Published:Updated:

`10 செல்போன்கள்; 40 பெண்கள்; அன்பான மிரட்டல்!' -திருச்சி வங்கி அதிகாரி மீது மனைவியின் அடுத்த புகார்

எட்வின் ஜெயக்குமார்
எட்வின் ஜெயக்குமார்

`என்னைப்பற்றி தவறான தகவலை வெளியே சொல்லிக் கொண்டிருக்கிறாய், பரவாயில்லை. நான் அனைத்தையும் மறந்து விடுகிறேன். நாம் சேர்ந்து வாழலாம் வா' என மனைவிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் எட்வின்.

தஞ்சாவூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பொதுத்துறை வங்கியில் கணக்காளராகப் பணிபுரியும் தனது கணவர் மீது போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில், வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை தனது வலையில் வீழ்த்தி அவர்களுடன் தவறான நட்பு வைத்திருப்பதாகவும் அதை அவருடைய செல்போனில் ஆபாசப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

`போலீஸில் புகார் கொடுத்தவுடன் என் கணவரிடமிருந்து தனக்கு அன்பான மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அவர் வெளியில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் என் உயிருக்கு ஆபத்து' என தஞ்சை எஸ்.பி மகேஸ்வரனிடம் மீண்டும் புகார் கொடுத்திருக்கிறார் மனைவி.

எட்வின் ஜெயக்குமார்
எட்வின் ஜெயக்குமார்

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் தாட்சர். இவருக்கும் திருச்சி மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்த எட்வின் ஜெயக்குமார் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 2-ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஜெயக்குமார் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள பொதுத்துறை வங்கியில் கேஷியராகப் பணிபுரிந்து வருகிறார்.

திருமணம் முடிந்ததும் தனி அறையில் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்துள்ளார் எட்வின். இதனால் தன் கணவர் மீது தாட்சருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக எட்வினின் அம்மா லில்லி ஹைடாவிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர் முறையான பதில் சொல்லவில்லை.

Vikatan

இதையடுத்து, எட்வின் வேலைக்குச் சென்ற பிறகு அவர் பயன்படுத்தி வந்த தனி அறையை தாட்சர் சோதனை செய்துள்ளார். அங்கு பத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்துள்ளன. அதில் இரண்டு செல்போன்களை எடுத்துப் பார்த்தவருக்கு கடும் அதிர்ச்சி. பல பெண்களுடன் எட்வின் இருப்பது போன்ற போட்டோக்கள், ஆபாச வீடியோக்கள், தவறான சேட்டிங் எனப் பல விஷயங்களைக் கண்டறிந்தார்.

அதில், இரண்டு செல்போன்களை மட்டும் எடுத்துக்கொண்டு தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்தவர், வல்லம் மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார். போலீஸார் புகாரை வாங்க மறுக்கவே, டி.ஐ.ஜி லோகநாதனைச் சந்தித்து முறையிட்டார். அதன்பிறகே ஜாமீனில் வெளிவரமுடியாத 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, எட்வின் மற்றும் அவர் குடும்பத்தார் தலைமறைவாகிவிட்டனர். இந்த நிலையில், எட்வினிடமிருந்து தாட்சருக்குக் கடிதம் ஒன்று வந்துள்ளது.

இரண்டு செல்போன்களில் இருக்கும் ஆதாரங்களே இவ்வளவு என்றால் மற்ற செல்போன்களையும் கைப்பற்றி எட்வினிடம் தீர விசாரிக்க வேண்டும்.
தாட்சர்

தாட்சரிடம் பேசினோம். `` எனது கணவரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருந்ததையடுத்து அவரது தனி அறையை சோதனை செய்தேன். அதில் 15 செல்போன்கள் இருந்தன. அதில் இரண்டு செல்போன்களை மட்டும் எடுத்துப் பார்த்தேன். அதில் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் அவருக்குத் தவறான பழக்கம் இருப்பது தெரியவந்தது.

மேலும் இரண்டு செல்போன்களை மட்டும் எடுத்து வந்து, அதில் இருந்த ஆதாரங்களை வைத்து எட்வின் மீது புகார் கொடுத்தேன். இதன்பிறகு மணப்பாறையில் உள்ள அவரின் வீட்டுக்குச் சென்று பார்த்தேன். வீடு பூட்டிக்கிடந்தது.

அம்மாவைப் பார்க்க வரேன்னு சொன்னியே.. ஏன் வரலை? -அவினாசி சாலை விபத்தால் கதறிய பெற்றோர்

தற்போது எனக்கு ஒரு கடிதத்தை எட்வின் அனுப்பியுள்ளார். அதில், `என்னைப்பற்றி தவறான தகவலை வெளியே சொல்லிக் கொண்டிருக்கிறாய். பரவாயில்லை, அனைத்தையும் மன்னித்து மறந்து விடுகிறேன். நாம் சேர்ந்து வாழலாம் வா' என்று எழுதியுள்ளார். நான்கு பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் எட்வின் பெண்களுடன் இருந்ததைப் பற்றியும் தான் செய்த தவற்றைப் பற்றியும் எந்த இடத்திலும் அவர் குறிப்பிடவில்லை. என் மீது குற்றம் சுமத்தும் நோக்கத்திலேயே அந்தக் கடிதம் இருந்தது. இதை ஓர் அன்பான மிரட்டல் கடிதமாகவே நான் பார்க்கிறேன்.

எனவே, எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதுவதால் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சை எஸ்.பி மகேஸ்வரனிடம் புகார் அளித்துள்ளேன். இரண்டு செல்போன்களில் இருக்கும் ஆதாரங்களே இவ்வளவு என்றால் மற்ற செல்போன்களையும் கைப்பற்றி எட்வினிடம் தீர விசாரிக்க வேண்டும். அவர் வெளியில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் என் உயிருக்கு ஆபத்து" என்றார் அச்சத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு