Published:Updated:

ஸ்ரீவில்லிபுத்தூரில் பரிகார பூஜை பெயரில் நகை மோசடி செய்த தம்பதி; கணவர் கைது - நடந்தது என்ன?

மோசடித் தம்பதியர்

``பரிகார பூஜை செய்தால் பிரச்னையெல்லாம் சரியாகிவிடும். ஆனால் பூஜையில் வைக்க வீட்டிலுள்ள நகைகள் வேண்டும்.”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பரிகார பூஜை பெயரில் நகை மோசடி செய்த தம்பதி; கணவர் கைது - நடந்தது என்ன?

``பரிகார பூஜை செய்தால் பிரச்னையெல்லாம் சரியாகிவிடும். ஆனால் பூஜையில் வைக்க வீட்டிலுள்ள நகைகள் வேண்டும்.”

Published:Updated:
மோசடித் தம்பதியர்

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பரிகார பூஜை செய்வதாகச் சொல்லி 70 பவுன் நகைக்கும் மேல் தம்பதியர் நகை மோசடி செய்துள்ளனர். இதில் கணவரை போலீஸார் கைதுசெய்தனர். மனைவி தலைமறைவாக இருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். "ஶ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி தங்கமாயாள். பாலமுருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப் பகுதியிலுள்ள பென்னிங்டன் மார்க்கெட்டில் காய்கறிக்கடை நடத்திவருகிறார். இந்த நிலையில் பாலமுருகனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. பல இடங்களில் சிகிச்சைபெற்றும் சரிவராததால் தங்கமாயாள் தனது வீட்டுக்கு அருகேயுள்ள முப்பிலிமாடன் சாமி கோயிலில் அருள்வாக்கு சொல்லக்கூடிய பூசாரியான பழனிகுமாரிடம் மந்திரித்து திருநீர் வாங்கியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, காய்கறிக்கடையில் நன்றாக வியாபாரம்‌ நடக்க வேண்டும் என்பதற்காகவும் பழனிக்குமாரை அணுகி மீண்டும் திருநீர் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

மோசடித் தம்பதியர்
மோசடித் தம்பதியர்

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பழனிக்குமார், ``பரிகார பூஜை செய்தால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் பூஜையில் வைக்க வீட்டிலுள்ள நகைகள் வேண்டும்” என்று தங்கமாயாளிடம் கேட்டிருக்கிறார். இதற்குச் சம்மதம் தெரிவித்து அவரும், தன்னிடமிருந்த 26 பவுன் நகையை பரிகார பூஜைக்காக கொடுத்திருக்கிறார். நகையை வாங்கிக்கொண்ட பழனிக்குமாரும், அவரின் மனைவி ரம்யாவும் நகையை வைத்து மண்டலபூஜை செய்ய வேண்டுமெனச் சொல்லி தங்கமாயாளை ஏமாற்றியுள்ளனர். பல வாரங்களாகியும் பழனிக்குமாரும், அவரின் மனைவி ரம்யாவும் நகையைத் திருப்பித் தராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தங்கமாயாள் இது குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார்‌ அளித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்பேரில் ஶ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் உத்தரவுபடி நகர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கையில், தங்கமாயாளை ஏமாற்றியதுபோலவே ஆலம்பட்டியைச் சேர்ந்த முருகேசன், ராஜலஷ்மி, மங்காபுரத்தைச் சேர்ந்த ராமேஸ்வரன், பெருமாள்பட்டியை சேர்ந்த கௌதமன் உட்பட பலரிடமும் சுமார் 70 பவுன் நகைக்கு மேல் பழனிக்குமார்-ரம்யா தம்பதியர் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பழனிகுமாரை போலீஸார் கைதுசெய்தனர். தலைமறைவாகியிருக்கும் அவருடைய மனைவி ரம்யாவை போலீஸார் தேடிவருகின்றனர்.

கைது
கைது

``கைதுசெய்யப்பட்ட பழனிக்குமாரிடம், மோசடியில் யார் யாருக்குத் தொடர்பிருக்கிறது... நகைகள் எங்கே உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகிறோம்" என்றார்கள்.