Published:Updated:

மதுரை, மங்களூரில் பதுங்கியிருந்த 63 இலங்கை நாட்டவர் கைது! கனடா செல்ல முயற்சி?!

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

இலங்கையைச் சேர்ந்த பிரபல கடத்தல்காரன் அங்கொட லொக்கா கடந்த வருடம் தமிழ்நாட்டில் மர்மமாக மரணமடைந்த விவகாரத்தில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் இந்தியா வந்து தங்கியிருந்து வெளிநாடு செல்ல திட்டமிட்ட இலங்கையைச் சேர்ந்த 63 பேர் நேற்று கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இலங்கை நாட்டவர்
கைதுசெய்யப்பட்ட இலங்கை நாட்டவர்

கோவிட் பேரிடர் காலத்தில் இலங்கைக்குத் தமிழகத்திலிருந்து உணவுப்பொருள்களும், போதைப்பொருள்களும் கடத்தப்படுவது அதிகரித்துவருகிறது. அதேநேரம் பல கடத்தல் சம்பவங்களை கடலோர காவல்படை, சுங்கத்துறை, தமிழக கடலோர காவல்துறையினர் தடுத்துள்ளனர்.

இந்தநிலையில், இலங்கையைச் சேர்ந்த கோவிட் நோயாளிகள் சிகிச்சைக்காக கள்ளத்தனமாக தமிழகம் வருவதாகவும் சொல்லப்பட்டது. அதனால் ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமை க்யூ பிரிவினர் தீவிரமாகக் கண்கானித்துவந்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

கடந்த வாரம் மதுரை கப்பலூரில் போலி ஆவணங்கள் தயாரிக்கும் ஏஜென்ட் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து க்யூ பிரிவினர் விசாரித்தபோது, கனடா செல்வதற்காக இலங்கையைச் சேர்ந்த 23 பேர் கப்பலூர் தொழிற்பேட்டை பகுதியில் தங்கியிருப்பதாகக் கூறியுள்ளார்.

இலங்கையிலிருந்து கனடா செல்வதற்கு அனுமதி இல்லை என்பதால், தமிழகம் வழியாக வேறு நாடுகளுக்குப் படகு மூலம் செல்ல ஒரு மாதத்துக்கு முன் தூத்துக்குடி வழியாக இவர்கள் தமிழகம் வந்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

மதுரையிலுள்ள ஏஜென்ட்டுகள் பணம் வாங்கிக்கொண்டு மதுரை உச்சபட்டி அகதிகள் முகாம் அருகில் கப்பலூர் தொழிற்பேட்டை பகுதியில் தங்கவைத்துள்ளனர். சில நாள்களில் கேரளா சென்று, அங்கிருந்து வெளிநாடு செல்லத் திட்டமிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில்தான் மதுரையில் 23 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் இரண்டு பேர் சிங்களவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இலங்கையைச் சேர்ந்த பிரபல கடத்தல்காரன் அங்கொட லொக்கா, கடந்த வருடம் தமிழ்நாட்டில் மர்மமாக மரணமடைந்த விவகாரத்தில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவருடைய உறவினர்கள்தான் இந்த விவகாரத்தில் இலங்கை நாட்டவர்களுக்கு உதவி செய்ததாகத் தேடப்பட்டுவருகிறார்கள்.

இலங்கை கடத்தல்காரன் அங்கொட லொக்கா
இலங்கை கடத்தல்காரன் அங்கொட லொக்கா

மதுரையில் 23 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுபோல, மங்களூரில் பதுங்கியிருந்த 40 இலங்கையைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இந்தக் கைது நடவடிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு