15-ம் நூற்றாண்டுக்கு முன்பு ராஜபுத்திரப் படைகளில் காலாட்படை வீரர்களாக இருந்தார்கள் பவேரியா சமூகத்தினர். 1527-க்குப் பிறகு முகலாயர்களிடம் ராஜபுத்திரப் படைகள் தோல்வியடைந்தன. அடிப்படையில் காடோடிகளான பவேரியாக்கள், அதன் பிறகு இயல்பாகவே காடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். அவர்களில் சிலர் படைத்தொழில் பழகியவர்கள் என்பதால், காடுகளின் வழியாகச் சென்ற வணிகர்களிடம் கொள்ளையடித்தனர். 1871-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் குற்றப்பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act - 1971) இயற்றி, அதன்கீழ் நாடு முழுவதும் உள்ள 200 சமூகங்களைக் குற்றச்சமூகங்களாக அறிவித்தது. அவற்றில் பவேரியாக்களும் அடக்கம்.

தொடர்ந்து 1953-ம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் கொள்ளையையே பழக்கமாகக்கொண்டிருப்பவர்களைக் கட்டுப்படுத்த, Habitual Offenders Act நடைமுறைப்படுத்தப்பட்டது. 1956-ம் ஆண்டு ராஜஸ்தான், ஆல்வார் மாவட்டத்தின் ஆரவல்லி மலைத்தொடரில் 340 சதுர மைல்களைக்கொண்ட வனப்பகுதியை சரிஸ்கா தேசியப் பூங்காவாக அறிவித்தது இந்திய அரசு. 1972-ல் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. வனத்துறை விரிவாக்கம் செய்யப்பட்டு, காடுகளுக்குள் வனத்துறையினர் புகுந்தனர். பவேரியாக்களின் வேட்டை தடைசெய்யப் பட்டது. காடுகளைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், பவேரியாக்களின் வாழ்வாதாரங்களைக் கேள்விக்குறியாக்கியது. ஏற்கெனவே பகுதி நேரமாகவும், பகுதி குடும்பங்கள் மட்டுமே கொள்ளைகளில் ஈடுபட்டதுபோய்... பவேரியாக்கள் முழுநேரமாகக் கொள்ளையடிக்கத் தொடங்கினர்.

சரிஸ்கா தேசியப் பூங்கா 1985-ல் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பிறகு, கெடுபிடிகள் மேலும் தீவிரமாகின. காடுகளைவிட்டு முற்றிலுமாக வெளியேறி கிராமங்களுக்கு இடம்பெயந்தார்கள் பவேரியாக்கள். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலங்களில் பரவத் தொடங்கினார்கள். பல்வேறு மாநிலங்களில் கொள்ளைகளை அரங்கேற்றிய பவேரியாக்களின் கவனம், 1990-களின் மத்தியில் தமிழகத்தை நோக்கித் திரும்புகிறது. காரணம், தமிழர்களின் கலாசாரத்துடன் கலந்துவிட்ட தங்கநகைகள்.

கடந்த அத்தியாயங்களில் நாம் படித்த சேலம் காங்கிரஸ் பிரமுகர் தாளமுத்து நடராஜன் படுகொலை, கும்மிடிப்பூண்டியில் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரான சுதர்சனம் கொலை ஆகியவை பவேரியாக்கள் நடத்தியவைதான். இவை மட்டுமல்ல, 90-களின் இறுதியிலிருந்து 2005-ம் ஆண்டுக்குள்ளாக வேலூர் மாவட்டம், வாலாஜாபாத் டாக்டர் மோகன்குமார், திருவேற்காடு தி.மு.க பிரமுகர் கஜேந்திரன், சேலம் மாவட்டத்தில் பிரபல கண் மருத்துவர் சீனிவாசன் மற்றும் அவரின் பணிப்பெண் மணிமேகலை கொலை என,

13 படுகொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் வெறியாட்டம் ஆடியிருந்தார்கள் பவேரியாக்கள்.

கோவையில் கொள்ளையடித்த அஸ்லாம்கானை உத்தரப்பிரதேசம், புலந்த்சாஹர் மாவட்டம், சுசலைன்கலான் கிராமத்தில் தனிப்படை போலீஸ் அமுக்கியது அல்லவா... புலந்த்சாஹர் மாவட்டம் என்றவுடன்தான் நினைவுக்குவருகிறது பவேரியாக்கள் அங்கு நடத்திய மிக மோசமான கும்பல் பாலியல் வன்முறைக் கொடூரம்.

2016, ஜூன் மாதம் அது. டெல்லி - கான்பூர் நெடுஞ்சாலையில் பின்னிரவு 1.30 மணிக்கு விரைந்துகொண்டிருந்தது அந்த டாக்ஸி. நொய்டாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபரும், அவரின் 13 வயது மகளும் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள ஷாஜகான்பூர் சென்றுகொண்டிருந்தனர். புலந்த்சாஹர் மாவட்டத்தின் தோஸ்ட்பூர் கிராமத்தை அந்த டாக்ஸி கடக்கும்போது, பெரிய கடப்பாரையை காரின்மீது வீசுகிறார்கள் சிலர். தடுமாறிய டிரைவர் சமாளித்து, காரை சாலையோரம் நிறுத்துகிறார்.

சுற்றிவளைத்த 15 பேர்கொண்ட அந்தக் கும்பல், டிரைவரின் தலையில் கடப்பாரையால் தாக்குகிறது. பிறகு அந்தப் பெண்ணையும் அவரின் மகளையும் மிகக் கொடூரமாக பாலியல் வன்முறை செய்தது. இருவரும் குற்றுயிரும் குலையுயிருமாக மறுநாள் அதிகாலை மீட்கப்பட்டனர். நாட்டையே உலுக்கிய அந்தச் சம்பவத்தில், அப்போதைய உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் தலையிட்டு குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டார். பின்னாளில் குற்றவாளிகள் பவேரியாக்கள் என்பது உறுதிசெய்யப்பட்டு, சிலர் மட்டுமே கைதுசெய்யப்பட்டனர். பலரைத் தேடிவருகிறது போலீஸ்.

இப்போது அதே புலந்த்சாஹரில்தான் அஸ்லாம்கானை அள்ளிவந்திருக்கிறது தனிப்படை போலீஸ். இனி அவனது வாக்குமூலம்...

‘‘எந்தப் பயணமாக இருந்தாலும் முன்பதிவு இல்லாத டிக்கெட்தான் எடுப்போம். போலி அடையாள அட்டைமூலம் சிம்கார்டுகள் வாங்கிக்கொள்வோம். பாதி இருக்கைகள் நிறைந்த பேருந்துகளில்தான் ஏறுவோம். முழுவதும் நிறைந்திருந்தால் திருடும்போது யாராவது பார்த்துவிட வாய்ப்புள்ளது. பெரும்பாலும் பாயின்ட் டு பாயின்ட் வால்வோ பேருந்துகளில்தான் பயணம்செய்வோம். அதில்தான் விலை உயர்ந்த பொருள்களை எடுத்துவருவார்கள். குடும்பத்தினர், வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், தொழில்ரீதியாகப் பயணம் செய்பவர்கள் என்று பேருந்தில் ஏறுபவர்களை மூன்று வகையாகப் பிரித்துவிடுவோம். குடும்பத்தினர் மற்றும் வேலைக்குச் செல்பவர்களிடையே விலை உயர்ந்த பொருள்கள் இருக்காது. அதனால், அவர்களிடம் திருட மாட்டோம்.

சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் ஏஜென்ட்டிடமிருந்து அல்லது டிராவல்ஸ் அலுவலகத்திலிருந்து பயணிகளின் முன்பதிவு விவரங்களைத் திருடித் தரவே எங்களுக்குள் தனிக் கூட்டம் உள்ளது. ஆன்லைனில் பதிவுசெய்பவர்களின் விவரங்களைப் பெறவும் தனி டீம் உள்ளது. அவர்கள் மூலமாக டிராவல் சார்ட்டைப் பார்த்து, யாரிடம் திருட வேண்டும் என்பதை பேருந்து ஏறுவதற்கு முன்பே முடிவுசெய்துவிடுவோம். போலியான அடையாள அட்டைமூலம் லாட்ஜ் புக் செய்வோம்.

சி.சி.டி.வி கேமராக்கள் இருக்கும் லாட்ஜுகளை முடிந்தவரைத் தவிர்த்துவிடுவோம். இரவு நேரத்தில்தான் திருட்டில் ஈடுபடுவோம் என்பதால், பகல் நேரம் முழுவதும் லாட்ஜில் தங்கியிருப்போம்” என்ற அஸ்லாம்கான், கோவை ராஜனின் பணியாளர்களிடம் திருடியதைப் பற்றியும் விவரித்தான்.

‘‘உங்களின் இரண்டு ஊழியர்களும் பேருந்தில் பெட்டியுடன் ஏறியதை நாங்கள் பார்த்தோம். திருடுவதற்கு உகந்த நேரமாக நாங்கள் தேர்ந்தெடுப்பது அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணி. அந்த நேரத்தில்தான் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள். விளக்குகள் அணைக்கப் பட்டிருக்கும். யாரும் பேருந்திலும் ஏற மாட்டார்கள். நாங்கள் நான்கு திசைகளில் பிரிந்து செல்வோம்.

எந்தத் திருட்டாக இருந்தாலும் அதில் ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுத்துவிடுவோம். அவரை ‘உஸ்தாத்’ என்று அழைப்போம். ‘உஸ்தாத்’ சொல்வதைத்தான் நாங்கள் கேட்போம். உஸ்தாத்தான் அந்தத் திருட்டில் எங்களுக்கான செலவுகளைச் செய்ய வேண்டும். பேருந்தில் ஏறியவுடன், எங்களது அடையாளத்தைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் உடைகளைப் போட்டுக்கொள்வோம். நள்ளிரவு 3.30 மணியளவில் உஸ்தாத்திடம் நான்கைந்து முறை இருமல் சத்தம் எழுப்பியோ, வேறு ஏதேனும் சங்கேத முறையிலோ கொள்ளைக்கு அனுமதி வாங்குவோம்.

மெதுவாக இறங்கி... படுத்துக்கொண்டே குழந்தைகளைப்போல் தவழ்ந்து போவோம். இடையில் யாராவது விழித்தால், கம்பளியுடன் தரையோடு தரையாகப் படுத்துவிடுவோம். நம்பர் லாக்காக இருந்தால், அதைத் திறக்க எங்களிடம் ஒரு சீக்ரெட் இருக்கிறது. உயிரே போனாலும் அதைச் சொல்ல மாட்டோம். காலுக்குக் கீழ் பை வைத்திருக்கும்போது, அதற்குப் பின்புற சீட் கிடைத்தால் எங்களது வேலை இன்னும் எளிதாகிவிடும். உங்களது பையைப் பொறுத்தவரை, ஒரு நகைப்பெட்டியை மட்டுமே எடுத்தோம்.

பொருளைத் திருடிய பிறகு, அந்த எடைக்கு ஈடுசெய்யும்விதமாக செங்கல், கம்பளி, வாட்டர்பாட்டில் போன்றவற்றை பையில் வைத்துவிடுவோம். பையின் ஜிப்பை மூடும்போது, அதில் சிறிதளவு கம் தடவிவிடுவோம். அப்படி செய்தால் பையைத் திறக்கும்போது ஜிப் சிக்கிக்கொள்ளும். பையை வீட்டுக்குச் சென்று திறந்துகொள்ளலாம் என்கிற மனநிலைக்கு வந்துவிடுவார்கள்.

கொள்ளையடித்த பிறகு எந்தத் திசையில் வந்து கொள்ளையடிக்கிறோமோ, அதற்கு எதிர் திசையில் சென்றுவிடுவோம். பெங்களூரு - கோவை ரூட்டில் திருடினால், கோவை - சென்னை பயணம் செய்வோம். முதலில் சேலம் வரை பேருந்தில் சென்று பிறகு அங்கிருந்து சென்னை செல்வோம். சென்னையிலிருந்து ரயிலில் ஓப்பன் டிக்கெட் எடுத்து ஊருக்குச் சென்றுவிடுவோம். காரணம், ஜெனரல் கம்ப்பார்ட்மென்ட்டில்தான் செக்கிங் இருக்காது.

டெல்லிக்கு டிக்கெட் எடுத்துவிட்டு, டெல்லி ரயில்நிலையத்துக்கு இரண்டு ஸ்டேஷனுக்கு முன்பே இறங்கிவிடுவோம். நாங்கள் வரும் தகவலை முன்கூட்டியே ஏஜென்ட்டிடம் சொல்லிவிடுவோம். அவர்கள் தயாராக இருப்பார்கள். நாங்கள் ஊருக்கு வந்தவுடன் முதல் வேலையாக, கொள்ளையடித்த நகைகளை உருக்கிவிடுவோம்.

ஏஜென்ட், பாதி விலையில் பொருளை எடுத்துக்கொள்வார். அந்த நகையை உருமாற்றம் செய்து சிட்டியில் உள்ள சிறு வியாபாரிகளிடம் விற்றுவிடுவார். (உதாரணத்துக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை திருடர் களிடமிருந்து ஏஜென்ட்டுகள் 15 லட்சம் ரூபாய்க்கு வாங்குவார்கள். பிறகு, அதை ஏஜென்ட்டுகள் 25 லட்சம் ரூபாய்க்கு சிறு வியாபாரிகளிடம் விற்றுவிடுவார்கள். சந்தை மதிப்பைவிடக் குறைந்த விலை என்பதால், இந்த நகையை வாங்க பலரும் தயாராக இருக்கிறார்கள்.)

அப்போது ஏழு வயதுடைய அவரின் சிறுமி, “என் அப்பா, அம்மாவைத் தொந்தரவு செய்யாதீர்கள். நீங்கள் தேடி வந்துள்ள பொருளை நான் காட்டுகிறேன்” என்று மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்றாள்.

திருடும் நகைகளை விற்று, எங்கள் தாய், மனைவி பெயர்களில் அசையா சொத்தாக மாற்றிவிடுவோம். எங்கள் பெயரில் எதுவும் இருக்காது’’ என்று சொல்லி முடித்தான் அஸ்லாம்கான்.

அவனிடம் “எல்லாம் சரி... எங்களிடம் கொள்ளையடித்த நகை எங்கே?” என்று கேட்டார் ராஜன். அதற்கு மட்டும் கடைசிவரை பதில் சொல்லவில்லை அவன்.

அஸ்லாம்கானின் வீட்டுக்குச் சென்று தேடலாம் என்று மறுநாள் அஸ்லாம்கானையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்கிறார்கள் தனிப்படையினர். பிரமாண்டமாக இருந்தது கதவு. அதைத் தட்டினால் எந்தச் சலனமும் இல்லை. கதவு திறக்கப்படவில்லை. அவர்கள் மட்டுமல்ல, அந்தக் கிராமத்தில் யாருமே வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. வேறுவழியில்லாமல் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர் தனிப்படையினர்.

பளபளவென கிரானைட் தரை, தொங்கும் அலங்கார விளக்குகள், ஸ்மார்ட் டிவி என ஆடம்பரமாக இருந்தது அந்த வீடு. மாடியில் உள்ள ஓர் அறையில் அஸ்லாம்கானின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் பதுங்கி இருந்தனர். பெண் போலீஸாரின் உதவியுடன் அவர்களை வெளியில் அழைத்து விசாரித்தனர்.

அஸ்லாம்கானின் மனைவி வாய் திறக்கவில்லை. பெண் போலீஸார் அந்தப் பெண்ணிடம் கடுமைகாட்டத் தொடங்கினார்கள். அப்போது ஏழு வயதுடைய அவரின் சிறுமி, “என் அப்பா, அம்மாவைத் தொந்தரவு செய்யாதீர்கள். நீங்கள் தேடி வந்துள்ள பொருளை நான் காட்டுகிறேன்” என்று மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்றாள். அங்கு பெரிய சமையற்கூடம் ஒன்று இருந்தது. மாடு, ஆடு போன்றவற்றை நேரடியாக அழைத்து வர ஒரு பாதையும் இருந்தது. ஒரு சாம்பல் குவியலைக் காண்பித்து, “இங்குதான் என் அம்மா அந்தப் பொருளை வைத்தார்” என்றாள் அந்தச் சிறுமி.

தேடியதில் சாம்பல் புழுதி பறந்ததுதான் மிச்சம். அங்கு நகைகள் எதுவும் இல்லை. அனைவரும் அஸ்லாம்கானைப் பார்க்கின்றனர். “சார்... நகையை ஜெயப்பிரகாஷ் என்ற ஏஜென்ட்டிடம் விற்றோம். ஆனால், அன்றைய தினம் நான் ‘உஸ்தாத்’ இல்லை. ஆசிம்கான்தான் ‘உஸ்தாத்’. அவனைப் பிடித்தால்தான் பொருள் கிடைக்கும்” என்றான் அஸ்லாம்கான்.

(வேட்டை தொடரும்)