Published:Updated:

கட்டப் பஞ்சாயத்து..கடத்தல்! - தேனி பேராசிரியருக்கு 3 மாதங்களாக நடந்த கொடுமை

Arrest
Arrest

நண்பர் வாங்கிய கடனுக்காகப் பொறுப்பேற்ற பேராசிரியரைக் குடும்பத்தோடு கடத்தி, கட்டிவைத்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`போக்ஸோ சட்டத்தில் கைதான தேனி அ.தி.மு.க நிர்வாகி' - கட்சியை விட்டே நீக்கிய தலைமை

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பார்க் ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் இமானுவேல் ராஜ்குமார். சேலம் மாவட்டம் ஆத்தூர் கலைக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் இவருக்கு மனைவி மற்றும் 16 வயது மகள் உள்ளனர். மனைவி, போடி அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இமானுவேல் ராஜ்குமார், கடந்த ஜூன் 9ம் தேதி, போடி டி.எஸ்.பியிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதன் அடிப்படையில், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு, இன்று 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

police
police
Representative image

பேராசிரியர் இமானுவேல் ராஜ்குமார் தனது புகார் மனுவில் கூறியதாவது, `எனது நண்பர் முத்துவேல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கிறார். அவருக்குப் பணத்தேவை ஏற்படவே, தேனி கோட்டூரைச் சேர்த்த கிருபானந்த தயாநிதி என்பவரிடம் ரூ.43 லட்சம் வாங்கியுள்ளார். வாங்கிய தொகையைக் குறிப்பிட்ட நேரத்தில் முத்துவேலால் கொடுக்க முடியவில்லை. அதனால், முத்துவேலை, கிருபானந்த தயாநிதி, ராயப்பன்பட்டியைச் சேர்ந்த தில் பிரசாத் மற்றும் சில நபர்கள் சேர்ந்து, சின்னமனூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அடைத்துவைத்து பணத்தைத் திருப்பி தரும்படி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

`தண்ணீர்த் திருட்டுக்காக நடந்த கொலை!' -வீடியோ கான்ஃபரன்ஸில் ஆயுள் தண்டனை விதித்த தேனி நீதிபதி

அப்போது, நான் உதவி செய்வேன் என முத்துவேல் கூறியிருக்கிறார். அதனைக் கேட்ட அவர்கள், கடந்த மார்ச் 1ம் தேதி, முத்துவேலை அழைத்துக்கொண்டு என் வீட்டிற்கு வந்தனர். முத்துவேல், அவருக்காக என்னைப் பொறுப்பேற்கும் படியும், விரைவில் பணத்தை தான் கொடுத்துவிடுவதாகவும், உயிரைக் காப்பாற்றும் படியும் என்னிடம் அழுது கேட்டுக்கொண்டார். நான், எனது நண்பன் முத்துவேலின் உயிரைக் காப்பாற்ற வேண்டி, பணத்திற்காகப் பொறுப்பேற்றுக்கொண்டேன். அப்போது அந்தக் கும்பல், உடனே பணம் வேண்டும் எனக் கூறி, என் மனைவியிடம் இருந்த 13 பவுன் தங்க நகைகளைப் பறித்துச்சென்றனர்.

arrest
arrest

பின்னர் பத்து நாள்கள் கழித்து என் வீட்டிற்கு வந்த தில் பிரசாத், என்னுடைய காரை எடுத்துச் சென்றார். இன்றுவரை கொடுக்கவில்லை. தொடர்ந்து, கடந்த மே 20ம் தேதி, கிருபானந்த தயாநிதியின் மனைவி மணிமேகலை, என் வீட்டிற்கு வந்து எங்களை மிரட்டியது மட்டுமல்லாமல், `முத்துவேல் பணம் தரமாட்டான்… நீங்கள்தான் தரவேண்டும்’ எனக் கூறி மூன்று நாள்கள் எங்கள் வீட்டில் தங்கிக்கொண்டு, பல வழிகளில் மிரட்டித் துன்புறுத்தினார். பின்னர், தில் பிரசாத் மற்றும் மூவர், போடி பார்க் ஸ்டாப்பில் நின்றுகொண்டு என்னை அழைத்தார்கள். நானும் பயந்துகொண்டே சென்றேன். என்னிடம், எழுதாத பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, பணத்தை தயார் செய்யும்படி மிரட்டினார்கள்.

கொரோனா அச்சம்: துரத்திய காம்பவுண்டு வாசிகள்; காட்டில் தஞ்சமடைந்த தேனி பெண்!

தொடர்ந்து என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள். ஒரு கட்டத்தில், அவர்களிடம் பணம் தர முடியாது எனக் கூறினேன். அதனை அடுத்து, கடந்த ஜூன் 7ம் தேதி காலை என் வீட்டிற்கு வந்த அனைவரும், என்னையும் என் மனைவியையும் மகளையும் கடுமையாகத் தாக்கினார்கள். தொடர்ந்து ஆட்டோவில் ஏற்றினார்கள். அதனைப் பார்த்து பக்கத்துவீட்டுக்காரர்கள் கேட்கவே, அவர்களையும் மிரட்டினார்கள். எங்கள் மூவரையும் ஆட்டோவில் ஏற்றி, தோப்பு ஒன்றில் வைத்து அடித்து சித்ரவதை செய்தனர். என் மனைவி கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் செயினைப் பறித்துக்கொண்டு, பணம் தரவில்லையென்றால் அடித்தே கொன்றுவிடுவோம் என மிரட்டினார்கள். எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்” இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Arrest
Arrest
`30 நாளில் அரசு வேலை; இல்லைன்னா பணம் வாபஸ்' - அதிர்ச்சி கொடுத்த தேனி அரசுப்பள்ளி தலைமையாசியர்

தொடர்ந்து தனிப்படை போலீஸார் விசாரணையில் தேனி அரண்மனைப்புதூரைச் சேர்ந்த சாலமன் ராஜா என்ற கண்ணன் (வயது 36), போடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி (வயது 36), தேனி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 40), தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 42) ஆகிய நால்வரைக் கைது செய்தனர். இது தொடர்பாகப் பேசிய போடி போலீஸார், ``முதல்கட்டமாக நால்வர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். தில் பிரசாத் உட்பட சிலரைத் தேடி வருகிறோம்” என்றனர்.

நண்பனுக்காகப் பொறுப்பேற்றுக்கொண்ட கல்லூரிப் பேராசிரியரைக் குடும்பத்தோடு கடத்தி, அடித்து துன்புறுத்தி, நகை, கார் போன்றவற்றைப் பறித்து கட்டப்பஞ்சாயத்து செய்த சம்பவம், போடி நகர வாசிகளை மட்டுமல்ல, தேனி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

``சினிமாவில் மட்டும் காட்டப்படும் சம்பவங்கள் நேரில் நடக்கிறது. அதுவும், ஓ.பி.எஸ் சொந்த தொகுதியில் நடக்கிறது. மூன்று மாதங்கள் ஒரு பேராசிரியர் குடும்பத்தோடு மிரட்டப்பட்டு பல துன்பங்களை அனுபவித்துள்ளார். இது போலீஸாருக்கோ, ஏன் உளவுப்பிரிவு போலீஸாருக்குக் கூடவா தெரியாமல் போனது?” எனக் கொதிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு