(குறிப்பு: கொள்ளை சம்பவங்களில் விசாரணைகளின்போது போலீஸ் அளிக்கும் சம்பிரதாய தகவல்களை மட்டுமே இதுவரை கேட்டிருப்போம். இதுபோன்ற விசாரணை நடைமுறைகளில் நடக்கும் பகீர் தகவல்களை முதன்முறையாகப் புட்டுப் புட்டு வைக்கிறது, விரைவில் நிறைவடையவிருக்கும் இந்த மினி தொடர்!)

தமிழக போலீஸ் டீம் இல்லாமல், நகையைப் பறிகொடுத்த ராஜன், சோம்நாத் பாட்டீல், குமார் ஆகிய மூவர் மட்டும் கொள்ளைபோன நகைகளை மீட்பதற்காக உத்தரப்பிரதேசம் வந்து சேர்ந்தனர். அம்ரோஹோ மாவட்ட எஸ்.எஸ்.பி-யை அவர்கள் சந்திக்க முயற்சி செய்தார்கள். ஆனால், மூன்று நாள்களாகியும் அவரைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. அவரை சந்திக்கச் சொல்லி அறிவுறுத்திய முனிராஜையும் தொடர்புகொள்ள இயலவில்லை.

`எதிர்பார்த்து வந்த வேலை நடக்காதோ!’ என்ற அச்சம் ஒருபுறம் வாட்டியெடுக்க, மற்றொருபுறம் வேறு சில பிரச்னைகளும் ஏற்பட்டன. கடுங்குளிர் அவர்களை வாட்டி வதைத்தது. நிலக்கடலை, முட்டை, ஆப்பிள் ஆகிய மூன்றும்தான் அங்கே உணவாகக் கிடைத்தன. தென்னிந்திய உணவுகள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஹோட்டல்களும் இல்லை. அங்கிருந்து சுமார்

15 கி.மீ தொலைவில் கர்நாடகா ஹோட்டல் ஒன்று இருந்தது. அவ்வளவு தொலைவுக்குச் சென்று மூன்று வேளையும் சாப்பிட முடியாது என்பதால், ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் அங்கு சென்று சாப்பிட்டு வந்தனர்.

இவ்வளவு சவால்களுக்கு மத்தியிலும் அவர்கள் எடுத்த தொடர் முயற்சிகளுக்கு ஒருவழியாக பலன் கிடைத்தது. அம்ரோஹா எஸ்.எஸ்.பி-யைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி கிடைத்துவிட்டது. மூவரும் மிகுந்த நம்பிக்கையுடன் கிளம்பினர். ஆனால், அங்கும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ‘‘உங்கள் வழக்குக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. இதில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது’’ என்று அவர் கைவிரித்துவிட்டார். ஆனால், அவர்கள் அத்துடன் முடங்கிவிடவில்லை. அடுத்ததாக, மொரடாபாத் ஐ.ஜி-யைச் சந்திக்க முயற்சி செய்தனர். அவரும் சந்திக்க நேரம் கொடுத்தார்.

இவர்கள் சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்ட ஐ.ஜி, ‘‘நீங்கள் சொல்வதெல்லாம் சரி. உங்கள் மாநில போலீஸ் இல்லாமல் நீங்கள் மட்டும் உதவி கேட்டு வந்துள்ளீர்களே?’’ என்று கேட்டு அதிரவைத்தார்.

‘‘எப்படியாவது அவர்களைப் பிடித்துக் கொடுங்கள். அதற்குள் நாங்கள் எங்கள் போலீஸை அழைத்துவருகிறோம்’’ என்று உறுதியளித்த ராஜன், ஆரம்பத்திலிருந்து நடந்த சம்பவங்களை விரிவாக விளக்கினார். ராஜனின் வாதங்களை முழுமையாகக் கேட்டுக்கொண்ட பிறகு, ‘‘இது சீரியஸான விஷயம்தான். ஆனால், அது ரெளடிகள் அதிகம் இருக்கும் பகுதியாயிற்றே...’’ என்று இழுத்தார்.

‘‘இருந்துவிட்டுப்போகட்டுமே சார்! உங்களிடம்தான் இத்தனை காவலர்கள், ஆயுதங்கள் என எல்லாம் இருக்கின்றனவே. நீங்கள் ஏன் அவர்களைப் பார்த்து பயப்படுகிறீர்கள்?’’ என்று சட்டென ராஜன் கேட்க, ஐ.ஜி-யின் முகம் மாறியது. `தவறாக நினைத்துவிட்டாரோ!’ என்று மூவரின் மனதும் பதைபதைத்தது.

சட்டென ஐ.ஜி உதிர்த்த பெருமிதச் சிரிப்பு அவர்களின் பதைபதைப்பை விரட்டியடித்தது. ‘‘அவ்வளவு தூரத்திலிருந்து வந்திருந்தாலும் எவ்வளவு தைரியத்துடன் கேள்வி கேட்கிறீர்கள்! தென்னிந்தியர்கள் அறிவாளிகள் மட்டுமல்லர், தைரியசாலிகளும்

தான் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்’’ என்று அவர்களைப் பாராட்டினார் ஐ.ஜி. இதுமட்டுமல்ல, உடனடியாக அம்ரோஹா எஸ்.எஸ்.பி-யை தொலைபேசியில் அழைத்து, மூவருக்கும் தேவையான உதவிகளைச் செய்யுமாறு உத்தரவிட்டார். உற்சாகமடைந்த மூவரும் ஐ.ஜி-க்கு நன்றி தெரிவித்துவிட்டு விடைபெற்றனர்.

அம்ரோஹா மாவட்ட எஸ்.எஸ்.பி அலுவலகம்.

எஸ்.எஸ்.பி முன்னர் ராஜன், சோம்நாத் பாட்டீல், குமார் மூவரும் அமர்ந்திருந்தனர்.

‘‘உங்களுக்கு என்னதான் வேணும்?’’ என்றார் எஸ்.எஸ்.பி.

‘‘கொள்ளையர்களைப் பிடிக்கணும் சார்’’ என்றார் ராஜன்.

‘‘பிடிச்சுக் கொடுக்கிறோம். ஆனா, உங்க போலீஸ் இங்கே வந்தாகணும்’’ என்று மீண்டும் அழுத்தமாகச் சொன்னார் எஸ்.எஸ்.பி.

‘‘நிச்சயமாக சார்’’ என்று உறுதியளித்த ராஜன், தமிழக போலீஸ் உயரதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயன்றார். அவை அத்தனையும் தோல்வியில்தான் முடிந்தன.

கோவை...

ராஜன் மற்றும் குமாரின் மனைவி இருவரும் போலீஸ் உயரதிகாரி ஒருவரைச் சந்தித்து நிலைமையை எடுத்துச் சொன்னார்கள். ‘‘உத்தரப்

பிரதேச போலீஸ் அதிகாரிகளிடம் போனில் பேசுங்கள் சார். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்’’ என்றனர்.

‘‘நான் எதற்கு உத்தரப்பிரதேச போலீஸாரிடம் பேச வேண்டும்?’’ என்று பொறுப்பில்லாமல் பேசினார் அந்த அதிகாரி.

‘‘சார் ப்ளீஸ்... எங்கள் போனிலிருந்து அழைக்கிறோம். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க’’ என்று கெஞ்சினார்கள்.

‘‘அடுத்தவங்க போன்ல இருந்தெல்லாம் என்னால பேச முடியாது’’ என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார் அந்த அதிகாரி.

உத்தரப்பிரதேசம்...

ராஜனின் செல்போன் சிணுங்குகிறது. மொரடாபாத் ஐ.ஜி-யிடமிருந்துதான் அழைப்பு.

‘‘என்னப்பா இன்னும் உங்க போலீஸ்கிட்ட இருந்து எந்தத் தகவலும் இல்லையே?’’

“சார்... அவங்க குற்றவாளிகளை கஸ்டடி எடுக்கிற முயற்சியில இருக்காங்க. கஸ்டடி எடுத்ததும் உங்ககிட்ட பேசுறதா சொல்லி யிருக்காங்க’’ என்று சொல்லி சமாளிக்கிறார் ராஜன்.

‘‘சீக்கிரம்!’’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டிக்கிறார் ஐ.ஜி.

‘உத்தரப்பிரதேச போலீஸ் அதிகாரிகள் உதவுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் கோவை போலீஸாரின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் எல்லாமே வீணாகிவிடுமே... என்ன செய்வது?’ என்று சிந்தனையில் மூழ்குகிறார் ராஜன். தன் நண்பர்களின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சில வி.வி.ஐ.பி-களைத் தொடர்புகொண்டு பேசுகிறார் ராஜன். ஒருவழியாக மேலிடத்து அழுத்தம் காரணமாக மீண்டும் உத்தரப்பிரதேசம் செல்வதற்காக டீம் அமைத்தனர் கோவை போலீஸார். அதற்குள் 15 நாள்கள் கடந்துவிட்டன.

இன்னொரு பக்கம் சோம்நாத் பாட்டீலின் நகையைக் கொள்ளையடித்த டீமில் இடம்பெற்ற கவீந்தர், ஃபுர்கான் ஆகியோரைப் பிடிக்க அம்ரோஹா போலீஸிலும் பெண் டி.எஸ்.பி ஒருவர் தலைமையில் ஒரு டீம் அமைத்தனர்.

இளம் பெண் அதிகாரியான அவரை, ராஜன், சோம்நாத் பாட்டீல், குமார் மூவரும் சந்தித்துப் பேசினர்.

மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்த அந்தக் காவல் நிலையத்தில், அந்தப் பெண் அதிகாரி அமர்வதற்குகூட சரியான இருக்கை இல்லை. ஆனால், துணிச்சலான அந்தப் பெண் அதிகாரியின் பேச்சு, இவர்களுக்கு நம்பிக்கையளித்தது. ‘நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த கும்பலை சேஸிங் செய்து பிடித்தது உள்ளிட்ட சில முக்கிய க்ரைம்களில் அந்த அதிகாரி உடனடியாக தீர்வு கண்டிருக்கிறார்’ என்ற தகவல் இவர்களின் நம்பிக்கையை இரட்டிப்பாக்கியது.

கஸ்டடியில் எடுக்கப்பட்ட கொள்ளையன் ஆசிம்கான் மற்றும் திருட்டு நகைகளை வாங்கும் ஏஜென்ட் ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் 17 தமிழக போலீஸார் உத்தரப்பிரதேசம் வந்தனர். கவீந்தர் மற்றும் ஃபுர்கானைப் பிடிப்பதுடன், திருடப்பட்ட நகைகளை ஆசிம்கான் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரிடமிருந்து மீட்பதும் அவர்களின் திட்டமாக இருந்தது. கடும் குளிரிலும் இரவு-பகல் பாராமல் கவீந்தர், ஃபுர்கானை சல்லடைபோட்டுத் தேடியது அந்தப் பெண் அதிகாரியின் போலீஸ் டீம். ஆனால் தமிழக போலீஸார், தங்கியிருந்த ஹோட்டலைவிட்டு வெளியில் வரவேயில்லை.

ஒரு நள்ளிரவு நேரம், கவீந்தர் மற்றும் ஃபுர்கானைப் பிடித்தது உ.பி போலீஸ்.

‘‘சார்... எங்க வேலை முடிஞ்சது. ஆனா, இது உங்க வழக்கு. அதனால, உங்க போலீஸ்கிட்டயே இவங்கள விசாரிக்கச் சொல்லுங்க’’ என்றார் அந்தப் பெண் அதிகாரி.

‘‘ராஜன்... நீங்களே அவனுங்ககிட்ட பேசிக்கோங்க’’ என்று அங்கேயும் தமிழக போலீஸார் நழுவிவிட்டனர்.

கடும் கோபத்தில் இருந்த ராஜன், ஒரு பெல்டை எடுத்து கவீந்தர், ஃபுர்கான் இருவரையும் விளாசித்தள்ளினார். அதையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தது தமிழக போலீஸ் டீம்!

‘‘ஆமாம் சார்... நாங்கதான் திருடினோம்’’ என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களின் பெயரையும் தெளிவான உச்சரிப்பில் கூறினார்கள்.

‘‘கடைசியா திருடிய பணத்துல நான் ஒரு டிராக்டர் வாங்கினேன்’’ என்றான் கவீந்தர்.

‘‘நான் ஒரு தோப்பு வாங்கினேன்’’ என்றான் ஃபுர்கான்.

‘‘சரி... வாங்க ராஜன் ஊருக்குப் போகலாம். அங்கே போய் இவனுங்களைப் பார்த்துக்கலாம்’’ என்றனர் தமிழக போலீஸ்.

குற்றவாளிகளைப் பிடித்து நகைகளை மீட்கலாம் என்ற நம்பிக்கையில்தான் ராஜன் அண்ட் கோ உத்தரப்பிரதேசம் சென்றது. குற்றவாளிகளும் பிடிபட்டுவிட்டனர். ஆனால், நகைகள் மீட்கப்படவில்லை. குற்றவாளிகளைப் பிடித்து வருவதற்கே ஒரு மாத காலம் ஆகிவிட்டது.

கோவைக்குத் திரும்பி வந்த பிறகும் எந்த விசாரணையும் நடத்தாமல், ஆசிம்கான், ஜெயப்பிரகாஷ், கவீந்தர், ஃபுர்கான் ஆகிய நால்வரையும் சிறையில் அடைத்தனர் போலீஸார். ஒரே மாதம்தான்... நால்வரும் ஜாமீனில் வெளிவந்து சொந்த ஊர் சென்றனர். அப்போதுதான் முன்பு ஒருமுறை உத்தரப்பிரதேசத்தில் போகிறபோக்கில் நகை ஏஜென்ட் ஒருவர் உதிர்த்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தன, `நீங்கள் கொள்ளையர்களைப் பிடித்துவிடலாம்... ஆனால், நகைகளை மீட்க முடியாது!’ ஒட்டுமொத்த நம்பிக்கையும் நொறுங்கிப்போன நிலையில், வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார் ராஜன்.

ராஜனின் நகைக்கடை அலுவலகம். செல்போன் ஒலித்தது. மறுமுனையில் பேசியது, ராஜனுக்கு ஏற்கெனவே நன்கு பழக்கமானவரும் தங்க நகை வியாபாரியுமான நரசிம்மன்.

‘‘அண்ணா... பெங்களூரிலிருந்து பஸ்ல வரப்போ என்னுடைய 1.3 கிலோ நகைகளை கொள்ளையடிச்சுட்டாங்க. எனக்கு என்னவோ இதுவும் உத்தரப்பிரதேசத் திருடர்களா இருக்குமோனு சந்தேகமா இருக்கு. அதான் உதவிக்காக உங்களைக் கூப்பிட்டேன்’’ - பதற்றத்துடன் பேசினார் நரசிம்மன்.

``இருக்கிற பிரச்னைகளே தீராத நிலையில் மீண்டும் ஒரு கொள்ளை சம்பவமா..!’’ - அதிர்ச்சியடைந்தார் ராஜன். இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், ‘‘கவலைப்படாதீங்க நரசிம்மன்... நான் உடனே வர்றேன்’’ - பைக்கை உதைத்துக் கிளம்பினார் ராஜன்.

(வேட்டை தொடரும்)