Published:Updated:

புதுக்கோட்டை: ``நாங்க புத்தாண்டு கொண்டாடக் கூடாதா..?" - பட்டியல் சமூகத்தினருக்கு நேர்ந்த துயரம்

பட்டியல் சமூகத்தினர் குடியிருப்பு

பட்டியல் சமூக மக்கள் அளித்த புகாரின்பேரில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

புதுக்கோட்டை: ``நாங்க புத்தாண்டு கொண்டாடக் கூடாதா..?" - பட்டியல் சமூகத்தினருக்கு நேர்ந்த துயரம்

பட்டியல் சமூக மக்கள் அளித்த புகாரின்பேரில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
பட்டியல் சமூகத்தினர் குடியிருப்பு

புதுக்கோட்டை அருகே இறையூர், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவம்  அடங்குவதற்குள்ளேயே, அங்கிருந்து சில கி.மீ தூரத்திலுள்ள துடையூர் கிராமத்தில் ஒரு சாதிய வன்கொடுமைச் சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

துடையூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பட்டியல் சமூகக் குடும்பங்கள் வசிக்கின்றன. புத்தாண்டையொட்டி, அந்தப் பகுதி இளைஞர்கள், சிறுமிகள், பெண்கள் சேர்ந்து ஸ்பீக்கர் வைத்து பாடல்களை ஒலிபரப்பியும், கேக் வெட்டியும் புத்தாண்டை விழாவாகக் கொண்டாடியிருக்கின்றனர்.

புதுக்கோட்டை: ``நாங்க புத்தாண்டு கொண்டாடக் கூடாதா..?" - பட்டியல் சமூகத்தினருக்கு நேர்ந்த துயரம்

அப்போது, அங்கு வந்த மாற்றுச் சமூகத்தினர் சிலர், திடீரென உள்ளே புகுந்து அங்கிருந்த பட்டியல் சமூகத்தினரைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிபடுத்தியும், மேசையில் வைக்கப்பட்டிருந்த கேக்கை அடித்து நொறுக்கியும் ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும், மைக் செட், ஸ்பீக்கர், ஆடியோ மிக்ஸர் உள்ளிட்டவற்றையும் அடித்து, உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக, அந்தப் பகுதி மக்கள் வெள்ளனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். புகாரின் பேரில், வழக்கு பதிவுசெய்த வெள்ளனூர் போலீஸார், ரகளையில் ஈடுபட்ட மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சரத்குமார், கமல் ஆகிய இருவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இது தொடர்பாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூக மக்களிடம் பேசினோம். "நாங்க எது செஞ்சாலும், எங்க ஊர்ல இருக்குற மாற்றுச் சாதிக்காரங்களுக்குப் பிடிக்காது. இப்ப பிரச்னை பண்ணினவங்க, தொடர்ச்சியாகவே பிரச்னை பண்ணிக்கிட்டு இருக்காங்க. எங்க பிள்ளைங்களைப் பலமுறை தகாத வார்த்தைகளில் பேசியிருக்காங்க.

புதுக்கோட்டை: ``நாங்க புத்தாண்டு கொண்டாடக் கூடாதா..?" - பட்டியல் சமூகத்தினருக்கு நேர்ந்த துயரம்

எங்க புத்தாண்டு கொண்டாட்டத்தைப் பொறுக்க முடியாமல்தான் இன்னைக்கு ரகளையில் ஈடுபட்டு எல்லாத்தையும் சேதப்படுத்தியிருக்காங்க. `நீங்கல்லாம் எந்தக் காலத்துலயும் புத்தாண்டு கொண்டாடக் கூடாது'ன்னு சாதியைச் சொல்லி இழிவாப் பேசுனாங்க. அப்படின்னா, நாங்கல்லாம் புத்தாண்டு கொண்டாடக் கூடாதா... சம்பந்தப்பட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கணும்" என்றனர்.

புதுக்கோட்டை இறையூரில் நடந்த பிரச்னையின் ஈரம் காய்வதற்குள், இறையூருக்கு அருகே துடையூர் கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.