லமணி, பட்டப்பகலில் நூற்றுக்கணக் கானோர் முன்பு தங்கையாவை கொலை செய்திருக்கிறார்.

செப்டம்பர் 16: சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸ் டிரைவர் நாகநாதனைக் கொலை செய்து கொட்டாம்பட்டி அருகில் கிணற்றில் வீசிச் சென்றுவிட்டது ஒரு கும்பல். காரைத் திருடுவதற்காக இந்தக் கொலை நடந்திருக்கிறது. கொலை செய்த நான்கு பேர்கொண்ட கும்பலில் ஒருவர் பெண்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலே சொல்லியிருக்கும் சம்பவங்கள் ஒரு சோறு பதம்போல சாம்பிள்கள் மட்டுமே. பாலமேடு மதுரைவீரன், அனுப்பானடி குமரன், கொடிக்குளம் டிரைவர் சிவா, திருமோகூர் கவுசல்யா, முத்துப்பட்டி சதீஷ்குமார், செல்லூர் காளீஸ்வரன், எம்.எம்.சி.காலனி சதிஷ்குமார், திருப்பரங்குன்றம் சந்திரசேகர், அ.கோவில்பட்டி தினேஷ், அண்ணாநகர் கட்டமுத்து, திருநங்கை அல்போன்சா, மதிச்சியம் மணிகண்டன்.... எனக் கொலையானவர்கள் பட்டியல் நீண்டுகொண்டேபோகிறது.

கண்னண், ராஜா, முருகன்
கண்னண், ராஜா, முருகன்

கடந்த எட்டு மாதங்களில் 80-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இவற்றில் பல கொலைகள் பழிதீர்ப்பதற்காக நடந்தவை. இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பெரும் பாலானோர் 20 வயதுக்குட் பட்டவர்கள்.

கொலை மட்டுமல்லாமல் வழிப்பறி, சங்கிலிப் பறிப்பு, கொள்ளை போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அவற்றில் ஈடுபடு பவர்களும் இளைஞர்கள்தான். சில கொலைகள் ஆதாயத் துக்காக நடந்திருந்தாலும், நண்பர்களுக்குத் துணை யாகவும், அற்ப விஷயங்களுக் காகவும் கொலை செய்து சிறை செல்கிறார்கள் இளைஞர்கள். இவர்கள் சிறையிலிருந்து வெளிவந்த பிறகும், திருந்தாமல் குற்றங்களைத் தொடர்வதுதான் வேதனை.

தூத்துக்குடி

டந்த மூன்று மாதங்களில் 20 கொலைகள் நடந்திருப்பதால், கொலை நகரமாக மாறிவிட்டது, தூத்துக்குடி. கடந்த ஜூலை மாதத்தில் மட்டுமே இங்கு 11 கொலைகள் நடந்துள்ளன. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தலா நான்கு கொலைகள் என மொத்தம் எட்டு கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த ஜூலை மாதம்… குளத்தூரில் காதல் திருமணம் செய்த சோலைராஜா-ஜோதி தம்பதி தூங்கிக்கொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டனர். கொலையை முன்னின்று செய்தவர், ஜோதியின் தந்தை என்பதுதான் கொடுமை.

அதே மாதத்தில், தி.மு.க செயற்குழு உறுப்பினராக இருந்த கருணாகரன், தோட்டத்தில் வைத்து வெட்டிக் கொல்லப் பட்டார். கொலைக் குற்றவாளியான சிவகுமார் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது நீதிமன்றத்தின் அருகிலேயே வெட்டிச் சாய்க்கப்பட்டார். இது, 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் நடந்த கொலை. இதேபோல, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரௌடி சிந்தா பாண்டியன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இப்படி பல கொலைகள் தூத்துக்குடியில் நடந்துள்ளன.

பிடிபட்ட இளைஞர்கள்
பிடிபட்ட இளைஞர்கள்

இதையெல்லாம்விட கொடுமையான இரண்டு கொலைச் சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. குறுகலான தெருவுக்குள் வேகமாக பைக் ஓட்டிச் சென்ற நபரை, ‘தெருவுக்குள்ள மெதுவா போப்பா... சின்னப்பிள்ளைங்க குறுக்க வந்த என்ன ஆகும்?’ என எச்சரித்த இருவர், கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல, தன் வீட்டின் அருகில் மது அருந்திக்கொண்டிருந்தவர்களைத் தட்டிக்கேட்ட லாரி டிரைவர் சொரிமுத்து என்பவர், அந்தப் போதைக் கும்பலால் கொல்லப்பட்டுள்ளார். கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான் வேதனை.

திருநெல்வேலி

திருநெல்வெலியில் கடந்த ஒன்பது மாதங்களில் 25 கொலைகள் நடந்துள்ளன. கொலையானவர்களில் பாதிப்பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சாதிப் பகையால்தான் இந்தக் கொலைகள் நடந்திருக்கின்றன. மேலும், போதை மற்றும் ஈகோ காரணமாகவும் பல கொலைகள் நடந்திருக்கின்றன.

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரின் கணவர் மணிகண்டன், அவர்கள் வீட்டுப் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த அசோக் என்பவரை ஆதிக்க சாதியினர் வெட்டிக் கொலை செய்துள்ளனர். முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜா, சர்தார்புரம் சுடலை, பக்கபட்டியைச் சேர்ந்த கண்ணன் எனப் பட்டியல் இனத்தவர்கள் தொடர்ச்சியாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர் கொலைச் சம்பவங்களைத் தடுக்கத் தவறியதால், ஏழு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 40 போலீஸாரை இடமாற்றம் செய்திருக் கிறார், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ்.

தென் மாவட்டங்களில் அமைதியை உறுதிசெய்து மக்களின் அச்சத்தைப் போக்குவதற்கு, தமிழக அரசு சாட்டையைச் சுழற்ற வேண்டியது அவசியம்!

சாதியப் பாகுபாடு!

அனைத்து இந்திய மாதர் சங்க நெல்லை மாவட்டத் தலைவர் கற்பகம், “சாதி மற்றும் ஆணவப்படுகொலைகள் தொடர்வது வருத்தமானது. மாணவர்களின் மனதில் சாதியப் பாகுபாடு இல்லாமல் பார்த்துக்கொண்டால், வருங்காலத்தில் சாதிய வன்முறைகள் குறையும். கொலைகளைத் தடுக்க, காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பள்ளி, கல்லூரி இடைநிற்றலும் ஒரு காரணம்!

மதுரை போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ‘‘கடந்த சில ஆண்டுகளாகவே மதுரையில் இளம் குற்றவாளிகள் அதிகரித்துவருகிறார்கள். பெற்றோரின் கண்காணிப்பு இல்லாத இளைஞர்கள்தான் இப்படி திசை மாறுகிறார்கள். சிறிய குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள், சிறை செல்லும்போது அங்கு உள்ள குற்றவாளிகளிடம் பழகி, அவர்களின் பேச்சுக்கு மயங்கிவிடுகிறார்கள். சிறையிலிருந்து தண்டனை முடிந்து வெளிவரும்போதோ, ஜாமீனில் வெளிவரும்போதோ ஏதாவது ஒரு ‘அசைன்மென்ட்’டுடன்தான் வருகிறார்கள். கஞ்சா மற்றும் மது போதையால் தன்னிலை மறந்து கொலை செய்பவர்களும் அதிகரித்துள்ளனர்” என்றார்.

மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவஆசிர்வாதம், ‘‘மதுரை மாநகரில் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடக்கும் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்துவருவதால், அந்தப் பகுதிகளில் குற்றங்கள் குறைந்துவிட்டன. ஆனால், வேறு பகுதிகளில் கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் நடந்த கொலைச் சம்பவங்களில் பெரும்பாலும் 17 முதல் 20 வயது வரையுள்ள இளைஞர்கள் ஈடுபட்டுள்ளது, கவலை அளிக்கும் விஷயம். இளம் குற்றவாளிகளைத் திருத்துவதற்காகவும், இளம் குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்கவும் முயற்சிகளை எடுத்துவருகிறோம். நாங்கள் ஆய்வுசெய்ததில் பெரும்பாலான இளம் குற்றவாளிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து சில காரணங்களால் கல்வியைத் தொடர முடியாமல் இடைநின்றவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் கல்வியைத் தொடர ஏற்பாடுகள் செய்யப்போகிறோம்’’ என்றார்.

மக்களிடம் விழிப்பு உணர்வு இல்லை!

டீக்கு பணம் கேட்டாலும் கொலை... பைக்கை மெதுவாக ஓட்டச் சொன்னாலும் கொலை!

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அருண் பாலகோபாலன், ‘‘கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் குறைவுதான். மக்களிடம், அவசர அழைப்பு எண் 100 குறித்த விழிப்பு உணர்வு இல்லை. ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு தகவல் பரிமாற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இரவு பகலாக 200 வாகனங்களில் போலீஸார் ரோந்து செல்கிறார்கள். பழைய குற்றவாளிகளின் நடமாட்டமும் கண்காணிக்கப்பட்டுவருகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 10 வழக்குகளில் 19 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஒன்பது பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் 45 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. குற்றச் செயல்களைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism