Published:Updated:

மதுரை: ``தவறு செய்யும் காவலர்களுக்கு மூன்று வகையான தண்டனை" - ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை

ஐ.ஜி அஸ்ரா கார்க்

``இதற்கு முன்பு இருந்ததைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். இனிமேல் தவறு செய்பவர்கள், கடமை மீறுபவர்கள் பற்றிச் சின்னப் புகார்கூட என் கவனத்துக்கு வரக் கூடாது" என்று ஓப்பன் மைக்கில் ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை: ``தவறு செய்யும் காவலர்களுக்கு மூன்று வகையான தண்டனை" - ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை

``இதற்கு முன்பு இருந்ததைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். இனிமேல் தவறு செய்பவர்கள், கடமை மீறுபவர்கள் பற்றிச் சின்னப் புகார்கூட என் கவனத்துக்கு வரக் கூடாது" என்று ஓப்பன் மைக்கில் ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
ஐ.ஜி அஸ்ரா கார்க்

பத்து வருடங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட எஸ்.பி-யாக அஸ்ரா கார்க் இருந்தபோது பரபரப்பாகச் செயல்பட்டார். தவறு செய்யும் அரசியல்வாதிகள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் ரெளடிகள், காவல்துறையினர், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரையும் தெறிக்கவிட்டார். அதனால் அவரை மக்கள் கொண்டாடினார்கள்.

ஐ.ஜி அஸ்ரா கார்க்
ஐ.ஜி அஸ்ரா கார்க்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பிறகு வெவ்வேறு மாவட்டங்களுக்கு எஸ்.பி-யாகச் சென்று, டி.ஐ.ஜி-யாகப் பணிபுரிந்து, மத்திய அரசு பணிக்குச் சென்றவரை, தென் மாவட்டங்களில் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள், சாதிய மோதல்கள், கொலை, கொள்ளைச் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர தென்மண்டல ஐ.ஜி-யாக தமிழக அரசு நியமித்துள்ளது.

காவல்துறை
காவல்துறை

அவர் பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சர்ப்ரைஸ் விசிட் அடித்து காவல்துறையினரின் நடவடிக்கைகளைக் கண்காணித்தும் எச்சரித்தும் வருகிறார்.

தென் மாவட்டத்தில் தொடரும் பழிக்குப்பழிக் கொலைகள், சாதிரீதியான மோதல்கள், தீண்டாமை வன்கொடுமைகள் கந்துவட்டிப் புகார்கள், ரெளடிகளின் அட்டகாசங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் பின்னணியில் காவல்துறையினர் சிலர் இருப்பதைத் தெரிந்துகொண்டவர், சமீபத்தில் ஓப்பன் மைக்கில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில், "சாதிரீதியான கொலைகள், பழிக்குப்பழி கொலைகளை தடுப்பது குறித்து எஸ்.பி-க்களும், தனிப்பிரிவு அதிகாரிகளும் அவ்வப்போது சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்குத் தகவல் கூறுகின்றனர். இப்படிப்பட்ட தகவல் கிடைத்தும் உங்கள் லிமிட்டில் பழிக்குப்பழி கொலைச் சம்பவங்கள் நடந்தால், அதற்கு அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-தான் பொறுப்பு. தேவைப்பட்டால் டி.எஸ்.பி-க்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும்.

பழிக்குப்பழி கொலைகள் நடக்காமல் தடுக்கும் பொறுப்பு எஸ்.பி-க்கும், தனிப்பிரிவுக்கும் என்று கூறாமல் சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ-க்கள் பொறுப்பேற்க வேண்டும். இந்த விஷயத்தில் கனிவோ, கருணையோ இருக்காது.

காவல்துறை
காவல்துறை

போதைப்பொருள், கள்ள லாட்டரி விற்பனைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 60 சதவிகித போலீஸார்கள் நேர்மையாகப் பணியாற்றுகிறார்கள். மீதியுள்ளவர்களுக்குச் சமூக விரோத கும்பலுடன் தொடர்புள்ளது.

இதற்கு முன்பு இருந்ததைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். இனிமேல் தவறு செய்பவர்கள், கடமை மீறுபவர்கள் பற்றிச் சின்னப் புகார்கூட என் கவனத்துக்கு வரக் கூடாது. அப்படி வந்தால் மூன்றுவிதமான தண்டனை வழங்கப்படும். முதலில் டிரான்ஸ்ஃபர், அடுத்து சஸ்பெண்ட், மூன்றாவதாக கிரிமினல் வழக்கு போடப்படும். அதனால் வேலையைக் காப்பாத்திக்கணும்னா நல்லா வேலை பார்க்கணும். கௌரவமா வேலை பார்க்கணும். பிரச்னைகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம். இதை எஸ்.பி-க்கள் அனைத்து போலீஸுக்கும் கண்டிப்புடன் தெரிவிக்க வேண்டும்.

தனிப்பிரிவைப் பொறுத்தவரையில் ஏதாவது ஊழல் புகார் வந்தால் உடனே மேலிடத்துக்குத் தகவல் தர வேண்டும். போலீஸ் விசாரணை நியாயமாக இருக்க வேண்டும். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கணும். வேண்டுமென்றே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிக்கக் கூடாது. எந்தக் கட்சிக்கும் சப்போர்ட் செய்ததாகப் புகார் வரக் கூடாது.

சைபர் க்ரைம் பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் இல்லை. சைபர் க்ரைம் புகார் கொடுக்க ஏற்படுத்தப்பட்ட உதவி போன் நம்பர் 1930 பற்றி போலீஸாருக்கே தெரியவில்லை.

ஐ.ஜி அஸ்ரா கார்க்
ஐ.ஜி அஸ்ரா கார்க்

புகார் மனு மீதான விசாரணையை நியாயமாக நடத்தினால் பல பிரச்னைகள் முடிந்துவிடும். இதை எஸ்.பி-க்கள் கண்காணிக்க வேண்டும்.

போலீஸ்காரர்களுக்கு என்ன பிரச்னையென்றாலும் எனக்கு வாட்ஸ்அப் மூலம் 9445300002 என்ற எண்ணுக்குத் தகவல் தரலாம்." என்று நீண்ட நேரம் பேசியுள்ளார்.

இதைக் கேட்டு தென்மண்டலத்தில் 10 மாட்டங்களில் சமூக விரோதிகள், சாதி அமைப்பினருடன் தொடர்பு வைத்துள்ள கான்ஸ்டபிள் முதல் உயரதிகாரிகள் வரை அரண்டுபோயிருக்கிறார்களாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism