Published:Updated:

டெல்லி: 12-ம் வகுப்பு மாணவி மீது ஆசிட் வீசிய கும்பல்; பேருந்து நிலையத்தில் நடந்த கொடூரம்!

மாணவி மீது ஆசிட் வீசிய கும்பல்

``அவள் படிப்பில் மிகவும் திறமைசாலி, நல்லவள். எல்.எல்.பி பட்டப்படிப்பைத் தொடர திட்டமிட்டிருக்கிறாள். கபடி நிகழ்ச்சிக்காக வெள்ளிக்கிழமை விருது பெற இருந்தாள்." - சிறுமியின் அத்தை வேதனையோடு பகிர்ந்தார்.

டெல்லி: 12-ம் வகுப்பு மாணவி மீது ஆசிட் வீசிய கும்பல்; பேருந்து நிலையத்தில் நடந்த கொடூரம்!

``அவள் படிப்பில் மிகவும் திறமைசாலி, நல்லவள். எல்.எல்.பி பட்டப்படிப்பைத் தொடர திட்டமிட்டிருக்கிறாள். கபடி நிகழ்ச்சிக்காக வெள்ளிக்கிழமை விருது பெற இருந்தாள்." - சிறுமியின் அத்தை வேதனையோடு பகிர்ந்தார்.

Published:Updated:
மாணவி மீது ஆசிட் வீசிய கும்பல்

12-ம் வகுப்பு மாணவி ஒருவர், தன் சகோதரியுடன் டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் சென்றுகொண்டிருந்தார். இரண்டு பைக்கில் நோட்டமிட்டபடியே வந்த மர்ம நபர்கள், அந்த மாணவியைக் கண்காணித்து பின்தொடர்ந்துள்ளனர்.

புதன்கிழமை காலை 9 மணியளவில், பேருந்து நிலையத்தில் காத்திருந்த நேரத்தில், மாணவி முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. வலியால் அலறித் துடித்த அந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும், இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

மாணவி மீது ஆசிட் வீசிய கும்பல்
மாணவி மீது ஆசிட் வீசிய கும்பல்

அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த மாணவியுடன் நன்கு பழகிய நபர்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். அதில் ஒருவன் 17 வயது சிறுவன். மற்றொருவரை தேடிவருகின்றனர். `இந்த ஆசிட் வீச்சு சம்பவத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, விசாரித்து வருகிறோம்’ என்று டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி குறித்து மருத்துவர்கள் கூறும்போது, ``அவர் சுமார் எட்டு சதவிகித தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், கழுத்தில் சிவப்பு திட்டுகளாக காயங்கள் உள்ளன. வீங்கிய நிலையில் கண்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், `மகளுக்கு நீதி கிடைக்கும்' என்று ட்வீட் செய்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை விழித்திறன் மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் அத்தை, ``அவள் படிப்பில் மிகவும் திறமைசாலி, நல்லவள். எல்.எல்.பி பட்டப்படிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளார். கபடி நிகழ்ச்சிக்காக அவள் வெள்ளிக்கிழமை விருது பெற இருந்தாள். அவளுடைய பெற்றோர் இருவரும் தங்கள் குழந்தைகளை மிகவும் பாதுகாக்கிறார்கள். அந்த சிறுமிக்கு யாருடனும் பகை இல்லை” என்று கூறியுள்ளார்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டமுள்ள பேருந்து நிலையத்தின் அருகில் மாணவி மீது ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் டெல்லி மட்டுமல்லாது, இந்தியா முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன.