Published:Updated:

தேனி: கர்ப்பிணி மனைவி கொலை - அ.தி.மு.க பேரூராட்சி முன்னாள் தலைவருக்குத் தூக்கு!

சுரேஷ்
சுரேஷ்

கர்ப்பிணி மனைவியை சித்ரவதை செய்து கொலை செய்த வழக்கில், அ.தி.மு.க பேரூராட்சி முன்னாள் தலைவரை சாகும்வரை தூக்கிலிட, தேனி நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்ள காந்திநகர் காலனியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் சுரேஷ் (வயது 36). அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர், கடந்த 2015-ம் ஆண்டு மேகமலை ஹைவேவிஸ் பேரூராட்சித் தலைவராக இருந்திருக்கிறார். சுரேஷுக்கும், கற்பகவள்ளி என்பவருக்கும் கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், கற்பகவள்ளி மூன்றாவதாகக் கருவுற்றிருக்கிறார். அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தபோது, கணவர் சுரேஷ், கற்பகவள்ளியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகவும், அவரைச் சந்தேகப்பட்டு அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தேனி: `எவ்வளவு நகையானாலும் விற்றுத் தருவேன்!' - 27 பவுன் நகையுடன் மாயமான நபர் கைது
சுரேஷ் மற்றும் சின்னமனூர் போலீஸார்
சுரேஷ் மற்றும் சின்னமனூர் போலீஸார்

இந்தநிலையில், 2015-ம் ஆண்டு, ஜூலை மாதம் 21-ம் தேதி பிற்பகலில், தனது வீட்டிலிருந்த மனைவி கற்பகவள்ளியைத் தாக்கிய சுரேஷ், சிகரெட்டால், அவரது மார்புப் பகுதியில் சூடுவைத்திருக்கிறார்.

மேலும், வயிறு மற்றும் பிறப்புறுப்பில் கொடூரமாகத் தாக்கியிருக்கிறார். இதில், கற்பகவள்ளியின் ஐந்து மாதக் கரு கலைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டது. அப்போதும் அவரைத் தொடர்ச்சியாக தாக்கிய சுரேஷ், தாலிக்கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்ய முயன்றிருக்கிறார். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வரவே, கற்பகவள்ளி தற்கொலைக்கு முயன்றதாகப் பொய் கூறி, அவரை சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார் சுரேஷ்.

தேனி: போலீஸாரை அலறவிட்ட `டிக்டாக்’ திவ்யா! - என்ன நடந்தது?
சுரேஷ்
சுரேஷ்

மேல் சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையிலிருந்து, தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார் கற்பகவள்ளி. அங்கே அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். கற்பகவள்ளியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அவரைக் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. அதையடுத்து சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்த சின்னமனூர் போலீஸார், அவரைக் கைதுசெய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்தநிலையில், நேற்று நீதிபதி அப்துல்காதர், சுரேஷ் செய்த குற்றம் உறுதியானதால், அவரைச் சாகும்வரை தூக்கிலிட உத்தரவிட்டார். மேலும், கருச்சிதைவு செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 10,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

தேனி நீதிமன்றம்
தேனி நீதிமன்றம்
தேனி: சுருளி அருவியில் கல்வெட்டை மறைத்து ரூ.5 லட்சத்தைச் சுருட்டிய வனத்துறை அதிகாரி!

மற்றொரு வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேனி மாவட்டம், தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த மொக்கை, அவரது மகன்கள் உதயகுமார், முத்து ஆகிய மூவரும், கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி, அதே தெருவில் வசித்துவந்த அழகர் மனைவி ராமாயி என்பவரை முன்பகை காரணமாக அரிவாளால் வெட்டினர்.

இதில், சம்பவ இடத்திலேயே ராமாயி உயிரிழந்தார். மூவரையும் தடுக்க வந்த ராமாயி மருமகள் லெட்சுமியும் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தார். இது தொடர்பாக தேவதானப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர்.

தேனி நீதிமன்றம்
தேனி நீதிமன்றம்
தேனி: `பெண்களுக்கு முன்னுரிமை; சொல்லும் தந்தை எம்.எல்.ஏ., மகனோ எம்.பி’ - ஓ.பி.எஸ்-ஐ சீண்டிய கமல்

இந்த வழக்கு, தேனி மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. விசாரணை முடிவடைந்து நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பு வழங்கினார். ராமாயியைக் கொலை செய்த குற்றத்துக்காக, மூவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டத்தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. லெட்சுமியைக் கொலை செய்ய முயன்றதற்காக, ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் மூவரும் தலா ரூ.10,000 வீதம், காயமடைந்த லெட்சுமிக்கு அபராதத் தொகையாகக் கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தார் நீதிபதி.

ஒரே நாளில், தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது நீதிமன்ற வளாகத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு