Published:Updated:

``என் அண்ணனின் இழப்பை தாங்க முடியவில்லை!”- கொடூரமாகக் கொல்லப்பட்ட தேனி எழிலின் தம்பி கண்ணீர்

கட்டவெள்ளை என்ற திவாகரின் தூக்குதண்டனைக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம்!

கட்டவெள்ளை
கட்டவெள்ளை

தேனி மாவட்டம், சுருளி அருவி அருகே உள்ள வனப்பகுதிக்குச் சென்ற காதல் ஜோடியை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக தேனி நீதிமன்றத்தில் தூக்குத்தண்டனைக்கு ஆளான கட்டவெள்ளை என்ற திவாகரின் தூக்குதண்டனைக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

எழில் முதல்வன் & கஸ்தூரி
எழில் முதல்வன் & கஸ்தூரி

கடந்த 2011-ம் ஆண்டு கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இருக்கும் சுருளி அருவிக்குச் சென்ற காதல் ஜோடியான எழில் முதல்வன் மற்றும் கஸ்தூரி ஆகியோரை, அப்பகுதியைச் சேர்ந்த கட்டவெள்ளை என்கிற திவாகர், கொடூரமாக கொலை செய்தார். மேலும், கஸ்தூரியை பாலியல் கொன்டுமை செய்தார்.

இவ்வழக்கானது தேனி போலீஸாரிடமிருந்து சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி தேனி நீதிமன்றத்தால், கட்டவெள்ளை என்கிற திவாகருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 7 வருடக் கடுங்காவல் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி செந்தில் குமரவேல்.

சுருளி அருவி
சுருளி அருவி

மதுரையிலிருந்து தேனி மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர், தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட முதல் தூக்குத்தண்டனை இது.

Vikatan

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார் கட்டவெள்ளை. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், தேனி நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.

எழில் முதல்வன் குடும்பம்
எழில் முதல்வன் குடும்பம்

அதன் பின்னர், இந்திய குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பிய கட்டவெள்ளை, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், அவரது தூக்குத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

இதுதொடர்பாக, கொலையான எழில் முதல்வனின் சகோதரர் தாமரைச் செல்வனிடம் பேசியபோது, ``அவன் மன்னிக்க முடியாத கொடூரன். என் அண்ணனையும், கஸ்தூரியையும், அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்திருக்கிறான். கை மற்றும் கால்களை துண்டித்துள்ளான். பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான்.

கட்டவெள்ளை என்ற திவாகர்
கட்டவெள்ளை என்ற திவாகர்

இவ்வளவு மோசமான கொலையை நிகழ்த்திய கொடூரனை உடனே தூக்கிலிடுவதே சரியானது. அவனுக்கு மன்னிப்பு என்ற ஒன்றே இருக்கக் கூடாது. இன்றுவரை என் அண்ணனின் இழப்பை எங்களால் தாக்கிக்கொள்ள முடியவில்லை” என்று கண்ணீர் மல்க கூறினார்.