கோவை தங்க நகை வியாபாரிகளைக் குறிவைத்துக் கொள்ளையடித்த உத்தரப்பிரதேசக் கொள்ளையர்கள் குறித்தும், அவர்களைப் பிடிப்பதற்காக நடந்த முயற்சிகள் குறித்தும் கடந்த பத்து அத்தியாயங்களாக ‘தங்க வேட்டை’ தொடரில் பயணிக்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக கோவையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் தொகுப்புதான் இந்தத் `தங்க வேட்டை’. இந்தத் தொடரில் இடம்பிடித்த உத்தரப்பிரதேச போலீஸ் அதிகாரிகள் மற்றும் கொள்ளையர்கள் பெயர்கள் அனைத்துமே உண்மையானவை. பாதுகாப்பு மற்றும் சட்டச் சிக்கல் காரணங்களுக்காக தங்க நகை வியாபாரிகளின் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டிருந்தன.

2017-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியிருந்தாலும், ராஜனின் நகைகள் கொள்ளையடிக்கப் பட்ட பிறகுதான் கொள்ளை யர்களைத் தேடும் பணி தொடங்கியது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த தங்க நகை வியாபாரியான ராஜன், உத்தரப்பிரதேசக் கொள்ளை யர்களைப் பிடித்து தன் நகைகளை மீட்பதற்காக கிட்டத்தட்ட 40,000 கி.மீ தூரம் பயணித்து, 150 நாள்களுக்குமேலாக உத்தரப்பிரதேசத்தில் தங்கியிருந்தார். அவரின் முயற்சிகளும் அனுபவங் களும்தான் `தங்க வேட்டை’த் தொடர்!

இதுகுறித்து நம்மிடம் பேசினார் ராஜன், ‘‘சமூக மற்றும் பொருளாதாரக் குற்றங்களுக்கு மற்ற நாடுகளில் கடுமை யான தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் ஒரு தனி மனிதனுக்கு நடக்கும் பொருளாதாரக் குற்றம்குறித்து யாரும் கவலைப் படுவதில்லை. இந்த வழக்கு தொடர்பாக உத்தரப்பிரதேசத்துக்கு ஏழு முறை, பஞ்சாப்புக்கு ஒரு முறை, பெங்களூருவுக்கு ஒரு முறை, சென்னைக்கு நான்கு முறை, சேலத்துக்கு மூன்று முறை பயணித்திருக்கிறேன். ஆனால், கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள் எல்லோரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.

அவர்கள்மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருக்கும்போது, அந்தக் குற்றவாளிகளுக்கு எதற்காக ஜாமீன் வழங்க வேண்டும்? கொள்ளை யடிக்கப்பட்ட நகைகள் மூலம் குற்றவாளிகள் வாங்கிய சொத்துகளை மீட்டு, அதை உரியவர் களிடம் ஒப்படைக்க வேண்டும். முக்கியமாக, இதுபோன்ற திருட்டு நகை வாங்கும் ஏஜென்ட்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழில்நுட்பம் இவ்வளவு முன்னேற்றம் அடைந்திருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்படவில்லை. இது கடும் விரக்தியைத் தருகிறது. நகைகளை எப்படியாவது மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில், பல்வேறு வகைகளில் தொடர்ந்து முயன்று கொண்டிருக் கிறோம். அதிகாரிகளின் மொழிப் பிரச்னை பெரும்பின்னடைவாக இருக்கிறது. வட மாநிலங்களிலிருந்து தினசரி ஏராளமானோர் தமிழ்நாடு வருகின்றனர். அப்படி வருபவர்கள், ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலையில் திருட்டில் ஈடுபட்டாலும், அவர்களிடம் உரிய விசாரணை நடத்த மொழி ஒரு தடையாக இருக்கிறது.

பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களைக் கொண்ட ஒருங்கிணைந்த நாடுதான் இந்தியா. எனவே, தென்னிந்தியாவில் அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் தகுதித்தேர்விலேயே இந்தி போன்ற பொதுமொழிகளுக்குப் பயிற்சி வழங்க வேண்டும். அதேபோல், வட இந்திய போலீஸ் அதிகாரிகளுக்கு தெலுங்கு அல்லது தமிழ் போன்ற ஏதேனும் ஒரு தென்னிந்திய மொழியைப் பயிற்றுவிக்க வேண்டும். அப்படிச் செய்தால், இதுபோன்ற வழக்குகளில் விரைந்து தீர்வுகாண முடியும்’’ என்றார்.

இந்தத் தொடரை தொடர்ந்து படித்து வருகிறார் கோவை நகை வியாபாரிகள் சம்மேளன தலைவர் சபரி. அவர் நம்மிடம், ‘‘15 ஆண்டுகளுக்கும் மேலாகவே இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சில சம்பவங்கள் வெளியில் தெரிகின்றன; பல சம்பவங்கள் தெரிவதில்லை. இதுபோன்ற கொள்ளையர்கள் எல்லோரும் அவர்களின் மாநிலத்தில் பெரிய அந்தஸ்துடன் இருக்கின்றனர். ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு, அதைவைத்து ஆண்டு முழுவதும் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். எனவே, தமிழ்நாடு காவல்துறையும் வட மாநிலங்களின் காவல்துறைகளும் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டால்தான் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களை மீட்க முடியும்.

பேருந்தில் சற்று கண் அசந்தாலும் பொருள்களைத் திருடிவிடுகின்றனர். தமிழகத்தில் இதுவரை சுமார் 60 கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கோவையில் மட்டுமே 25 சம்பவங்களுக்குமேல் நிகழ்ந்துள்ளன. ஆம்னி பேருந்துகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்த வேண்டும். ரயிலில் எப்படி ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை பரிசோதிக்கிறார்களோ, அதேபோல் பேருந்துப் பயணிகளிடமும் ஆவணங்களைப் பரிசோதிக்க வேண்டும். வியாபாரிகளும் இதுபோன்ற பயணங்களில் நகைகளை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

‘‘கோவை மட்டுமல்ல... சென்னை, மதுரை, ஆந்திரா, தெலங்கானா எனப் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்துதான் இந்தக் கொள்ளை யர்கள் இயங்கிவருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையைச் சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் காரில் ஐந்து கிலோ நகையுடன் வீட்டுக்கு வந்துள்ளார். காரிலிருந்து அவர் இறங்கி கேட்டைத் திறக்கும் நொடிப்பொழுதில் நகையைத் திருடிவிட்டனர். இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதேபோல் மதுரையில் பட்டப்பகலில் நகைக்கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். தென்னிந்தியர்கள் தங்க நகையை அதிகம் பயன்படுத்துபவர்கள் என்பதால், இந்தப் பகுதியை அவர்கள் டார்கெட் செய்கின்றனர். தங்க நகைகளுடன் பேருந்தில் பயணிப்பவர்களைப் பின்தொடர்வதற்கென்றே கொள்ளையர்களிடம் தனி டீம் இருக்கிறது. தங்க நகை உற்பத்தியில் தற்போது போட்டி அதிகரித்துவிட்டது. எனவே, இங்கு இருக்கும் சிலர் தகவல் கொடுத்தும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்’’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்த வழக்கில் மற்றொரு முக்கிய நபரான, தமிழகத்தைச் சேர்ந்தவரும் உத்தரப்பிரதேச எஸ்.எஸ்.பி-யுமான முனிராஜ் நம்மிடம் பேசினார். ‘‘பழைய தங்க நகைக் கொள்ளை யர்களின் பட்டியலை எடுத்து, அவர்களின் தற்போதைய நிலைகுறித்து முதலில் ஆராய வேண்டும். அதில், அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது எனப் பார்க்க வேண்டும். சரியான தண்டனை கிடைக்காதபட்சத்தில், கடுமையான தண்டனை கொடுத்து அவர்களை அச்சமடைய செய்ய வேண்டும்.

உத்தரப்பிரதேசத்தில் ஏராளமான ஊர்களில் தென்னிந்தியாவைக் குறிவைத்து இயங்கும் கொள்ளையர்கள், கூட்டம் கூட்டமாக இருக்கின்றனர். அப்படி தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் விவரங்களை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங் களுக்கும் அனுப்ப வேண்டும். நாம் அனுப்பும் விவரங்களை, தமிழ்நாட்டில் பொது இடங்களிலும் வைக்க வேண்டும்.

அத்துடன், நகைகளை மீட்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம். உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து, பேருந்துகளில் பயணித்தவர்களின் விவரங்களை எடுத்து விசாரணை நடத்த வேண்டும். அப்படிச் செய்ததால்தான், நரசிம்மன் வழக்கில் நகைகளை மீட்க முடிந்தது. பேருந்தில் பயணிப்பவர்களிடம் அடையாள அட்டைகளைப் பரிசோதிக்க வேண்டும். அனைவரிடமும் மொபைல் எண்ணை வாங்க வேண்டும். ஒரு பயணி ஏற்கெனவே முன்பதிவு செய்த இடத்தில்தான் இறங்குகிறாரா என்பதை கவனிக்க வேண்டும். அப்படி ஏதாவது ஒரு பயணி முந்தைய ஸ்டாப்களில் இறங்கினால், அவர் ஏறிய லக்கேஜுடன்தான் இறங்குகிறாரா அல்லது கூடுதல் லக்கேஜுடன் இறங்குகிறாரா எனப் பார்க்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆம்னி பேருந்திலும் இதுபோன்ற காஸ்ட்லி பொருள்களை வைப்பதற்கென்று தனி லாக்கரை அமைக்க வேண்டும். தங்க நகைகளை இன்ஷூர் செய்வதும் மிகவும் அவசியம்’’ என்றார்.

தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யான ஜெயந்த் முரளியிடம் இதுதொடர்பாகப் பேசினோம். ‘‘இந்த வழக்குகளை நாங்கள் தொடர்ந்து தீவிரமாக விசாரித்துவருகிறோம். நகைகளை விரைந்து மீட்பதற்கு உத்தர விட்டுள்ளோம். இதுபோன்று தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். உத்தரப்பிரதேச காவல்துறையுடன் இணைந்து, வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’’ என்றார்.

(வேட்டை தற்காலிகமாக ஓய்கிறது)

தமிழ்நாட்டைப்போலவே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தங்க நகைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த மாநிலங்களிலும் உத்தரப்பிரதேசக் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். அங்கு உள்ள போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுப்பதால், கொள்ளையர்களைப் பிடிப்பதுடன் நகையையும் விரைந்து மீட்க முடிகிறது. டெல்லியில் உள்ள ஆந்திரா மற்றும் தெலங்கானா அரசு இல்லங்களில் காவல்துறைக்கு எனத் தனியாக ஜீப் இருக்கிறது. கொள்ளைச் சம்பவம் நடந்தவுடன் அவர்கள் டெல்லிக்கு விரைந்து, அந்த வாகனங்கள் மூலம் உத்தரப்பிரதேசம் சென்றுவிடுகின்றனர்.

தவிர, அவர்கள் எல்லோரும் உத்தரப்பிரதேச போலீஸாருடனும் தொடர்பில் இருக்கின்றனர். இதனால், குற்றம் நடந்தவுடனேயே அவர்களுடன் பேசி தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றனர். அதேபோல், குற்றவாளிகளின் பட்டியலையும் எடுத்து ஃபாலோ செய்துவருகின்றனர். இதனால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தற்போது உத்தரப்பிரதேசக் கொள்ளையர் களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. கேரள போலீஸாரும் விரைந்து செயல்படுவதால் அங்கும் உத்தரப்பிரதேசக் கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவதில்லை.