Published:Updated:

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யா மற்றும் தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

udit surya
udit surya

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை இன்று முழுவதும் தேனி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தனர். அப்போது, இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டதாகத் தகவல் வெளியானது.

cheating in neet
cheating in neet

மேலும், தேனி வி.ஏ.ஓ குமரேசன் முன்னிலையில், இருவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. பின்னர், மாலை இருவரையும் தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, சான்றுகள் பெறப்பட்டன.

நீட் ஆள்மாறாட்ட வழக்கு! - உதித்சூர்யா, பெற்றோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸ் தொடர்ந்து விசாரணை

அதைத் தொடர்ந்து தேனி லெட்சுமிபுரம் அருகே உள்ள மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர் செய்யப்பட்டனர். இந்நிலையில், உதித்சூர்யா மற்றும் வெங்கடேசனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இருவரும், தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

cheating in neet
cheating in neet

உதித்சூர்யாவின் அப்பாவான வெங்கடேசனுக்கு உடல்நிலை சரியில்லை எனவும், சிறுநீரகக் கோளாறு இருப்பதாகவும் கூறி, நாளை தேனி கோர்ட்டில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உதித்சூர்யாவின் ஜாமீன் மனு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.