Published:Updated:

`6-ம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்!’ - காட்பாடி பள்ளியில் நேர்ந்த கொடுமை

ஆசிரியர் சுரேஷ்பாபு
ஆசிரியர் சுரேஷ்பாபு

காட்பாடி அருகே உள்ள பள்ளியில், 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த கசம் பகுதியில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் ஆசிரியர் சுரேஷ்பாபு என்பவர் 6-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இந்த ஆசிரியரின் அநாகரிக செயலை 10-ம் வகுப்பு மாணவிகள் சிலர் நேரில் பார்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் பாதிக்கப்பட்ட 6-ம் வகுப்பு மாணவியின் பெற்றோரிடம் கூறினர். பதறிப்போன பெற்றோர் மாணவியைப் பள்ளிக்கு அனுப்பவில்லை.

இந்த நிலையில், ஆசிரியர் சுரேஷ்பாபு மேலும் சில மாணவிகளுக்கும் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டது. அதையடுத்து, கொதித்தெழுந்த பாதிக்கப்பட்ட 6-ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் தங்களின் உறவினர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டனர்.

 பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

தலைமை ஆசிரியரை சந்தித்து கடுமையாக வாக்குவாதம் செய்தனர். அதன்பிறகு, பள்ளி நிர்வாகம் முழு விசாரணை நடத்தி ஆசிரியர் சுரேஷ்பாபுவை தற்காலிகமாக `சஸ்பெண்டு’ செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கும் பள்ளி நிர்வாகம் தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. சஸ்பெண்டு செய்யப்பட்ட ஆசிரியரிடம் மாவட்டக் குழந்தைகள் நல அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆசிரியர் சுரேஷ்பாபு
ஆசிரியர் சுரேஷ்பாபு

இதுதொடர்பாக விளக்கம் கேட்க பள்ளி தலைமை ஆசிரியரை போனில் பலமுறை தொடர்புகொண்டோம். அவர் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. பள்ளிகளிலும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருவது பெற்றோர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு