Published:Updated:

`ஆண் குழந்தைதான் வேண்டும்’ ; 8 முறை கட்டாயக் கருக்கலைப்பு!-கணவன்மீது ஓய்வுபெற்ற நீதிபதி மகள் புகார்

மும்பையில் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக எட்டு முறை தன் மனைவியைக் கருக்கலைப்பு செய்யவைத்த கணவன்மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காகச் சில நேரங்களில் கணவன்மார்கள் தங்கள் மனைவியைக் கடுமையாக சித்ரவதை செய்தல், கட்டாயக் கருக்கலைப்பு செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதுண்டு. மும்பையிலும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மும்பையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர், தன் மகளை ஏக்நாத் தேஷ்முக் என்பவருக்குக் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்துவைத்தார். ஏக்நாத் வழக்கறிஞராக இருக்கிறார். தாதரில் வசிக்கும் இந்தத் தம்பதிக்கு கடந்த 2009-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் 2009-ம் ஆண்டு மீண்டும் ஏக்நாத் மனைவி கர்ப்பமானார். ஆனால் அவரை டாக்டரிடம் பரிசோதனைக்கு உட்படுத்திவிட்டு, `இந்தக் குழந்தை வேண்டாம்’ என்று ஏக்நாத் கட்டாயக் கருக்கலைப்பு செய்தார். அதோடு, தனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று கூறி ஏக்நாத் தனது மனைவியை அடித்து உதைத்ததாகச் சொல்லப்படுகிறது.

அதோடு விடாமல் தன் மனைவியை பேங்காக்குக்கு அழைத்துச் சென்று செயற்கை முறையில் குரோமோசோம்களைப் பிரித்து ஆண் குழந்தை மட்டும் கருத்தரிக்கும் வகையில் சிகிச்சை மேற்கொண்டார். கருவின் ஆரம்பநிலையிலேயே அது ஆணா பெண்ணா என்பதைத் தெரிந்துகொள்ளவும் பல வகையான சோதனைகளைச் செய்ததோடு, ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக 1,500-க்கும் மேற்பட்ட முறை ஹார்மோன் ஊசி உட்பட பல வகை ஊசிகளைத் தன் மனைவிக்குப் போடவைத்திருக்கிறார். இது போன்ற சிகிச்சை முறைகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளன.

கர்ப்பிணி -Representational Image
கர்ப்பிணி -Representational Image

ஆனால் தாய்லாந்தில் மனைவியின் விருப்பம் இல்லாமலேயே இது போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஏக்நாத் தன் மனைவிக்கு எட்டு முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்திருக்கிறார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஏக்நாத்தின் மனைவி, இது குறித்து போலீஸில் புகார் செய்திருக்கிறார். போலீஸார் இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை!

`இளம்பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த காவலர் மீது வழக்கு பதிவு!’ - அதிரடிகாட்டிய புதுச்சேரி போலீஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு