Published:Updated:

`வெளியில் தங்கியதால் பெற்றோர் கண்டிப்பு?' - பல்கலைக்கழக விடுதியில் விபரீத முடிவெடுத்த மாணவி

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் அதிக அளவில் மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த வருடம் மட்டும் 5 பேர் இந்தப் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தொடர் குற்றச் சம்பவங்கள் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வருடம் மட்டும் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

SRM umiversity
SRM umiversity

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் அயுஷிரானா என்ற மாணவி பி.டெக் பயோடெக்னாலஜி பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை மதியம் எட்டாவது மாடியில் இருக்கும் தனது அறைக்குச் சென்றிருக்கிறார்.

இரவு 9 மணியளவில் விடுதியில் உள்ள பயோ மெட்ரிக் வருகையில் அனைவரும் பதிவு செய்ய வேண்டும். ஆனால், அயுஷிரானா தன்னுடைய வருகையைப் பதிவு செய்யாத காரணத்தால் அவருடைய தொலைபேசியில் விடுதி ஊழியர்கள் பலமுறை தொடர்பு கொண்டனர். தொடர்ந்து அழைத்தும் அவர் எடுக்காத காரணத்தால் அவரின் அறைக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளனர். இதற்கும் எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் மறைமலைநகர் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்துப் பார்த்தபோது ஜன்னலில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார் அயுஷிரானா. இதைத் தொடர்ந்து மாணவியின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. மேலும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அவரின் தந்தை அனில் குமாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிபிசிஐடி வளையத்தில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்! - வேகமெடுக்கும் வழக்குகள்?

மாணவியின் மரணம் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தில் அதிக அளவில் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த வருடம் மட்டும் 5 பேர் இந்தப் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த மே மாதத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனிஷ் சவுத்ரி (19), இறுதியாண்டு பயோ மெடிக்கல் பிரிவைச் சேர்ந்த அனுப்பிரியா ஆகியோர் அடுத்தடுத்த நாள்களில் தற்கொலை செய்துகொண்டனர். ஜூலை 15-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராகவ் (21) என்ற மாணவர் ஏழாவது மாடியில் தற்கொலை செய்துகொண்டார். கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவர்களுக்குள் பெரும் தகராறு மூண்டது. இதில், ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதிக்கொண்டனர்.

மாணவர்களிடையே சண்டையில் துப்பாக்கி
மாணவர்களிடையே சண்டையில் துப்பாக்கி

மாணவியின் மரணம் குறித்துப் போலீஸார் கூறுகையில், ` தற்கொலை செய்துகொண்ட மாணவி, அடிக்கடி வெளியில் சென்று தங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இதைப் பற்றி பெற்றோரின் கவனத்துக்கு விடுதி நிர்வாகிகள் கொண்டு சென்றுள்ளனர். பெற்றோரும் கண்டித்ததால், மனமுடைந்து விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு