Published:Updated:

கணினியில் தகவலைத் திருடி மெயில் அனுப்பிய பணியாளர்!- வீட்டில் நடந்த கொள்ளையால் பியூஷ் கோயல் அதிர்ச்சி

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் வீட்டிலிருந்த விலையுயர்ந்த பொருள்கள் திருடப்பட்டுள்ளன. திருடியவரைக் கைதுசெய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான பியூஷ் கோயல், தற்போது மத்திய வர்த்தகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சராக செயல்பட்டுவருகிறார். இவரது வீடு, மும்பை நேபியன் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. அங்கு, பியூஸ் கோயல், மனைவி மற்றும் பிள்ளைகள் வசித்துவருகின்றனர்.

Theft
Theft

இந்நிலையில், கடந்த மாதம் 18-ம் தேதி, பியூஷின் மனைவி வெளியில் சென்றிருந்தபோது, வீட்டிலிருந்த விலையுயர்ந்த பொருள்கள் காணாமல் போயுள்ளன. இதை, இரண்டு நாள்கள் கழித்துதான் அமைச்சரின் மனைவி கவனித்துள்ளார். தான் வெளியில் சென்றபோது வீட்டிலிருந்தது வேலைக்காரர் மட்டும்தான் என்பதால், காவல் நிலையத்தில் அவர்மீது புகார் அளித்துள்ளார்.

ஒரு வாரம் பயிற்சி; ரூ.1,000 சம்பளம்; 2 நாள் விடுமுறை!- ஆந்திரா டு சென்னை வந்த 10 செல்போன் திருடர்கள்

பியூஷ் கோயலின் மனைவி அளித்த புகாரின் பேரில், அங்கு வேலை செய்யும் 28 வயதான விஷ்ணு குமாரை காவலர்கள் கைது செய்தனர். அவர், கடந்த இரண்டு வருடங்களாக பியூஷின் மும்பை வீட்டில் வேலை செய்துவருகிறார். கைதுக்குப் பிறகு நடந்த விசாரணையில், தான் பொருள்களைத் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும், அவரிடமிருந்து சில பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Theft
Theft

இதற்கிடையில், விஷ்ணுகுமாரின் செல்போன் தகவல்கள் மற்றும் கால் பதிவுகளை ஆய்வுசெய்த காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். வேலையாள் விஷ்ணு, அமைச்சரின் கம்ப்பூட்டரில் இருந்து சில தகவல்களைத் திருடி, யாரோ ஒருவருக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார் என்பதைக் கண்டுப்பிடித்துள்ளனர். ஆனால், என்ன தகவல், யாருக்கு அனுப்பப்பட்டது போன்ற விவரங்களைக் கண்டறியும் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மத்திய அமைச்சரின் தனிப்பட்ட கம்ப்பூட்டரில் இருந்து, சில அரசு சார்ந்த முக்கிய ஆவணங்களைத் திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மத்திய அமைச்சர் ஒருவர் வீட்டிலேயே கொள்ளைச் சம்பவம் நடந்தது பரபரப்பாகப் பேசப்படுகிறது.